என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car collides"

    • பிரேம்குமார் அவரது மாமாவுக்கு சொந்தமான வேனை எடுத்து கொண்டு சென்று கொண்டு இருந்தார்.
    • ஒரு கார் பிரேம்குமார் ஓட்டி வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    மொடக்குறிச்சி

    கோவை பெரிய பஜார் வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் பிரேம் குமார் (32). இவர் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இவரது உறவினர்கள் மொடக்குறிச்சி அருகே முத்து கவுண்டன் பாளையம் பகுதிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர்.

    அவர்களை அழைத்து வருவதற்காக பிரேம்குமார் அவரது மாமாவுக்கு சொந்தமான வேனை எடுத்து கொண்டு சென்று கொண்டு இருந்தார்.

    தொடர்ந்து அவர் முத்து கவுண்டம்பாளையம் ரிங்ரோடு பகுதியில் வேனில் வந்தார்.

    அங்கு ஒரு வளைவில் திரும்பும் போது அந்த வழியாக பின்னால் வந்த ஒரு கார் பிரேம்குமார் ஓட்டி வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பிரேம்குமார் படுகாயம் அடைந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் பிரேம்குமாரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் காரில் வந்த கார் டிரைவர் ராஜேந்திரன் மற்றும் ராஜேந்திரனின் சகோதரி வளர்மதி ஆகிய 2 பேரும் படுகாயம் அடை ந்தனர்.

    அவர்கள் ஈரோடு மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து மொட க்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.
    • பர்வதம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள 1010 நெசவாளர் காலனியை சேர்ந்தவர் துரைசாமி (67). இவரது மனைவி பர்வதம் (55).

    சம்பவத்தன்று இருவரும் மொபட்டில் தனது பேரன் நலனை ஈங்கூர் அருகே செயல்படும் தனியார் பள்ளியில் விடுவதற்காக சென்னிமலை-பெருந்துறை ரோட்டில் பாலப்பாளையம் பிரிவு அருகே செல்லும் போது ரோட்டினை கடப்பதற்காக மொபட்டை திருப்பி உள்ளார்.

    அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இவர்கள் மொபட் மீது மோதியது.

    இதில் துரைசாமி காயமடைந்தார். அவரது மனைவி பர்வதம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பேரன் நலன் காயமின்றி தப்பினார்.

    இது குறித்து சென்னிமலையினை சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமாரிடம் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் திரும்ப முயன்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட இருவரும் அதிர்ஷ்டவசமாக கார் சக்கரங்களுக்கு அருகே விழுந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி பொன்மணி ( வயது 27). இவரது வீடு அருகே வசிப்பவர் சேகர் மகன் தேவேந்திரன்(28). இருவரும் பணிக்கம்பட்டி அடுத்து உள்ள க.அய்யம்பாளையம் பகுதியில் அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக தேவேந்திரன் மோட்டார்சைக்கிளில், பின்புறம் பொன்மணி அமர்ந்து கொள்ள இருவரும் சின்னியகவுண்டம்பாளையம் நோக்கி வந்தனர். பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில், சின்னிய கவுண்டம்பாளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் திரும்ப முயன்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் அதிர்ஷ்டவசமாக கார் சக்கரங்களுக்கு அருகே விழுந்தனர். காயங்களுடன் தப்பிய அவர்களை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மோட்டார் சைக்கிள் மீது கார் மோதும் கண்காணிப்பு கேமரா விபத்து காட்சிகள் பல்லடம் பகுதியில் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.

    • பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்.
    • இது குறித்து பவானி ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    பவானி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் மேட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் நவீன் (19). 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் பவானியில் இருந்து மேட்டூர் ரோட்டில் நேற்று மாலை நவீன் அவருடைய நண்பர் அருண் என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நவீனை அக்கம் பககத்தினர் மீட்டு ஆம்புலன்சு மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதில் அருண் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பவானி ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×