என் மலர்
நீங்கள் தேடியது "car driver suicide"
- தாய் வசந்தா, மனைவி, மகன் ஆகியோர் அகிலா நகரில் உள்ள ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
- கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.
திருச்சி:
திருச்சி திருவானைக்காவல் நடுகொண்டையம் பேட்டை அகிலா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34), கார் டிரைவர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பி.ஆர்.ஓ.வாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியருக்கு சாமிநாதன் (8) என்ற மகன் இருந்தார்.
இந்தநிலையில் இங்கு வருமானம் போதவில்லை என்பதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேயன் துபாய் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து சென்றார்.
அவரது தாய் வசந்தா, மனைவி, மகன் ஆகியோர் அகிலா நகரில் உள்ள ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். இதற்கிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.
நேற்று காலை அவரது மனைவி வசந்த பிரியா வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். இதற்கிடையே மாலையில் வீட்டை உள் பக்கமாக பூட்டிவிட்டு தாய் வசந்தா, மகன் சாமிநாதன் ஆகியோரை கொன்று விட்டு கார்த்திகேயனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வீட்டு அறையில் போலீசார் சோதனை நடத்திய போது கடிதம் ஒன்று சிக்கியது. அதில், எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. தாய், மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களை தன்னுடன் அழைத்து செல்வதாக கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்போது கடிதத்தின் முழு விவரம் வெளியாகி உள்ளது. அதில் மனைவி நன்றாக படித்து இருக்கிறாள். நல்ல வேலை பார்க்கிறாள். மனைவியை அவளது இஷ்டத்துக்கு வாழ விடுங்கள். எனக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது. எனவே சாக முடிவு செய்துவிட்டேன். தாயும், மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களையும் தன்னுடன் அழைத்து செல்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
கடிதத்தின் சாராம்சத்தை பார்க்கும்போது கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திகேயன் தாயையும், மகனையும் கொன்று விட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திருவானைக்காவல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போரூர்:
சென்னை சாலிகிராமம் ஸ்டேட் பாங்க் காலனி 1-வது தெருவைச் சேர்ந்தவர் அபிமன்யூ. கார் டிரைவர். மனைவி குழந்தையுடன் வசித்து வந்த அபிமன்யூ கடந்த சில நாட்களாக மன நலம் பாதிக்கப்படு அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று தீடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொண்டார். அலறி துடித்த அபிமன்யூவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுவை கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 44). இவரது மனைவி ராஜேஸ்வரி (39).இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
ராஜேந்திரன் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்தது. இதை கண்டிப்பதால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு இதேபோல் தகராறு ஏற்பட்டதால் மனைவியுடன் கோபித்து கொண்டு ராஜேந்திரன் அரும்பார்த்தபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கேயே சில நாட்கள் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதுகுடித்து விட்டு கோவிந்தசாலையில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போதும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அவரை வீட்டுக்குள் விட மறுத்தனர்.
பின்னர் சமாதானம் அடைந்து வீட்டுக்குள் அனுமதித்தனர். அங்கு ஒரு அறையில் அவர் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென அவர் மனைவியின் சேலையால் தூக்கு மாட்டி தொங்கினார்.
சத்தம் கேட்டு உள்ளே சென்ற மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை தூக்கில் இருந்து இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இறந்து விட்டார்.
இதுகுறித்து உருளையன் பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews