என் மலர்
நீங்கள் தேடியது "cat"
- இந்தாண்டு ஜூன் 1 ஆம் தேதி ரோஸி என்ற பூனை தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது.
- 1991ல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தது.
உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஸி (33) என்ற பூனை இன்று உயிரிழந்தது
இந்தாண்டு ஜூன் 1 ஆம் தேதி ரோஸி தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது. 1991ல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இங்கிலாந்தில் உள்ள நார்விச் நகரில் உள்ள அவரது உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்தது.
33 ஆண்டுகள் வாழ்ந்த ரோஸியின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கால்கள் கட்டப்பட்ட பூனையை நாய் ஒன்று கொடூரமாக தாக்கும் வீடியோவை மன்தீப் இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.
- இந்த வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் விலங்குகளை துன்புறுத்தும் விதமாக ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மன்தீப் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
மன்தீப் என்ற நபர் தனது இன்ஸ்டாகிராமில், கால்கள் கட்டப்பட்ட பூனையை நாய்கள் கொடூரமாக தாக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தொடர்பாக யுவி என்ற நபர், விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளையுடன் இணைந்து காவல்துறையில் புகார் அளித்தார்.
இதனையடுத்து மன்தீப் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த நாயை போலீசார் மீட்டனர்.
- சிவலிங்கம் அருகே மாமிசத்துண்டு ஒன்று இருந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
- பாஜக கட்சியினர் இப்பிரச்னையை கையில் எடுத்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தப்பாசபுத்ரா பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது. கடந்த 11ம் தேதி இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் அருகே இறைச்சி துண்டு ஒன்று இருந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சிவலிங்கம் அருகே இறைச்சி துண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி, கோவில் கமிட்டி உறுப்பினர்களுக்கு இதை பற்றி தெரிவித்துள்ளார்.
கோவிலுக்குள் இறைச்சி துண்டு இருந்ததாக பரவிய செய்தியை கேட்டதும் பாஜக கட்சியினர் இப்பிரச்சனையைக் கையில் எடுத்தனர். இதனால் அபபகுதியில் மதரீதியான பிரச்சனை எழுமா என பொதுமக்கள் அஞ்சினர்.
இதனையடுத்து, சிவ லிங்கம் சிலை அருகே மாமிசத்துண்டு எப்படி வந்தது எனக் கண்டறிவதற்காக 4 குழுக்கள் அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கோவில் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, இது ஒரு பூனையின் வேலை எனத் தெரியவந்தது. இறைச்சி துண்டை கோவிலுக்கு உள்ளே பூனை எடுத்துச் சென்றது சிசிடிவி காட்சியின் மூலம் தெரியவந்தது.
உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ?, அதுபோல் உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அதிக ஆர்வம் இருப்பது உண்டு. இந்த ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது. ஜெர்மனியில் உள்ள கடல் வாழ் அருங்காட்சியத்தில் இருந்த அந்த ஆக்டோபஸ் போட்டியின் முடிவுகளை ஆட்டத்துக்கு முன்கூட்டியே துல்லியமாக கணித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தண்ணீர் தொட்டிக்குள் இரண்டு சிறிய ஜாடியில் உணவுகளை போட்டு அவற்றின் மீது அன்றைய போட்டியில் மோதும் அணிகளின் கொடி வைக்கப்பட்டு இருக்கும். நீந்தி வரும் ஆக்டோபஸ் எந்த ஜாடியில் உள்ள உணவை உட்கொள்கிறதோ?, அதன் மீதுள்ள கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கணிக்கப்படும். அதுபோல் ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று அது சுட்டிக்காட்டிய ஆருடமும் அப்படியே பலித்தது.
