என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cathedral"
- கிறிஸ்தவர்கள் மறுமலர்ச்சி ஆண்டாக கொண்டாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
- ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
பூதலூர்:
பூண்டி மாதா பேரா லயத்தில் கும்பகோணம் கிறிஸ்தவ மறை மாவட்டத்தின் 125 -வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு திருப்பலி நிறை வேற்றப்பட்டது.
கும்பகோணம் மறை மாவட்ட கிராமங்களில் இருந்து அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றி அனைவருக்கும் ஆசி வழங்கினார்.
திருப்பலியில் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, பேராலய அதிபர் சாம்சன், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், பூண்டி மாதா பேராலய துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் மற்றும் கும்பகோணம் மறை மாவட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோண மறை மாவட்ட 125-வது ஆண்டு முழுவதும் கிறிஸ்தவர்கள் மறுமலர்ச்சி ஆண்டாக கொண்டாடப்பட உள்ளதாக தெரி விக்கப்பட்டது.
பூண்டி மாதா பேராலயத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
- இந்த ஆண்டு பேராலய விழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- சிலர் கைக்குழந்தையை டிராலியில் வைத்து தள்ளியபடி செல்வதை காண முடிகிறது.
தஞ்சாவூர்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.
மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினந்தோறும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கிறார்கள்.
ஆண்டுதோறும் வேளாங்க ண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் உலகம் முழுவதில் இருந்தும் கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த பத்து நாள் திருவிழாக்களில் மட்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவார்.
இதில் பலர் பாத யாத்திரையாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து விழாவில் பங்கேற்பார்கள்.
இதன்படி இந்த ஆண்டு பேராலய விழா வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த விழாவில் பங்கேற்ப தற்காக கிறிஸ்தவர்கள் பாத யாத்திரையாக வேளாங்கண்ணிக்கு செல்ல தொடங்கி விட்டனர்.
இதன்படி தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கிறிஸ்தவர்களும் பாத யாத்திரையாக தஞ்சை வழியாக செல்ல தொடங்கி உள்ளனர்.
மேலும் தஞ்சை நகரில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பாத யாத்திரையாக சென்று உள்ளனர்.சிலர் சிறிய அளவிலான மாதா தேரை இழுத்தபடி செல்கின்றனர்.
சிலர் கைக்குழந்தையை டிராலியில் வைத்து தள்ளியபடி செல்வதை காண முடிகிறது.
தஞ்சாவூர் கீழவாசல் புனித ஜெபமாலை மாதா கோயில் தெருவில் இருந்து 39 ஆவது ஆண்டாக வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழாவை காண பாதயாத்திரையாக பக்தர்கள் சப்பரத்துடன் சென்றனர்.
இப்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- நாளை காலை ரெயில் புறப்பட்டு மறுநாள் இரவு வேளாங்கண்ணி சென்றடையும்.
- அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12.30 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும்.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு மும்பை, செகந்திரபாத் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இரு மார்க்கமாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி மும்பை பாந்திரா ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.15 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் ( வண்டி எண். 09047) புறப்பட்டு மறுநாள் இரவு 8.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறுமார்க்கமாக வேளாங்க ண்ணியில் இருந்து 29-ம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் ( வண்டி எண்.09048) மறுநாள் மாலை 5.30 மணிக்கு மும்பை வதோதரா ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.
இதேபோல் செகந்திரா பாத்- வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.07125) அடுத்த மாதம் ( செப்டம்பர்) 4-ம் தேதி காலை 8.40 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறு வழிதடத்தில் வேளாங்கண்ணி- செகந்திராபாத் சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.07126) அடுத்த மாதம் 6-ம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12.30 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும்.
இதேபோல் செகந்தி ராபாத்- வேளாங்கண்ணி இடையே மற்றொரு சிறப்பு கட்டண ரெயில் ( வண்டி எண்.07127) செகந்திராபாத்தில் இருந்து அடுத்த மாதம் 8-ம் தேதி காலை 8 .40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறு வழித்தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து ( வண்டி எண்.07128) அடுத்த மாதம் 10-ம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு செகந்திராபாத் சென்ற டையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆடம்பர தேர்பவனியை ஆயர் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.
- இன்று மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் உள்ள புனித அலங்கார அன்னை பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 6-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலியும், சிறிய தேர்பவனியும், பல்வேறு தலைப்புகளில் அருட்தந்தையர்களால் மறையுரையும் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது.முன்னதாக ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
திருப்பலியில் ஆயர் மறையுரை ஆற்றினார்.தொடர்ந்து, புனித அலங்கார அன்னை ஆடம்பர தேர்பவனியை ஆயர் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.
தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேராலயத்தை வந்தடைந்தது.
இன்று காலை ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை அலங்கார அன்னை பேராலய பங்குத்தந்தை பிலோமின்தாஸ், உதவி பங்குத்தந்தை எட்மண்ட் லூயிஸ் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பிரண்ட்ஸ் ஆப் ஜீசஸ் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
- ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி கொடியை ஏற்றி வைத்தார்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் உள்ள தூய அலங்கார அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கும்பகோணம் காமராஜர் சாலை மற்றும் பேராலயத்தை சுற்றி கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
அதனை தொடர்ந்து மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி கொடியை ஏற்றி வைத்தார்.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிலோமின்தாஸ் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- மக்கள் கைகளில் தென்னங்குருத்தோலைகளை ஏந்தியவாறு பேராலயத்தை நோக்கி வந்தனர்.
- பக்தர்கள் வைத்திருந்த குருத்தோலைகளை சிலுவை வடிவில் செய்து வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
பூதலூர்:
பூலோகம் போற்றும் பூண்டி மாதா பேராலயத்தில் புக குருத்தோலை ஞாயிறு பவனி இன்று காலை நடைபெற்றது.
இன்று காலை பூண்டி மாதா மக்கள் மன்றத்திலிருந்து ஏராளமான மக்கள் கைகளில் தென்னங் குருத்தோலைகளை ஏந்தியவாறு ஓசன்னா பாடல்களை பாடிய வண்ணம் பூண்டி மாதா பேராலயத்தை நோக்கி வந்தனர்.
குருத்தோலை பவனியை பேராலய அதிபர் சாம்சன் புனிதம் செய்து தொடங்கி வைத்து பக்தர்களுடன் குருத்தோலைகளுடன் நடந்து வந்தார்.
குருத்தோலை பவனி பேராலயத்திற்குள் வந்ததும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்குத்தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர்.
திருப்பலியில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்கள் வைத்திருந்த குருத்தோலைகளை சிலுவை வடிவில் செய்து தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
- பூண்டி மாதாவின் உருவம் வரையப்பட்ட திருக்கொடியை பேராலய முன்புறத்தில் இருந்து பக்தர்கள் பிடித்து சென்றனர்.
- வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி -கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே அமைதியான சூழலில் அமைந்துள்ளது பூண்டி புதுமை மாதா பேராலயம்.
பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று பக்தர்களால் போற்றி புகழப்படும் இப்பேராலயத்தில் மாதாவின் பிறப்பு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெருவிழா தொடக்கத்தை ஒட்டி ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பூண்டி மாதாவின் உருவம் வரையப்பட்ட திருக்கொடியை பேராலய முன்புறத்தில் இருந்து பக்தர்கள் பிடித்து சென்றனர்.
பூண்டி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்ட சிறிய தேரை பக்தர்கள் சுமந்து சென்றனர்.
திருக்கொடி பவனியை பேராலய அதிபர் சாம்சன் புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.
பூண்டி அன்னையின் புகழ் பாடும் பாடல்களை பாடியவண்ணம், மரியே வாழ்க என்ற வாழ்த்து முழக்கங்களுடன் கொடி ஊர்வலம் கொடி மரத்தை அடைந்தது.
அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் புனிதம் செய்து ஏற்றி வைத்தார்.
கொடியேற்றியபோது அதிர்வேட்டுகள் முழங்கின.
பக்தர்கள் மரியே வாழ்க என்று வாழ்த்து ஒலி முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து பேராலயத்தின் எதிரில் உள்ள அரங்கில் சிறப்பு திருப்பலி மரியாள்-புதுமைகளின் அன்னை என்ற பொருளில் கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது.
பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், மறைவட்ட முதன்மைகுரு இன்னசென்ட், உதவி பங்கு தந்தையர் அன்புராஜ், தாமஸ், ஆன்மீக தந்தையர் அருளானந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் மாலை கொடி ஊர்வலம், சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.
மாதாவின் பிறப்பு நாளாக கருதப்படும் செப்டம்பர் 8ம் தேதி மாலை சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.
தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.
தேர் பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய பூண்டி அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபடுவர். 9ம்தேதி காலை மரியாள் -தாய்மையின் தலைப்பேறு என்ற தலைப்பில் திருவிழா திருப்பலியை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் நிறைவேற்றுவதுடன் பெருவிழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியானமைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்