என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "caught fire."

    • மதுரையில் திடீரென்று வேன் தீப்பற்றி எரிந்தது.
    • அதில் இருந்து திடீரென குபுகுபுவன கரும்புகை வெளிவந்தது.

    மதுரை 

    மதுரை மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் நிஷாந்த். இவர் தாயார் ஜெயாவுடன் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ஆம்னி வேனில் புறப்பட்டு சென்றார்.

    அவர்கள் நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். 3 மாவடி அய்யர் பங்களா அருகே, வேன் வந்தபோது அதில் இருந்து திடீரென குபுகுபுவன கரும்புகை வெளிவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷாந்த், தாய் ஜெயாவுடன் வேனில் இருந்து கீழே இறங்கி விட்டார். இதைத்தொடர்ந்து வேன் தீப்பற்றி எரிந்தது.

    இதுபற்றி நிஷாந்த் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் வேன் முற்றிலும் எரிந்து சேதமாகிவிட்டது.

    இது தொடர்பாக கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமையல் செய்வதற்காக அனிதா ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது தீ பிடித்தது.
    • இதுகுறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சென்னிமலை:

    புதுச்சேரியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் அனிதா (31).இவர்கள் 2 பேரும் கடந்த 3 வருடங்க ளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட னர்.

    அனிதாவுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமானது. முதல் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    அவர் மூலம் அனிதாவுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ஜெய க்குமார் மூலம் அனிதாவுக்கு 1½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    ஜெயக்குமாரும், அனிதாவும் பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கு தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இதையடுத்து கடந்த 15 நாட்களாக சென்னிமலை அடிவார பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி இரவு அனிதாவின் மகள் பிறந்த நாள் விழாவை கொண்டாடிவிட்டு அனைவரும் தூங்கி விட்டனர். இதையடுத்து அதிகாலையில் சமையல் செய்வதற்காக அனிதா ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அனிதாவின் மீது தீ பிடித்தது. இதை தொடர்ந்து முகம், சேலை யில் தீ பிடித்து எரிந்தது. இதனால் அனிதா அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த அனிதாவின் கணவர் ஜெயக்குமார் ஓடி வந்து அனிதாவின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அனிதாவை அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அனிதா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வீட்டின் மேல் பகுதியில் உள்ள மின்சார வயரில் இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் ஓலை மீது தீப்பொறிபட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள துடுப்பதி, வீராச்சி பாளை யம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கி விவ சாயம் செய்து வருகிறார். இவரது வீடு தென்ன ங்கீற்று ஓலைகளால் வேயப்பட்ட குடிசை வீடா கும்.

    இந்த நிலையில் காலை இவரது மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேல் பகுதியில் உள்ள மின்சார வயரில் இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் ஓலை மீது தீப்பொறிபட்டது.

    இதனால் ஓலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடன டியாக வீட்டில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து தப்பினார்.

    இதையடுத்து அக்கம் பக்கம் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. பின்னர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    ஆனால் வீட்டில் இருந்த ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்ததாக அவர்கள் கூறினர்.

    • திடீரென வேனில் இருந்து கரும்பு புகை ஏற்பட்டு தீ பற்றியது.
    • தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டனர்.

    சிவகிரி, ஆக. 25-

    சிவகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பட்டேல் தெருவை சேர்ந்தவர் மெய்யப்பன் (வயது 48).

    இவர் தனது மாருதி வேனில் மாலை 4 மணிக்கு சிவகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் தன் மகன் ஹரிஹரன் (வயது 16). என்பவரை அழைத்து வர பள்ளி நுழைவு வாயில் முன் தனது மாருதி வேனை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்.

    பின்னர் பள்ளி முடிந்து வந்த தன் மகனை அழைத்து கொண்டு மீண்டும் மாருதி வேனில் ஏறி வேனை இயக்க முயன்றார். அப்போது திடீரென வேனில் இருந்து கரும்பு புகை ஏற்பட்டு தீ பற்றியது.

    உடனே சுதாரித்து கொண்ட மெய்யப்பன் தன் மகனை வேகமாக கீழே இறக்கி விட்டார். மேலும் பள்ளி குழந்தைகள் பள்ளியில் இருந்து வெளிவராமல் இருக்க ஓடி சென்று தடுத்து நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அப்போது அவ்வழியே வந்த சமூக ஆர்வலர் பாப்புலர்பழனிச்சாமி என்பவரின் தண்ணீர் வாகனத்தில் இருந்த தண்ணீரை கொண்டு மாருதி வேனில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×