என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "celebrations"
- மகிழ்ச்சியான தருணங்களும், என்றும் மறக்கமுடியாத நினைவுகளை ரசிகர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் நேற்றைய தினம் வழங்கியுள்ளது.
- ரோகித் சர்மாவுடன் அணி வீரர்கள் அனைவரும் நடனமாடினர்.
டி 20 உலகக்கோப்பை கொண்டாட்டங்கள் நேற்று மும்பையில் களைகட்டியது. வான்கடே மைதானத்தில் வைத்து இந்திய வீரர்களும் ரசிகர்களும் இந்த வெற்றிடயை கொண்டாடித் தீர்த்தனர். மகிழ்ச்சியும் உணர்வுபூர்வமான தருணங்களும் மைதானத்தை நிறைத்தது.
மகிழ்ச்சியான தருணங்களையும் என்றும் மறக்கமுடியாத நினைவுகளை ரசிகர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் நேற்றைய தினம் வழங்கியுள்ளது. டிஜே பாடல்கள் மைதானத்தை அதிரவைத்த நிலையில் இந்திய வீரர்கள் அவற்றுக்கு வெற்றிக் களியாட்டம் போட்டனர்.
மைதானத்தில் நடந்த ரெயின் டான்ஸ் பார்ட்டியில் ஷாருக் கான் படத்தின் பிரபல பாடலான சக் தே இந்தியா பாடல் பின்னணியில் ஒலிக்க அதற்கு ரோகித் சர்மாவுடன் அணி வீரர்கள் அனைவரும் நடனமாடினர். ரசிகர்களும் அவர்களின் உற்சாக மனநிலை தொற்றிகொள்ளவே வான்கடே மைத்தனமே மகிழ்ச்சியில் திளைத்தது. பாடல்களுக்கு இந்திய வீரர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
- கோவில்கள், தேவாலயங்களில் நள்ளிரவில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு பிரார்த்தனை நடத்தினர்
- ஆங்கில புத்தாண்டை–யொட்டி இரவு ஓட்டல்களில் விருந்து மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருச்சி:
2023 ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்சியில் இன்று கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தேவாலயங்களில் நேற்றிரவு சிறப்பு பிரார்த்தனை நடை–பெற்றது. இதில் பொது–மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண் டாட்டத்திற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகளில் நடன, கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.இந்தநிலையில் 2022-ம் ஆண்டு முடிவடைந்து நேற்றிரவு 12 மணிக்கு 2023-ம் ஆண்டு பிறந்தது. ஆனால் இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாததால் புத்தாண்டு கொண்டாட்டம் களை–கட்டியது. இதையடுத்து பொது–மக்கள் தங்களது நண்பர்கள், உறவினர்க–ளிடம் வாழ்த்துக்களை பரி–மாறி கொண்டனர்.திருச்சி, அரியலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்க–ளில் ஆங்கில புத்தாண்டை–யொட்டி இரவு ஓட்டல்களில் விருந்து மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதேபோல் கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற வழிபாடுகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் அதிக அளவிலானோர் கலந்துகொண்டனர். இளை–ஞர்கள் இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் இருசக்கர வாகனங்களில் சாலைகளில் உலா வந்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.புத்தாண்டையொட்டி திருச்சி உள்பட 5 மாவட் டங்களிலும் நேற்றிரவு பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் பலர் விதவிதமான கேக்குகளை வாங்கி சென்றனர். இதே–போல் 10 மணி வரை சைவ, அசைவ உணவு ஓட்டல் களில் பலர் தங்களது நண் பர்களுடன் வந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர். குறிப்பாக அசைவ உணவு ஓட்டல்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.2023 ஆங்கில புத்தாண் டையொட்டி திருச்சி–யில் ஸ்ரீரங்கம் ரெங்க–நாதர் கோவில், சமய–புரம் மாரியம்மன் கோவில், உறையூர் வெக்காளி–யம் மன் கோவில், திருவா–னைக்காவல் அகிலாண் டேஸ்வரி, ஜம்பு–கேஸ்வரர் கோவில், திருச்சி மலைக் கோட்டை தாயு–மான சுவாமி கோவில், உச்சிப் பிள்ளையார் கோவில், வயலூர் முருகன் கோவில், கல்லுக்குழி ஆஞ்சநே–யர் கோவில் திருச்சி கண் டோன்மென்ட் அய்யப்பன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்க–ளிலும் இன்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடை–பெற்றது.உள்ளூர் பக்தர்கள் மட்டு மின்றி சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள், மேல் மருவத்தூர் ஆதிபாராசக்தி கோவிலுக்கு செல்லும் செவ்வாடை பக்தர்கள், பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் என திரளானோர் குவிந்தனர்.மேலும் கடுமையான குளிரையும் பொருட்படுத் தாமல் அனைத்து கோவில் களிலும் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.இதேபோல் மேலப்புதூர் தூய மரியன்னை ஆல–யம், பொன்மலை புனித சூசையப் பர் ஆலயம், புத்தூர் பாத்திமா ஆலயம், ஏ.ஜி.சர்ச், புனித சந்தியா–கப்பர் ஆல யம், புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ தேவா–லயங்களிலும் நேற்றி–ரவு இரவு முதல் கிறிஸ்த–வர் கள் பிரார்த்தனையில் ஈடு–பட்டனர்.புத்தாண்டு கொண்டாடத் தின் போது எந்தவித அசம் பாவித சம்பவங்களும் நடை பெறாமல் இருப்பதற்காக திருச்சி போலீசார் பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். திருச்சியில் ஒருசில இடங்களில் விதி–களை மீறி இருசக்கர வாக–னங்களில் ரேஸ் சென்ற இளைஞர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்த–னர்.
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள், சொகுசு ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் ரூரல் டி.எஸ்.பி தையல்நாயகி ஆய்வு செய்தார்.
- ஹோட்டல் உரிமையாளர்கள், தங்கும் விடுதி அதிபர்கள், மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்துவது குறித்து தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க புகார் பெட்டி திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
ஏற்காடு:
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள், சொகுசு ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் ரூரல் டி.எஸ்.பி தையல்நாயகி ஆய்வு செய்தார்.
அப்போது, ஹோட்டல் உரிமையாளர்கள், தங்கும் விடுதி அதிபர்கள், மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்துவது குறித்து தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க புகார் பெட்டி திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது:-
மது அருந்திவிட்டு வரும் சுற்றுலா பயணிகளை விடுதிகளில் தங்க வைக்கக் கூடாது. கொண்டாட்டங்களில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். விடுதி நிர்வாகம் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி கண்காணிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அநாகரிகமாக நடந்து கொள்ளாதவாறு விடுதி நிர்வாகம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வேறு மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், கண்டிப்பாக 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
நீச்சல் குளம் அமைந்திருக்கும் விடுதிகளில் நீச்சல் குளத்தினை மூடி வைத்திருக்க வேண்டும். இரவு 1 1/2 மணி நேரம் மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற வேண்டும். அந்த நேரத்தில் பட்டாசு வெடிப்பதோ, அதிக சத்தத்துடன் டி.ஜே மியூசிக் வைப்பதோ, இருசக்கர வாகனத்தில் வேகமாக ஓட்டி செல்வதோ இருக்கக் கூடாது. இது போன்ற அறிவுறுத்தல்களை விடுதி நிர்வாகம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கேக், நட்சத்திரம் விற்பனை அமோகம்.
- கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்து உள்ளது.
கோவை :
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்து மசை வருகிற 25-ந் தேதி கொண்டாட தயாராகி வருகின்றனர்.
அன்பை வெளிப்படுத் தும் விதமாக ஏழைகளுக்கு உதவி செய்வதே இப் பண்டிகையின் நோக்க மாகும். 2 வருடத்திற்கு பிறகு இந்த ஆண்டு கிறிஸ்து மஸ் கொண்டாட்டம் உற்சாகம் அடைந்து உள்ளது.
டிசம்பர் முதல் வாரத்தி லேயே வீடுகளில் நட்சத்தி ரங்கள், குடில்கள், கிறிஸ்து மஸ் மரம் ைவக்க தொடங்கி னார்கள். கிறிஸ்துவ ஆல யங்களிலும் நட்சத்தி ரங்கள், குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.கிறிஸ்துமஸ் தாத்தா வுடன் பாடகர் குழுவினர் வீடு, வீடாக சென்று குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள், இனிப்பு கள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்னர். ஒவ்வொரு திருச்சபையிலும் நலிந்தோருக்கு உதவிகள், புத்தாைடகள் வழங்கப் படுகின்றன.
பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்து உள்ளது. ஆலயங் களை அழுகுபடுத்த வித விதமான அலங்கார பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
கோவை ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நட்சத்திரங்கள், வண்ண மின் விளக்குள், குடில்கள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
கிறிஸ்தவ தேவால யங்கள், திருச்சபைகளில் இப்போதே அலங்காரப் பணிகள் தொடங்கி விட்டன. ஆலயங்கள் முழுவதும் நட்சத்திரங்கள், மின் விளக்குகள் மூலம் அழகுப் படுத்தப்பட்டுள்ளன. குழந்தை இயேசு பிறப்பை சித்தரிக்கும் மாட்டுத் தொழுவம் அடங்கிய குடில்கள் கிறிஸ்தவ ஆலய ங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் பார்த்து வணங்கி செல்கின்றனர்.
மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் கேக் விற்பனையும் அதிகரித்து உள்ளது. பிரபல கேக் நிறுவனங்களில் பிளம் கேக் உள்ளிட்ட விதவிதமாக கேக்குகளை ஆர்டர் செய்துள்ளனர்.
ஆலயங்களில் மக்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை யன்று கேக் வழங்குவதற்காக மொத்தமாக ஆர்டர் செய்து வருகின்றனர். இதனால் தற்போது கேக் கடைகளில் கூட்டம் நிரம்பி உள்ளது.
புத்தாடைகள் வாங்கு வதற்கு ஜவுளி கடைகளுக்கும் கூட்டம், கூட்டமாக மக்கள் சென்று வருகின்றனர்.
மேலும் நட்சத்திர ஓட்டல் கள், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், காப்பகங்கள் போன்றவற்றிலும் கிறிஸ்து மஸ் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. ஆதரவற்ற மையங்களில் உள்ள முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் ஆகியோருக்கு பல்வேறு கிறிஸ்துமஸ் அமைப்புகள் புத்தாடைகள், கேக் வழங்கி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
கோவையில் உள்ள நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ ஆலயங்கள், திருச்சபைகளில் மட்டுமின்றி வீடுகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகம் அடைந்துள்ளது.
- கடலாடி, சாயல்குடி பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
- ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.
சாயல்குடி
கடலாடி மற்றும் சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு முன்னாள் தலைவர் முனியசாமி பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா துணை சேர்மன் ஆத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் குமரையா, ஜெயச்சந்திரன், ராஜேந்திரன் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்ஒன்றிய மேலாளர் பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் பிச்சை, செய்யது ராவியா, சேதுபாண்டி, குஞ்சரம் முருகன், ராமலட்சுமி ,அதிமுக கடலாடிஒன்றிய விவசாய அணி தலைவர் சண்முக போஸ் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர் சாயல்குடி பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் சேகர் தலைமை வகித்தார் துணை சேர்மன்மணிமேகலை பாக்கியராஜ் இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சாயல்குடி பேரூராட்சிதலைவர் மாரியப்பன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் சாயல்குடி காவல் நிலையத்தில் எஸ்ஐ சல்மோன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் கடுகு சந்தை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் காளிமுத்து தேசிய கொடி ஏற்றினார் எஸ். வாகைக் குளம் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி வடமலை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்கண்டிலான் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் மணிமேகலை முத்துராமலிங்கம் தேசிய கொடி ஏற்றினார் காணிக்கூர் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் தென்னரசி செல்லபாண்டியன், ஏ. புனவாசல் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் இதம் பாடல்ஊராட்சியில் தலைவர் மங்களசாமி மேலச் செலவனூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மகர ஜோதி கோபாலகிருஷ்ணன் கொத்தங்குளம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கணேசன் கடலாடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ராஜபாணிக்கம் லிங்கம் சிக்கல் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் பரக்கத் ஆயிஷா சைபுதீன் மேலச்சிறுபோது ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சம்சாத் பேகம் முகம்மது ரபிக்,ஓரிவயல் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் மலர்மதி திருப்பதி வேப்பங்குளம் ஊராட்சி மில் ஊராட்சி தலைவர் முருகன் பிள்ளையார் குளம் வளர்ச்சி ஊராட்சி தலைவர் வீரபாண்டியன் செஞ்சடைநாதபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் லிங்கராஜ் எஸ் தரைக்குடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் முனியசாமி கன்னிராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் செவல்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சொரிமுத்து நரிப்பையூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் நாராயணன் எஸ். கிரந்தை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் பீ.கீரந்தை ஊராட்சியில் ஊராட்சித் தலைவர்ஆனந்தம்மாள் அற்புதராஜ் கீழச்செல்வனூர் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் முகம்மது இக்பால் வாலிநோக்கம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பீர் முகம்மது, மேலக் கிடாரம்ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கவிதா அய்யனார் பெரியகுளம் ஊராட்சி ஊராட்சி தலைவர் முத்துமாரி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் ரவீந்திர நாதன் மாரியூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கன்னியம்மாள் சண்முகவேல் ஒப்பிலான் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் அப்துல் ஹக்கீம் கீழக்கிடாரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மீனாள்தங்கையா ஏனாதி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பாரதிராஜா பொதிகுளம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் லட்சுமி திருவாப்பு ஒருவானேந்தல் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சீதா நாகராஜன் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
4-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘அமைதிக்கான யோகா’ ஆகும். இதையொட்டி, நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மாநில அரசுகள் இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
வெளிநாடுகளில், இந்திய தூதரகங்கள் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சுரிநாம் நாட்டில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள பரமாரிபோ நகரில் அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்கிறார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மும்பையில் யோகா செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் வன ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 55 ஆயிரம் பேருடன் யோகா பயிற்சியில் ஈடுபடுகிறார். இதையொட்டி, அங்கு கமாண்டோக்கள் மற்றும் துணை ராணுவப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், லக்னோவிலும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பெல்ஜியம் நாட்டு நாடாளுமன்ற வளாகத்திலும் யோகா பயிற்சி செய்கிறார்கள். இதுபோல், ஒவ்வொரு மத்திய மந்திரியும் ஒவ்வொரு நகரங்களில் பங்கேற்கிறார்கள்.
21 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனி சிகரத்தில் சுமார் 200 ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்கிறார்கள். அதன் அடிவார முகாமில், சத்குரு ஜக்கி வாசுதேவ் ராணுவ வீரர்களிடையே பேசுகிறார்.
தலைநகர் டெல்லியில் 8 இடங்களில் யோகா பயிற்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சி, ராஜபாதையில் நடைபெறுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரம்மகுமாரிகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில், பெண்கள், துணை ராணுவ படையினர் உள்பட சுமார் 50 ஆயிரம்பேர் பங்கேற்கிறார்கள்.
பதஞ்சலி யோகா சமிதி சார்பில் துவாரகாவிலும், வாழும் கலை மையம் சார்பில் ரோகிணி பகுதியிலும் யோகா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
யோகா தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
யோகா என்பது நமது முனிவர்கள், மனித குலத்துக்கு அளித்த விலைமதிப்பில்லாத பரிசு. அது, உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் உடற்பயிற்சிகளின் தொகுப்பு மட்டுமல்ல, நமது சுகாதார உத்தரவாதத்துக்கான பாஸ்போர்ட் ஆகும். மனதை ஒருமுகப்படுத்தி, மனவலிமை அளிக்கிறது. எனவே, உலக மக்கள் யோகாவை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Yoga #InernationalYogaDay
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்