என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "centers"

    • என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். போன்ற படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 110 உதவி மையங்களில் நேற்று தொடங்கியது.
    • அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 2 -வது நாளான இன்று பி.இ.படிப்புக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் குவிந்தனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை, தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். போன்ற படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 110 உதவி மையங்களில் நேற்று தொடங்கியது.

    சேலம் மாவட்டத்தில் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாக முதலாம் நுழைவுவாயில் பகுதியில் உள்ள நூலக கட்டிட வளாகத்தில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை ெதாடர்ந்து நேற்று முதல் நாளில் இங்கு ஏராளமான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். இங்கு அதிவேக இணையசேவையுடன் 50 கணினிகள் தயார் நிலையில் உள்ளன. ஒரே நேரத்தில் 50 மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

    இதனால் 2-வது நாளான இன்று சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகள் பலர் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க தங்களது பெற்றோருடன் உதவி மையத்திற்கு வந்தனர்.

    விண்ணப்பம் பதிவு செய்ய மாணவர்கள் 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், எமிஸ் எண் விபரங்களை கொண்டு வரவேண்டும். பொது பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் இன்று 3,194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
    • இன்று மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 4,260 ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர்.இதற்காக 67 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மக்கள் நலனை முதன்மையாக கொண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மட்டும் 2-ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி க்கொண்டே முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 3,194 மையங்களில் காலை 7 மணிக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    இதுபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஈரோடு பஸ் நிலையத்தில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.

    குறிப்பாக 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளா தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். மாலை 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    இன்று மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 4,260 ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர்.இதற்காக 67 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ×