search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chadwick-Chirag pair"

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் பி.வி.சிந்து, லக்‌ஷயா சென் உள்ளிட்டோர் இன்று களமிறங்குகின்றனர்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் 'நம்பர் ஒன்' ஜோடியான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, உலக தரவரிசையில் 34-வது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் டேனியல் லண்ட்கார்ட்- மேட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியுடன் மோதியது.

    இதில் சாத்விக்-சிராக் ஜோடி 20-22, 18-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    இரண்டாவது நாளான இன்று இந்தியா சார்பில் பி.வி.சிந்து, பிரனாய், லக்ஷயா சென், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள்.

    • இந்தியா ஓபன் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.
    • இதில் மலேசியா ஜோடியை வென்று இந்திய ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    புதுடெல்லி:

    இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தலைநகர் டெல்லியில் நடந்துவருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோக் வூய் யிக் ஜோடியுடன் மோதியது.

    இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற நேர்செட்டில் மலேசிய ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    • உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக், சிராக் ஜோடி வெண்கலம் வென்றது.
    • உலக பேட்மிண்டன் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தது.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ யூ யிக் ஜோடியைச் சந்தித்தது.

    இந்த ஆட்டத்தில் 22-20 என முதல் செட்டில் முன்னிலை பெற்ற சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி அடுத்த இரண்டு செட்களில் 18 - 21,16 - 21 என்ற புள்ளிக்கணக்கில் போராடி தோல்வியுற்றனர். இதன்மூலம் அவர்களுக்கு வெண்கலம் கிடைத்தது. இந்த வெண்கலப் பதக்கத்தின் மூலம் உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தனர்.

    ×