search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandramohan Krishanath"

    • ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் 3-வது ஆட்டம் கொழும்பில் நடக்கிறது.
    • இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

    சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் நாடுகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    சூப்பர் 4 சுற்றின் 3-வது ஆட்டம் கொழும்பில் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகும் விதமாக கொழும்புவில் இந்திய அணி வீரர்கள் பில்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

    இந்நிலையில், இலங்கை வலைப்பயிற்சி பந்துவீச்சாளர் சந்திரமோகன் கிரிஷாநாத், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு வெள்ளியிலான பேட் ஒன்றை பரிசாக அளித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். அவரது ஒவ்வொரு சதத்தின் விவரங்களையும் இந்த வெள்ளி பேட்டில் பொறித்துள்ளேன் என தெரிவித்தார்.

    ×