என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chargesheet"
- பெங்களூரு என்ஐஏ நீதிமன்றத்தில் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
- ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கான சதி வெளிநாட்டில் இருந்து தீட்டப்பட்டுள்ளதாக தகவல்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, பெங்களூரு என்ஐஏ நீதிமன்றத்தில் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
குற்றப்பத்திரிகையில், மாஸ் முனீர், அப்துல் மதீன் தாஹா, முசாவிர், முஸாமில் ஷெரீப், சோயிப் மிர்சா ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கான சதி வெளிநாட்டில் இருந்து தீட்டப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குண்டுவெடிப்பை நடத்தியவர் கர்னல் என்ற குறியீட்டு பெயரில் வெளிநாட்டில் இருந்து சதித்திட்டத்தை தீட்டியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
- நாளைக்குள் அவருக்கு டி.வி. வழங்கப்படும் என்று சிறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சொகுசு வசதி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
பெங்களூரு:
ரேணுகா சாமி கொலை வழக்கு தொடர்பாக நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு முதலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சொகுசு வசதி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பவித்ரா கவுடா முதல் குற்றவாளியாகவும், நடிகர் தர்ஷன் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகர் தர்ஷன் தனது அறைக்கு டி.வி. கேட்டு கோரிக்கை விடுத்து இருந்தார். தனது வழக்கு தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும், வெளி உலகில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்தும் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் டி.வி. கேட்பதாக தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து சிறை வழிகாட்டு நடைமுறைகளின் அடிப்படையில் அவருக்கு டி.வி. வழங்க சிறை துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே நாளைக்குள் அவருக்கு டி.வி. வழங்கப்படும் என்று சிறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சித்திரதுர்காவை சேர்ந்த தர்சனின் ரசிகர் ரேணுகாசாமி பவித்திரா கௌடாவுக்கு தகாத முறையில் மெசேஜ் செய்து வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- ரேணுகாசமியை சித்திரதுர்காவில் உள்ள தனது ரசிகர் மன்றத் தலைவர் ராகவேந்திரா மூலம் பெங்களூருக்கு அழைத்து வரச் செய்துள்ளார் தர்ஷன்
கன்னடத்தில் பிரபல நடிகராகத் திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா கவுடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.
போலீசார் விசாரணையில் தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் 17 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து வெறு சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. நடிகர் தர்சனும் அவரது தோழி ரேணுகா கௌடாவும் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர் என்றும் சித்திரதுர்காவை சேர்ந்த தர்சனின் ரசிகர் ரேணுகாசாமி பவித்திரா கௌடாவுக்கு தகாத முறையில் மெசேஜ் செய்து வந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாதம் 10,000 ரூபாய் தருவதாகவும் தன்னுடன்லிவ் இன் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்க வரும்படியும் பவித்ரா கௌடாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ரேணுகாச்சாமி மெசேஜ்களை அனுப்பியுள்ளது அவர்களின் செல்போன்களை ஆராய்ந்ததன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பவித்திரா கௌடாவுக்கு தொடர்ந்து ஆபாசப் படங்களை அனுப்பி உடலுறவுக்கு ரேணுகாச்சாமி வற்புறுத்தி வந்ததே இந்த கொலைக்கு மூல காரணம் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேணுகாசமியை சித்திராதுர்காவில் உள்ள தனது ரசிகர் மன்றத் தலைவர் ராகவேந்திரா மூலம் பெங்களூருக்கு அழைத்து வரச் செய்து தர்ஷன் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ரேணுகா சாமியின் உடல் மொத்தம் 39 இடங்களில் காயங்கள் இருந்துள்ளது.
ரேணுகா சாமியின் நெஞ்சு எலும்புகள் உடைக்கப்பட்டு ஆணுறுப்பு மின்சாரம் பாய்ச்சி மிதித்து சிதைக்கப்பட்டுள்ளது. ரேணுகா சாமியின் ரத்தத் துளிகள் பவித்ரா கவுடாவின் மற்றும் தர்ஷனின் காலனிகளில் கிடைத்துள்ளதாக குற்றபத்திர்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தர்ஷன் அடிக்கப்பட்டுள்ள புதிய சிறையில் அவரது கோரிக்கையின்பேரில் 32 இன்ச் டிவி ஆமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெளியுலகில் நடப்பதை தெரிந்து கொள்வதற்காக தர்ஷன் சிறை அதிகரிகளிடம் டி வி கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
- ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
- கெஜ்ரிவாலின் ஜாமீன் மீதான விசாரணை இன்று டெல்லி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில் டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால் தான் என சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே, கெஜ்ரிவாலின் ஜாமீன் மீதான விசாரணை இன்று டெல்லி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 12-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் அளித்தது. சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கினாலும், இன்னொரு வழக்கில் அவரை சி.பி.ஐ., கைது செய்தது. இதனால் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.
- யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4-ம்தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை போலீசார் கைது செய்தனர்.
- ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர், மதுரையில் உள்ள போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
தேனி:
பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4-ம்தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர், மதுரையில் உள்ள போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில், சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கில் 280 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று தாக்கல் செய்தனர். ஆன்லைன் மூலம் மதுரை சிறப்பு கோர்ட்டில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
- புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்.
புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதத்தில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது19), விவேகானந்தன்(59) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியன் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிக்கையை முத்தியால்பேட்டை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
குற்றப்பத்திரிகையை கிழக்கு கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா, ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தாக்கல் செய்து வருகின்றனர்.
- விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், குவாரிகள் உள்ளிட்ட 56 இடங்களில நடத்தப்பட்ட சோதனையில் பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- 10 ஆயிரம் பக்கங்களை கொண்ட 800 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுக்கோட்டை:
அ.தி.மு.க.வைச் சேர்ந்த தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், குவாரிகள் உள்ளிட்ட 56 இடங்களில நடத்தப்பட்ட சோதனையில் பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்த கட்டமாக நேற்று புதுக்கோட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.
இதில் 10 ஆயிரம் பக்கங்களை கொண்ட 800 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த குற்றப்பத்திரிகையை நீதிபதி முழுமையாக படித்து முடித்த பின்னர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
- அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை நடந்தது.
- சோதனையில் விஜயபாஸ்கர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 18.10.2021 அன்று புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். 56 இடங்களில் குறிப்பாக டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.
அவர் அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.
இதில் அவர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.23 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம், 136 ஹார்டு டிஸ்க்குகள், கனரக வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்த கட்டமாக இன்று புதுக்கோட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.
- கே.பி.அன்பழகன் மீது 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
- கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்த காலங்களில் ரூ.45 கோடி வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் மீது இன்று குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், தருமபுரி மாவட்ட செயலாளரும், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் இருந்தார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டபோது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் கடந்த 19-1-2022 தேதி அன்று வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 20-1-2022 தேதி அன்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழனுக்கு சொந்தமான தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த கெரேகோடஅள்ளியில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 53 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடம், சென்னையில் 3 இடங்கள், தெலுங்கானா மாநிலத்தில் ஒரு இடம் என மொத்தம் 58 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.2 கோடியே 87 லட்சத்து, 98 ஆயிரத்து 650 ரொக்கம் மற்றும் தங்க நகைகள் 6.637 கிலோ கிராம், சுமார் 13.85 கிலோ கிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து, 650 ரூபாய், வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், கே.பி. அன்பழகன் தனது குடும்பத்தினர் பெயர்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும், சொத்துக்குவிப்பு தொடர்பாக கே.பி. அன்பழகனின் மனைவி, 2 மகன்கள், மருமகள் உள்ளிட்டோர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தாக்கல் செய்தனர். அதில் கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்த காலங்களில் ரூ.45 கோடி வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று பினாமி பெயரில் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மகள் வைஷ்னவி, மருமகள்கள், உறவினர்கள் உள்பட 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்த வழக்கில் 1262 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- கைது செய்வதை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி ஜெய்சுக் பட்டேல் மனு தாக்கல் செய்துள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 135 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் 1262 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தொங்கு பாலத்தை பழுதுபார்த்து புதுப்பித்து, பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குர் ஜெய்சுக் பட்டேல் பெயர் பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தவிர மேலும் 9 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாலம் இடிந்து விழுந்த அக்டோபர் மாதம் 30ம் தேதியில் இருந்து ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய்சுக் படேலை காணவில்லை. அவரை கைது செய்ய கடந்த வாரம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கைது செய்வதை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அடுத்த வாரம் அவரது மனு விசாரணைக்கு வர உள்ளது.
அவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி அசோக் யாதவ் கூறி உள்ளார்.
இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்கு குஜராத் அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இந்த குழு, ஓரேவா குழுமத்தின் பல குறைபாடுகளை மேற்கோள் காட்டியது. தரமற்ற பராமரிப்பு, பாலத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தத் தவறியது மற்றும் டிக்கெட்டுகளை அதிக அளவில் விற்பனை செய்தாக குற்றம்சாட்டியது குறிப்படத்தக்கது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ. இவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயம் குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி தன்னை பிஷப் பிராங்கோ மிரட்டி கற்பழித்து விட்டதாக பரபரப்பு புகார் கூறினார்.
மேலும் பிராங்கோவை கைது செய்ய கோரி அந்த மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரிகளும் போராட்டத்தில் குதித்தனர். இதைத்தொடர்ந்து பிஷப் பிராங்கோ கடந்த அக்டோபர் மாதம் 24-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
24 நாள் சிறைவாசத்திற்கு பிறகு பிராங்கோ தற்போது ஜாமீனில் வெளிவந்து உள்ளார். ஆனாலும் அவர் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில் போலீசார் தாமதம் செய்வதாக கூறி மீண்டும் கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பிஷப் பிராங்கோ மீது பாலா முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1400 பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 83 சாட்சியங்களும் இணைக்கப்பட்டு உள்ளது.
இயற்கைக்கு மாறான உறவு, சிறை வைத்து மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் பிராங்கோ மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பிராங்கோவுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. #KeralaNun #FrancoMulakkal
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்