என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "chennai chepauk stadium"
- இந்திய அணி சமீபத்தில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் விளையாடியது.
- இந்த டெஸ்ட் போட்டிகள் புனே, மும்பை, கான்பூர், சென்னை, பெங்களூரு ஆகிய மைதாங்களில் நடைபெற்றது.
இந்திய அணி சமீபத்தில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த 2 டெஸ்ட் தொடர்களும் இந்தியாவில் நடைபெற்றது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் கீரின் பார்க் கான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. அதேபோல நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே, வான்கடே மைதானம், மும்பை, எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு ஆகிய மைதாங்களில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த 5 மைதானங்களில் எந்த மைதானம் சிறந்தது என்ற மதிப்பீட்டை ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சிறந்த பிட்ச் மற்றும் சிறந்த அவுட் பீல்ட் மதிப்பீட்டை ஐ.சி.சி வழங்கியுள்ளது.
சின்னசாமி, புனே, வான்கடே மைதானங்களுக்கு திருப்திகரமானது எனவும், கான்பூர் மைதானத்திற்கு திருப்தியே இல்லையெனவும் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
- விராட் கோலி 17 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
- ரீபிளேயில் பேட்டில் பந்து பட்டது தெளிவாக தெரிந்ததால் இந்திய அணி ஏமாற்றம்.
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது வங்கதேசம் முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது.
பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் ஸ்கோர் 28 ரன்னாக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதனைத்தொடர்ந்து விராட் கோலி களம் இறங்கினார். ஸ்கோர் 67 ரன்னாக இருக்கும்போது மெஹிதி ஹசன் மிராஸ் வீசிய 20 ஓவரின் 2-வது பந்தை விராட் கோலி காலில் வாங்கினார். மெஹிதி ஹசன் அப்பீல் கேட்க நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.
விராட் கோலி எதிர்முனையில் நின்ற சுப்மன் கில்லிடம் இது தொடர்பாக கேட்டார். அப்போது சுப்மன் கில் சரியான எல்.பி.டபிள்யூ-வாகத்தான் இருக்கும் என்பதுபோல் தெரிவிக்க விராட் கோலி டி.ஆர்.எஸ். கேட்காமலம் வெளியேறினார்.
ஆனால் ரீபிளே-யில் பந்து பேட்டில் பட்டபிறகுதான் பேடை தாக்கியது தெரியவந்தது. இதனால் டி.ஆர்.எஸ். கேட்காமல் விராட் கோலி பரிதாபமாக ஆட்டமிழந்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த ரோகித் சர்மா, என்னப்பா இது? டி.ஆர்.எஸ். கேட்டிருக்கலமே... என்ற வகையில் ரியாக்ஷன் கொடுத்தார். இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்கள் லேசான சந்தேகம் இருந்தால் கூட கவலைப்படாமல் டி.ஆர்.எஸ். கேட்பார்கள். ஆனால் இந்தியாவிடம் 3 டி.ஆர்.எஸ். இருக்கும் வேலையில் ஏன் கேட்காமல் விட்டாரோ தெரியவில்லை.
- டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- இந்திய அணி முதல்நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை 339 ரன்களை குவித்தது.
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முதல் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி முதல்நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை 339 ரன்களை குவித்தது.
பொதுவாக சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 'டாஸ்' ஜெயிக்கும் அணிகள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். ஆனால் நேற்றைய டெஸ்டில் வங்காளதேச அணி டாஸ் ஜெயித்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கு 'டாஸ்' ஜெயித்து ஒரு அணி முதலில் பந்து வீசுவது 42 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1982-ம் ஆண்டு இந்தியா- இங்கிலாந்து டெஸ்டில் இவ்வாறு நடந்தது. அந்த போட்டி டிராவில் முடிந்தது.
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 339 ரன்கள் எடுத்தது.
- அஸ்வின் 102 ரன்களிலும் ஜடேஜா 86 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சதம் நொறுக்கிய இந்திய வீரர் அஸ்வினுக்கு சென்னை மைதானத்தில் இது 2-வது சதமாகும். ஏற்கனவே 2021-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக இங்கு 106 ரன்கள் எடுத்திருந்தார். இதையும் சேர்த்து இங்கு தனது 5-வது டெஸ்டில் ஆடும் அஸ்வின் இன்னிங்சில் 4 முறை 5 விக்கெட் சாய்த்துள்ளார்.
இதன் மூலம் ஒரு மைதானத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சதத்துடன், பலமுறை இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அறுவடை செய்த 5-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் கேர்பீல்டு சோபர்ஸ் (ஹெட்டிங்லே மைதானத்தில் 2 சதம் மற்றும் 2 முறை 5 விக்கெட்), இந்தியாவின் கபில்தேவ் (சென்னை மைதானத்தில் 2 சதம் மற்றும் 2 முறை 5 விக்கெட்), நியூசிலாந்தின் கிறிஸ் கெய்ன்ஸ் (ஆக்லாந்தில் 2 சதம் மற்றும் 2 முறை 5 விக்கெட்), இங்கிலாந்தின் இயான் போத்தம் (ஹெட்டிங்லே மைதானத்தில் 2 சதம், 3 முறை 5 விக்கெட்) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த அஸ்வின் பின்னர் அளித்த பேட்டியில், 'சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது தான். இங்கு முழுமையான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறேன். இது எனக்கு நிறைய அற்புதமான நினைவுகளை கொடுக்கிறது.
இன்றைய டெஸ்டுக்குரிய ஆடுகளம், பழைய சேப்பாக்கம் ஆடுகளம் போன்று உள்ளது. கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும். பந்து வீச்சாளர்கள் ஸ்டம்புக்கு வெளியில் வீசும் போது அடித்து ஆடலாம். ஒரு கட்டத்தில் வியர்த்து கொட்டி களைத்து போன போது அதை கவனித்த ஜடேஜா அந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று சொல்லி கொடுத்தார். இனி 2 ரன்களை 3 ரன்களாக ஓடி எடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று கூறினார். அவரது யோசனை மீண்டு வர உதவிகரமாக இருந்தது' என்றார்.
மேலும் அவர், 'புதிய பந்து ஓரளவு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். நாளைய தினம் (இன்று) புத்துணர்ச்சியோடு போட்டியை தொடங்குவோம். ஆடுகளத்தில் இன்னும் ஈரப்பதம் உள்ளது. அது சீக்கிரம் காய்ந்து விடும் என்று நம்புகிறேன்' என்றார்.
- செம்மண் நிற ஆடுகளம் இந்தியா- வங்காளதேசம் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த ஆடுகளம் பவுன்சுடன் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும்.
சென்னை சேப்பாக்கத்தில் செம்மண் நிற ஆடுகளம் இந்தியா- வங்காளதேசம் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பவுன்சுடன் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும்.
கருமைநிற ஆடுகளம் தான் சுழலுக்கு நன்கு கைகொடுக்கும். ஆனால் சென்னையில் கடுமையான வெப்ப நிலை காணப்படுவதால் ஆடுகளம் சீக்கிரமாக சிதைவதற்கு வாய்ப்பு உண்டு.
அவ்வாறான சூழலில் சுழற்பந்து வீச்சும் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் கண்ணோட்டம்:
இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மைதானங்களில் ஒன்று சேப்பாக்கம் ஸ்டேடியமாகும். 1934-ம் ஆண்டு டெஸ்ட் போட்டி முதல் முறையாக இங்கு நடந்தது.
கடைசியாக இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தற்போது 3 ½ ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் முதல் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறும் 35-வது டெஸ்டாகும்.
இதுவரை நடந்த 34 டெஸ்டில் இந்தியா 15-ல் வெற்றி பெற்றது. 7 டெஸ்டில் தோற்றது. 11 போட்டி 'டிரா' ஆனது. ஒரு டெஸ்ட் 'டை' ஆனது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 1986-ம் ஆண்டு மோதிய போட்டி, 'டை' யில் முடிந்தது. இது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டாகும். வெளிநாட்டு அணிகளில் இங்கிலாந்து அதிகபட்சமாக 11 டெஸ்ட் சேப்பாக்கத்தில் விளையாடி உள்ளது. வங்காளதேச அணி முதல் முறையாக இங்கு ஆடுகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இந்திய அணி 1977-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 83 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும்.
கவாஸ்கர் 12 டெஸ்டில் விளையாடி 1018 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் 3 சதம் அடங்கும். அதற்கு அடுத்தபடியாக டெண்டுல்கர் 970 ரன் (10 டெஸ்ட்) எடுத்துள்ளாா்.
ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன் எடுத்தவர் வீரேந்தர் ஷேவாக். அவர் 2008-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக கருண் நாயர் 303 ரன் (2016, இங்கிலாந்துக்கு எதிராக) எடுத்து இருந்தார். இந்த இருவர் மட்டுமே சேப்பாக்கத்தில் டிரிபிள் செஞ்சூரி அடித்தவர்கள் ஆவார்கள். டெண்டுல்கர் அதிகபட்சமாக 5 சதம் அடித்துள்ளார்.
கும்ப்ளே 48 விக்கெட் (8 டெஸ்ட்) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். ஹர்பஜன்சிங், 42 விக்கெட்டும், கபில்தேவ் 42 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.
வினோ மன்காட் 55 ரன் எடுத்து 8 விக்கெட் வீழ்த்தியது இன்னிங்சின் சிறந்த பந்து வீச்சாகும். ஹிர்வாணி 16 விக்கெட் வீழ்த்தியது ஒரு டெஸ்டின் சிறப்பான நிலையாகும்.
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன.
- இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தேதி அறிவிகப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 38 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதன் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் இடத்தில் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளது. 3, 4, 5-வது இடங்கள் முறையே சன்ரைசர்ஸ் ஐதராபாத், சிஎஸ்கே, லக்னோ ஆகிய அணிகள் உள்ளன.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை, வரும் 25-ம் தேதி காலை 10:40 மணிக்கு தொடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 6-ம் தேதி சென்னை - மும்பை அணிகள் மோதுகிறது.
- ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
16-வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 6-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ள நிலையில், டிக்கெட் வாங்குவதற்காக நேற்று நள்ளிரவு முதல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் குவிந்திருந்தனர்.
கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் காலை 9.30 மணி முதல் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பாக காணப்பட்டது.
- சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கேலரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐசிசி சேர்மன் சீனிவாசன், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனி மற்றும் பிராவோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ரூ.139 கோடியில் புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தையும் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டாண்டையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டியாக இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெறுகிறது.
- சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்ட கேலரியை (ஸ்டாண்டு) முதல்- அமைச்சர் இன்று மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கிறார்.
- விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி உள்ளிட்டோர் நிழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் 2011 உலக கோப்பை போட்டியையொட்டி புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியாக புதுப்பிக்கும் பணி நடந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலயன் பகுதி இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் அறை, அலுவலகங்கள், ரசிகர்கள் அமரும் இடம் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டது.
சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்ட கேலரியை (ஸ்டாண்டு) முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கிறார். கலைஞர் கருணாநிதி பெயரில் அமைந்துள்ள ஸ்டாண்டை அவர் திறந்து வைக்கிறார். விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி உள்ளிட்டோர் நிழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் அண்ணா பெவிலியன் கட்டப்பட்ட போது அதை கருணாநிதி திறந்து வைத்தார். தற்போது அவரது பெயரிலான பெவிலியனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். புதுப்பிக்கப்பட்ட சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் முதல் போட்டியாக இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் வருகிற 22-ந்தேதி மோதுகின்றன.
- சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எம் எஸ் டோனியின் மிக பெரிய கட் அவுட் ஒன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது.
16-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த நிலையில் சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிஎஸ்கே அணியின் சமூக வலைதள பக்கங்களில் சென்னை ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக அடிக்கடி தல டோனியின் பயிற்சி வீடியோ மற்றும் காமெடி, நடனம் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனை மிஞ்சும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எம்எஸ் டோனியின் மிக பெரிய கட் அவுட் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. சென்னை ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் மார்ச் 22-ந் தேதி நடக்கவுள்ளது.
- இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை 13-ம் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் தொடங்கிய டெஸ்ட் தொடரில் இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை இந்திய பிரதமரும் ஆஸ்திரேலிய பிரதமரும் தொடங்கி வைத்தனர்.
டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டி மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் மார்ச் 22-ந் தேதி நடக்கவுள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை 13-ம் தேதியும் நேரடி டிக்கெட் விற்பனை 18-ந் தேதி காலை 11 மணிக்கும் தொடங்குகிறது.
இதற்கான டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1200-ல் இருந்து அதிகப்பட்சம் ரூ.10000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டியில் ‘லீக்’ ஆட்டத்திற்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டது. ‘பிளேஆப்’ சுற்றுக்கான தேதி, இடம் ஆகியவை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியன் என்பதால் இறுதிப்போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டி மும்பைக்கு மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே மற்றும் கே ஆகிய 3 கேலரிகள் மூடப்பட்டு இருக்கிறது.
இந்த கேலரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த 3 கேலரிகளில் 12 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம். இந்த பிரச்சினை காரணமாக இறுதிபோட்டி சென்னையில் இருந்து மும்பைக்கு மாற்றம் செய்யப்படலாம்.
இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத்ராய் மற்றும் உறுப்பினர்கள் டயானா எடுல்ஜி, ரவிதோக்டே, தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா உள்ளிட்டோர் டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை செய்தனர். ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
சென்னை, ஐதராபாத்தில் ‘பிளேஆப்’ சுற்று ஆட்டங்கள் நடத்தப்படலாம். #IPL2019
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்