என் மலர்
நீங்கள் தேடியது "Chennai Corporation"
- சாலை மைய தடுப்புகள், தீவுத்திட்டுகளை அழகுபடுத்தி பராமரிக்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மேம்பாலங்கள் மற்றும் ரெயில்வே மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணி ரூ.42 கோடியில் நடைபெறும்.
2025-2026-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் சென்னை மாநகரை அழகுபடுத்த ரூ.65 கோடி ஒதுக்கப்படுவதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
அதன்படி சாலை மைய தடுப்புகள், தீவுத்திட்டுகளை அழகுபடுத்தி பராமரிக்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள் ரூ.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
மேம்பாலங்கள் மற்றும் ரெயில்வே மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணி ரூ.42 கோடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை பெருநகர மாநகராட்சியில் முதன்முறையாக 8,404.70 கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா தலைமையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சியின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம், ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. மேயர் பிரியா 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சென்னை பெருநகர மாநகராட்சியில் முதன்முறையாக 8,404.70 கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வருவாய் செலவினம் ரூ.5,214.09 கோடி, மூலதன செலவினம் ரூ.3,190.6 கோடி என மொத்தம் ரூ.8,404.70 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா தலைமையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
மாநகராட்சி கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக உள்ளன. 100-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்க கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டவில்லை.
பட்ஜெட் மீதான விவாதத்தில் மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில் சுமார் 90 பேர் மட்டுமே மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை வெளியிட்டது.
- காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு அழைத்து வரும்போது வாய்மூடி இல்லாமலேயே அழைத்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் காலையில் நடைபயிற்சி செல்பவர்களும், சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே செல்கின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கும்பலாக சேர்ந்து நாய்கள் துரத்துவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. இதில், வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை வெளியிட்டது.
நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச்செல்லும் போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும். ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே பொறுப்பு ஆகிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கிடையே கருத்தடை, வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் கடைபிடிக்கவில்லை.
காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு அழைத்து வரும்போது வாய்மூடி இல்லாமலேயே அழைத்து வருகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சிக்கு தொடர் புகார்கள் வந்தது. எனவே, மாநகராட்சியின் உத்தரவை கடுமையாக அமல்படுத்தும் வகையில் நடைபயிற்சி செல்லும் போதும், பொது இடங்களுக்கு அழைத்து வரும் போதும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அதாவது, உரிமம் பெறுவது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது, வாய்மூடி அணிவது ஆகியவற்றை பின்பற்ற வலியுறுத்தப்படும். பொது இடங்களுக்கு அழைத்துவரப்படும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. வழிகாட்டு நெறிமுறைகளில் அபராதம் குறித்து தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
- மீறும் நபர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரைத் தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகரைத் தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மையின் கீழ் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 16.10.2022 முதல் 29.10.2022 வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.8 லட்சத்து 48 ஆயிரத்து 400 அபராதமும், கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.7 லட்சத்து 28 ஆயிரத்து 900 அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அரசு, மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 318 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டும், காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.17 லட்சத்து 8 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றைத் தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இதனை மீறும் நபர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்த காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
- வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு செலுத்தப்படும் சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
2022-23-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரி சீராய்வின்படி, சொத்து உரிமையாளர்களால் 1.10.22 முதல் செலுத்தப்பட்டு வருகிறது.
சொத்துவரி சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியினை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு 15.11.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியினை 5 லட்சத்து 92 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில், சொத்து உரிமையாளர்களின் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியினை இதுநாள்வரை செலுத்தாதவர்கள், வட்டி இல்லாமல் செலுத்த டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை சொத்து வரியை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி டிசம்பர் 15-ந் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தி 2 சதவீத தனி வட்டியினை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாநகராட்சி மண்டலம் 5-க்குட்பட்ட பிராட்வேயில் இன்று காலையில் மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர்.
- பிராட்வேயில் வரிசையாக உள்ள கடைகளுக்கு பூட்டி சீல் வைத்ததோடு நோட்டீசும் ஒட்டினார்கள்.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் ஒரு சிலர் நீண்ட காலமாக வாடகை கொடுக்காமல் இருந்து வருகிறார்கள். பல கோடிக்கு மேல் வாடகை பாக்கி நிலுவையாக இருந்து வருகிறது. இதனை அதிரடியாக வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் முக்கிய இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருபவர்கள் முறையாக தொழில்வரி, தொழில் உரிமம் மற்றும் சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர். தொடர்ந்து வாடகை, வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வரும் கடைகள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் மாநகராட்சி மண்டலம் 5-க்குட்பட்ட பிராட்வேயில் இன்று காலையில் மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர். கடை உரிமையாளர் கள் இன்று காலையில் கடைகளை திறப்பதற்கு முன்பே ஊழியர்கள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
பிராட்வேயில் வரிசையாக உள்ள கடைகளுக்கு பூட்டி சீல் வைத்ததோடு நோட்டீசும் ஒட்டினார்கள். மாநகராட்சியின் நடவடிக்கையை மீறி யாரும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட 70 கடைகள், ரூ.30 லட்சம் பாக்கி வைத்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மாநகராட்சியின் இந்த நடவடிக்கை அந்த பகுதியில் உள்ள வர்த்தக பிரமுகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காலையில் வழக்கம்போல் கடைகளை திறக்க வந்த உரிமையாளர்கள், ஊழியர்கள் சீல் வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் அல்லது குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் சேர்க்க வேண்டும்.
- நடைபாதை மற்றும் சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.
நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் இல்லங்களில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து குப்பை சேகரிக்கப்படுகிறது. தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் பரவலாக்கப்பட்ட குப்பை பதனிடும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு குப்பைகளை கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 85,477 கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கடைகளின் உரிமையாளர்களுக்கு கட்டாயம் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் 2 குப்பைத் தொட்டிகள் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுநாள்வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 43,835 கடைகளில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் 2 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளது.
மேலும், 2 குப்பைத் தொட்டிகளை வைக்காத கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2 குப்பைத் தொட்டிகளை விரைந்து வைக்கவும் கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் அல்லது குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் சேர்க்க வேண்டும். நடைபாதை மற்றும் சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
இந்த தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
- நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- சுயஉதவி குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் வயது வரம்பு 18 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி மூலம் 400 அம்மா உணவகங்கள் நடத்தப்படுகின்றன. ஆதரவற்றவர்கள், ஏழை-எளியவர்கள், கூலி தொழிலாளர்கள் அம்மா உணவகத்தை நம்பி வாழ்வதால் நஷ்டத்தில் இயங்கினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பெண்கள் சமையல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் 2 ஷிப்டு முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சில அம்மா உணவகங்களில் உணவு இல்லை என்று ஊழியர்கள் சொல்வதால் தற்போது விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் ஊழியர்கள் அங்கு வருபவர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லாத அளவிற்கு விற்பனை செய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 60 வயதை கடந்த பெண் ஊழியர்கள் அம்மா உணவகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருவது தெரிய வந்தது. அவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
சுயஉதவி குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் வயது வரம்பு 18 முதல் 60 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 60 வயதை கடந்தவர்கள் எத்தனை பேர் பணி செய்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்தியதில் 131 பேர் என தெரியவந்தது.
அவர்கள் அனைவரையும் கடந்த 1-ந்தேதி முதல் பணியில் இருந்து நீக்கவும் செய்துள்ளனர். இதனால் காலி இடங்கள் ஏற்படும்பட்சத்தில் அதனை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செப்டம்பர் மாதம் செலுத்தி இருக்க வேண்டும்.
- தற்போது 2-வது அரையாண்டு நடந்து வருகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள், வணிக கட்டிடங்கள் மூலம் பெறப்படும் சொத்துவரி மாநகராட்சிக்கு முக்கிய வருவாயாக உள்ளது. வருடத்திற்கு 2 முறை அரையாண்டு வீதம் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.
முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செப்டம்பர் மாதம் செலுத்தி இருக்க வேண்டும். தற்போது 2-வது அரையாண்டு நடந்து வருகிறது. முதல் அரையாண்டில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் இல்லாமல் கட்ட இன்று (15-ந் தேதி) வரை மாநகராட்சி அவகாசம் கொடுத்து இருந்தது.
நாளையில் இருந்து செலுத்த வேண்டிய தொகைக்கு அபராதம் சேர்த்து வசூலிக்கப்படும்.
இதற்கிடையில் பொதுமக்கள் ஆன்லைன் மற்றும் நேரடியாக சொத்துவரி செலுத்து வருகின்றனர்.
ஆனாலும் சிலர் இறுதி நாளான இன்று சொத்துவரி செலுத்தினர். மாநகராட்சி சொத்துவரி மையங்களிலும், வங்கிகள் மற்றும் இணைய தளம் வழியாகயும் செலுத்தினார்கள். அபராதத்தை தவிர்க்கும் வகையில் சொத்தின் உரிமையாளர்கள் இன்று கடைசி நேரத்தில் வரி செலுத்தி வருகிறார்கள்.
இது குறித்து மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் கூறும்போது, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை காலத்திற்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்க வேண்டும். முதல் அரையாண்டு கால சொத்து வரி இன்று இரவு வரை ஆன்லைனில் செலுத்தலாம். நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும்.
மேலும் பெரும் தொகையை நீண்ட காலமாக செலுத்தாமல் இருக்கும் சிலர் மீது அதிரடியாக பல்வேறு நடவடிக்கையும் தொடர்கிறது. எனவே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தி மேல் நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
- கருத்து கணிப்பில் சாலைகள், வடிகால், மாசு, பாதுகாப்பு ஆகியவற்றின் தரம் எப்படி இருக்கிறது?
- நீங்கள் வாடகைக்கு வசிக்கிறீர்களா? வாழ்க்கையை நடத்துவதற்கான செலவுகள் என்ன? என்பது உள்ளிட்ட சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை என்பது பொது மக்கள் வாழக்கூடிய நகரமாக உள்ளதா? சென்னையில் நல்லது என்ன? கெட்டது என்ன? என்னென்ன திட்டங்கள் வேண்டும்? என்னென்ன திட்டங்கள் வேண்டாம்? என்பதை பொதுமக்களிடம் இருந்து அறிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது.
இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் தங்கள் படிவங்களை http://eol2022.org/Citizen Feedback என்ற இணையதளத்தில் சென்று நிரப்பலாம். இது சேவை வழங்கல் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்த உதவும் வரிசையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் முன் முயற்சியாகும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கருத்து கணிப்பில் சாலைகள், வடிகால், மாசு, பாதுகாப்பு ஆகியவற்றின் தரம் எப்படி இருக்கிறது? நீங்கள் வாடகைக்கு வசிக்கிறீர்களா? வாழ்க்கையை நடத்துவதற்கான செலவுகள் என்ன? என்பது உள்ளிட்ட சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
மேலும் வேலைவாய்ப்பு, சுகாதாரம் பற்றிய மற்ற சில கேள்விகளும் உள்ளன. இந்த படிவங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
பல்வேறு நகரங்களில் இருந்து வரும் கருத்துக்களை ஒப்பிட்டு மத்திய அமைச்சகம் எந்த நகரம் சிறந்த வாழ்க்கை தரத்தை கொண்டுள்ளது என்பதை அறிவிக்கும். முந்தைய ஆண்டுகளில் சென்னை நகரம் உயர்தரத்தை பெற்றுள்ளன. இந்த கருத்து கணிப்பின் மூலம் குறைந்த உள் கட்டமைப்பு கொண்ட நகரங்கள் கூட உயர் தரத்தை பெறும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கூறுகையில், "சென்னையில் உள்ள மக்கள் அதிக எண்ணிக்கையில் கருத்து கணிப்பில் பங்கேற்று சென்னை மாநகராட்சி சிறந்த தரத்தை பெற ஒத்துழைக்க வேண்டும். சென்னையில் சாலைகள், மழை நீர் வடிகால்வாய் மற்றும் பிற கட்டமைப்புகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறோம்" என்றார்.
ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் எழிலன் கூறுகையில், "இது போன்ற பொதுமக்களின் கருத்து கணிப்புகளை ஊக்குவிக்க வேண்டும். நகர்ப்புறத்தில் வசிக்கும் நடுத்தர மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இது உதவும். கருத்து கணிப்பில் அவர்கள் பங்கேற்கும் போது நமது பொதுமக்களை நன்றாக புரிந்து கொள்ளவும், அவர்களுக்காக சிறந்த திட்டங்களை உருவாக்கவும் இது உதவும்.
பொதுவாக நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களில் பலர் தேர்தலில் பங்கேற்பதில்லை. எனவே இதுபோன்ற கருத்து கணிப்புகள் அவர்களுடன் இணைவதற்கு எங்களுக்கு உதவும்" என்றார்.
துணைமேயர் மகேஷ் குமார் கூறுகையில், "சென்னை நகருக்கு சிறந்த நடைபாதைகள் தேவை. எங்கள் முக்கியமான திட்டங்களில் ஒன்று அகலமான நடைபாதையாகும். இந்த கருத்து கணிப்பின் போது பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற முயற்சிப்போம். மேலும் அவர்களின் ஆலோசனைகளின்படி செயல்படுவோம்" என்றார்.
- சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
- தண்டையார்பேட்டை மண்டலத்தில் ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் 2 பேருந்து சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்க 2 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சியால் பராமரிக்கப்படும் சாலைகளில் தொடர் பயன்பாட்டின் காரணமாகவும், பருவ மழையின் காரணமாகவும் ஒரு சில சாலைகளில் பள்ளங்களும், குழிகளும் ஏற்பட்டுள்ளன. பருவமழையின் காரணமாக, மாநகராட்சியின் சார்பில் இந்தச் சாலைகளில் ஜல்லிக்கலவை, தார்க்கலவை மற்றும் குளிர் தார்க்கலவை கொண்டு பள்ளங்களும், குழிகளும் தற்காலிகமாக சீர்செய்யப்பட்டன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பருவமழை முடிவடைந்தவுடன் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீர்செய்யப்படும் என அறிவித்திருந்தார். மேலும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது, சென்னையில் சிங்கார சென்னை 2.0, தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, மேயரின் ஆலோசனையின்படி, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ரூ.45.19 கோடி மதிப்பீட்டில் 233 உட்புற தார் சாலைகள், 34 பேருந்து தார் சாலைகள், 63 உட்புற சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், 2 சிமெண்ட் கான்கிரீட் பேருந்து சாலைகள், 47 இன்டர்லாக் பேவர் பிளாக் சாலைகள் என 379 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன.
மேம்படுத்தப்பட உள்ள சாலைகளின் விவரம் வருமாறு:-
திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களில் ரூ.19.51 கோடி மதிப்பீட்டில் 233 உட்புற தார் சாலைகள் மேம்படுத்த 20 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் ரூ.17.35 கோடி மதிப்பீட்டில் 34 பேருந்து சாலைகளை தார் சாலைகளாக அமைக்க 13 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் 63 உட்புறச் சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்க 4 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் 2 பேருந்து சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்க 2 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களில் ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் 47 சாலைகள் பேவர் பிளாக்குகளை கொண்டு அமைக்கப்பட உள்ளன. இந்தப் பணிக்காக 4 சிப்பங்களாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
சாலை பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் 3.1.2023 அன்று திறக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்ட பின்னர் பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்புக்கு வந்து 10 மாதங்கள் ஆகிறது. பிப்ரவரி மாதம் வந்தால் ஒரு வருடம் ஆகிவிடும்.
- ஏரியா சபை உறுப்பினர்கள், வார்டு குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை:
நகர் புறங்களில் நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் வகையில் நகர்ப்புறங்களில் வார்டு குழு மற்றும் பகுதி சபை உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் பகுதி சபை, நகராட்சிகளில் வார்டு குழு அமைக்கப்படுகிறது.
தற்போது சென்னையில் ஏரியா சபை உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு வார்டுக்கு 10 ஏரியா சபை வீதம் 200 வார்டுக்கு 2 ஆயிரம் ஏரியா சபைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு ஏரியா சபைக்கும் 10 உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். அவர்கள் அந்த வார்டில் ஓட்டுரிமை உள்ளவர்களாக இருக்க வேண்டும். வேறு வார்டில் வாக்குரிமை உள்ளவர்கள் போட்டியிட தகுதியற்றவர்கள். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதி என்ன நிர்ணயிக்கப்பட்டு இருந்ததோ அதே தகுதி ஏரி சபை உறுப்பினர்களுக்கும் பொருந்தும். அரசு ஊழியர்கள், குற்றவாளிகள் போட்டியிட முடியாது.
இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதனை ஏரியா சபை உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுபவர்கள் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போது ஏரியா சபை உறுப்பினருக்கான தேர்வு தொடங்கி உள்ளது. மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஏரியா சபை உறுப்பினர்களை நியமனம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்புக்கு வந்து 10 மாதங்கள் ஆகிறது. பிப்ரவரி மாதம் வந்தால் ஒரு வருடம் ஆகிவிடும். அதற்குள் ஏரியா சபை உறுப்பினர்கள், வார்டு குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
3 மாதத்திற்கு ஒருமுறை ஏரியா சபை கூட்டம் கூட்டப்பட வேண்டும். பின்னர் தங்கள் வார்டுக்கு உட்பட்ட ஏரியா சபை உறுப்பினர்களை அனைத்து வார்டு குழு கூட்டத்தை கவுன்சிலர் கூட்ட வேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தெருக்களில் அடிப்படையான பிரச்சினைகளை உடனுக்குடன் களைவதற்காக ஏரியா சபை அமைக்கப்படுகிறது.
ஏரியா சபை உறுப்பினர்கள் நியமிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.