என் மலர்
நீங்கள் தேடியது "Chennai High court"
- சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
- வக்கீல் விக்டோரியா கவுரி குறித்த புகார்களை கொலிஜீயம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது என தெரிவித்தார்.
வக்கீல் விக்டோரியா கவுரியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிப்பதற்கு எதிராக சென்னையைச் சேர்ந்த வக்கீல் அன்னா மேத்யூ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி மூத்த வக்கீல் ராஜீவ் ராமச்சந்திரன், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று காலை ஆஜராகி முறையிட்டார்.
அந்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பான மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.
இதனிடையே சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் பிற்பகலில் முறையிடப்பட்டது.
முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, உரிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும். வக்கீல் விக்டோரியா கவுரி குறித்த புகார்களை கொலிஜீயம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில், விக்டோரியா கவுரியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிப்பதற்கு எதிராக தொடர்ந்து மனு மீதான விசாரணை தொடங்கியது.
காரசாரமாக விவாதம் நடைபெற்ற நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
- விக்டோரி கவுரி பேசுகையில் நாட்டின் முன்னேற்றத்துக்கு விவேகானந்தர் கூறிய கருத்துக்களை ஏற்று அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
- நீதித்துறையில் வக்கீல்களும், நீதிபதிகளும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பார்கள்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதிகளாக எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.சி.திலகவதி ஆகியோரை நிய மித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து இவர்கள் 5 பேரும் இன்று காலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆர்.சண்முக சுந்தரம் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினார்.
இவரை தொடர்ந்து தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வக்கீல் சங்க நிர்வாகிகளான கமலநாதன், செங்கோட்டுவேல் உள்ளிட்டோரும் வரவேற்று பேசினர். அனைவருக்கும் நன்றி தெரிவித்து புதிய நீதிபதிகள் பேசினார்கள்.
முதலில் லலிதாம்பிகை அம்மனுக்கும், மாதா அமிர்தானந்தமயிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குமரி மாவட்டத்தில் குக்கிராமத்தில் பிறந்த எனக்கு இந்த பதவி கிடைப்பதற்கு காரணமான எனது பெற்றோர் லட்சுமி சந்திரா-சரோஜினி சந்திரா, மாமனார் தங்கமணி, கணவர் துளசி முத்துராம் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை நீதிபதி பதவிக்கு பரிந்துரைத்த ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் முன்னேற்றத்துக்கு விவேகானந்தர் கூறிய கருத்துக்களை ஏற்று அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு விக்டோரி கவுரி பேசினார்.
நீதிபதி பி.பி.பாலாஜி: நீதித்துறையில் வக்கீல்களும், நீதிபதிகளும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பார்கள். ஆனால் இருவரும் தினமும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். நாணயத்தின் இரு பக்கங்களும் எப்போதும் சந்திக்க முடியாது. அதனால் அந்த கருத்தை ஏற்க முடியாது.
பல்வேறு வழக்குகளை விவரங்களுடன் தாக்கல் செய்யும் வக்கீல்களை கம்ப்யூட்டரின் இன்டிட்டி வைஸ் என்றும், தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை அவுட்புட்டிவைஸ் என்றும் அழைக்கலாம். குழந்தையின் முதல் நடை போல நீதித்துறையில் எனது பயணத்தை தொடங்குகிறேன்.
நீதிபதி கே.கே.ராம கிருஷ்ணன்: திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் விவசாய கூலி குடும்பத்தில் நான் பிறந்தேன். நான் பிறந்த 6-வது மாதத்தில் எனது தந்தை காலமானார். தாயார் மற்றும் தாய் மாமன், சகோதரர் வருமானத்தில் பள்ளி படிப்பையும், சட்ட படிப்பையும் முடித்தேன்.
இந்த பொறுப்புக்கு வருவதற்கு பலர் காரணமாக இருந்துள்ளனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.
- கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்களை சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
- அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் புதிய திரைப்படங்ள் வெளியாகும் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில், தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில், ''கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்களை சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், ''தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் சோதனை நடத்தி கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது'' என்று கூறி அதற்குரிய பட்டியலை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ''திரையரங்குகளை தொடர்ந்து கண்காணித்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
- தவறு செய்பவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதும் இல்லை.
- வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.
சென்னை :
கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''சட்டங்கள் பல இருந்தாலும் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் தவறு செய்பவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதும் இல்லை.
அவர்கள் தண்டிக்கப்படுவதும் இல்லை. எனவே, இதுபோன்ற தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே என் மனுவை பரிசீலிக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்து. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே மற்றொரு வழக்கில் இது சம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டனர்.
- நீதித்துறையில் புரட்சி, சீர்த்திருத்தங்கள் வர உள்ளன
- காகிதம் இல்லாத முறையையும் கொண்டு வரப்பட உள்ளது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சார்பு நீதிமன்றம், பொன்னமராவதி, கறம்பக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் என 3 புதிய கோர்ட்டுகள் திறப்பு விழா புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய கோர்ட்டுகளை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 3½ கோடி முதல் 4 கோடி வழக்குகள் தேங்கி இருக்கின்றன. ஒரு வழக்கு தீர்ப்புக்கு பின் மேல் முறையீடு செய்யப்படுகிறது. ஒரு வழக்கிற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகிறது. இந்த காலத்தை ஏன் குறைக்க கூடாது? என்று கேட்க வேண்டிய கேள்வி எழுந்துள்ளது.
கோர்ட்டுகளில் வக்கீல்கள் வாதாடும்போது அதிகமாக 3 முதல் 5 நிமிடங்களுக்குள் வாதாடி முடிக்க வேண்டும். இதில் ரத்தின சுருக்கமாகவும், தெளிவாகவும் நீதிமன்றத்தில் எடுத்து கூறினால் விரைவாக நீதியை பெற முடியும்.
நீதிமன்றங்களில் வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆன்லைன் முறை, இ-பைலிங், காணொலியில் வழக்கு விசாரணை என்ற வசதி உள்ளது. இந்த வசதிகளை வக்கீல்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும். இன்னும் 2 ஆண்டுகளில் நீதித்துறையில் புரட்சி நடக்க உள்ளது. சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன.
காகிதம் இல்லாத முறையையும் கொண்டு வரப்பட உள்ளது. 4 கோடி வழக்குகளை எப்படி தீர்த்து வைப்பது என நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டங்கள் மாறி வருகின்றன. அதனை வக்கீல்கள் தெரிந்திருக்க வேண்டும். நீதிபதிகளின் கடினமான கேள்விகளுக்கு வக்கீல்கள் கோபத்துடன் பதில் அளிக்க கூடாது. கோபம் இல்லாமல் பதில் அளித்தால் வெற்றிக்கு வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''தமிழகம் நீதி நிர்வாகம் மற்றும் சிறைத்துறையில், உயர்நீதிமன்றத்தின் முழு ஒத்துழைப்பின் மூலம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. நீதிமன்றங்கள் கட்டமைப்புகள் மிக சிறப்பாக இருக்கும் மாநிலமாக தமிழகம் திகழும். வக்கீல்களின் சேம நல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது நிதி நிலைமை சரியில்லாததால் அதனை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. நிதி நிலைமை சரியானதும் வக்கீல்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
- அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.
- போலீசார் தலையிட்டு மோதலை கட்டுப்படுத்தினர்.
சென்னை :
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பட்டவர்த்தி கிராமத்தில் கோவில் திருவிழாவுக்கும், அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கக் கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த 77 வயதான நாடக கலைஞர் சிவபிரகாசம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
2021-ம் ஆண்டு கிராமத்தில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு மோதலை கட்டுப்படுத்தினர்.
2022-ம் ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாளில் கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் போது, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 2022-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பொதுமக்கள் கூட தடை உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்தனர்.
நடப்பாண்டு இரு தரப்பினர் மோதலை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர், "நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்னும் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையும், கோவில் திருவிழாவையும் ஒரே நேரத்தில் கொண்டாட முடியவில்லை. இதுபற்றி நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள்? கிராமத்தில் திருவிழாவையும், அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையும் ஒரே நேரத்தில் ஏன் நடத்தக்கூடாது?" என்று வேதனை தெரிவித்து, சரமாரியாக கேள்வி கேட்டனர்.
பின்னர், "கோவில் விழாவும், அம்பேத்கர் பிறந்தநாளையும் அமைதியாக நடப்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உத்தரவின்படி கீழ்கண்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
- சென்னை சிட்டி சிவில் கோர்ட்டுகளில் பணியாற்றிய நீதிபதிகள், சென்னையில் உள்ள கோர்ட்டுகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை :
ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உத்தரவின்படி கீழ்கண்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் (ஆய்வு) எம்.ஜோதிராமன், சென்னை ஐகோர்ட்டின் ஜூடிசியல் பதிவாளராகவும், கடலூர் தொழிலாளர் கோர்ட்டு நீதிபதி எம்.சுபா அன்புமணி, சென்னை ஐகோர்ட்டின் பதிவாளராகவும் (மாவட்ட நீதித்துறை), சென்னை வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகாடமி இயக்குனராகவும், திருவள்ளூர் மாவட்ட லோக் அதாலத் நீதிபதி ஏ.ரமேஷ்பாபு, சென்னை ஐகோர்ட்டு சட்ட இதழ் தலைமை எடிட்டராகவும், தமிழ்நாடு ஜூடிசியல் அகாடமி இயக்குனர் டி.லிங்கேஷ்வரன், சென்னை முதலாவது (தடா) செசன்சு கோர்ட்டு நீதிபதியாகவும், அந்த கோர்ட்டில் நீதிபதியாக இருந்த வி.தங்கமாரியப்பன், 2-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாகவும், 3-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, சென்னை நிரந்த லோக் அதாலத் நீதிபதியாகவும், சிதம்பரம் மாவட்ட கூடுதல் நீதிபதி பா.யு.செம்மல், காஞ்சீபுரம் மாவட்ட 2-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதியாகவும், விழுப்புரம் குடும்பநல கோர்ட்டு நீதிபதி வி.தேன்மொழி, எழும்பூர் பொருளாதார குற்றவியல் 1-வது கோர்ட்டு நீதிபதியாகவும், புதுக்கோட்டை மகளிர் கோர்ட்டு நீதிபதி ஆர்.சத்தியா, திருவள்ளூர் 1-வது கூடுதல் மாவட்ட செசன்சு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சிட்டி சிவில் கோர்ட்டுகளில் பணியாற்றிய நீதிபதிகள், சென்னையில் உள்ள கோர்ட்டுகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், சென்னை 19-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக ஏ.ரமேஷ், 18-வது கோர்ட்டு நீதிபதியாக எஸ்.சுஜாதா, 17-வது கோர்ட்டுக்கு நீதிபதியாக எல்.ஆபிரகாம் லிங்கன், 16-வது கோர்ட்டுக்கு நீதிபதியாக ஜி.புவனேஷ்வரி, 15-வது கோர்ட்டுக்கு நீதிபதியாக பி.சுரேஷ்குமார், 7-வது கோர்ட்டு நீதிபதியாக வி.பாண்டியராஜ், 6-வது கோர்ட்டு நீதிபதியாக எஸ்.டாஸ்னீம், 5-வது கோர்ட்டு நீதிபதியாக எஸ்.முருகநாதன், 4-வது கோர்ட்டு நீதிபதியாக ஜெ.சந்திரன், 3-வது கோர்ட்டு நீதிபதியாக டி.வி.ஆனந்த் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டத்துறை செயலாளராக பணியாற்றிய நீதிபதி பி.கார்த்திகேயன், சென்னை வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதியாகவும், சென்னை 4-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதி ஏ.சரவணகுமார், சென்னை விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நீதிபதியாகவும், சேலம் குடும்பநல கோர்ட்டு நீதிபதி சி.ஜெயஸ்ரீ, சென்னை 7-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதியாகவும், 7-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதி எஸ்.எழில்வளவன், சென்னை 8-வது சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு துணைச் செயலாளராக இருந்த டி.ஜெயஸ்ரீ, செங்கல்பட்டு தலைமை மாஜிஸ்திரேட்டாகவும், மயிலாடுதுறை தலைமை மாஜிஸ்திரேட்டு எம்.எஸ்.மணிமேகலை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதியாகவும், இந்த கோர்ட்டில் பணியாற்றிய நீதிபதி ஜெ.ஓம்பிரகாஷ், முதலாவது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாகவும், எழும்பூர் 2-வது குற்றவியல் கோர்ட்டு நீதிபதி யஷ்வந்த்ராவ் இங்கர்சால், திருவள்ளூர் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதியாகவும், சென்னை 7-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி பி.சுந்தரராஜன், சென்னை 5-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாகவும், காட்பாடி சார்பு கோர்ட்டு நீதிபதி எஸ்.தமிழ்செல்வி, 9-வது சிறுவழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டு நீதிபதியாகவும், ஊட்டி சார்பு கோர்ட்டு நீதிபதி சி.சுரேஷ்குமார், சென்னை 9-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை 13-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக என்.சச்சிதானந்தன், சென்னை சைதாப்பேட்டை 23-வது கோர்ட்டு நீதிபதியாக ஆர்.வேல்ராஜ், 15-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக சி.அசோக்குமார், 17-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக ஆர்.காரல்மார்க்ஸ், 19-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக எஸ்.ஜீவபாண்டியன், 22-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக இ.தாமோதரன், 26-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக எம்.ஜியாவூர் ரகுமான், 27-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக எஸ்.சிவசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை எழும்பூரில் உள்ள நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி டி.ராஜேஷ் ராஜூ, பூந்தமல்லி 2-வது மாஜிஸ்திரேட்டாகவும், சிவகங்கை மாவட்ட முன்சீப் நீதிபதி இனிய கருநாகராஜன், காஞ்சீபுரம் முதலாவது மாஜிஸ்திரேட்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 189 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஐகோர்ட்டு கண்ணியத்தை காக்கும் வகையில் பணியாற்றுவதற்கு உரிய பலத்தை இயற்கை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.
- தமிழ்வழியில் படித்த வக்கீல்கள் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருத வேண்டாம்.
சென்னை:
முதன்மை மாவட்ட நீதிபதிகளாக பதவி வகித்து வந்த ஆர். சக்திவேல், பி. தனபால், சி. குமரப்பன், கே .ராஜசேகர் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து 4 புதிய நீதிபதிகளும் இன்று காலையில் பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி. ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய நீதிபதிகளை வரவேற்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி. எஸ் அமல்ராஜ் , வக்கீல் சங்க தலைவர்கள் ஆகியோர் பேசினர். இதற்கு நன்றி தெரிவித்து புதிய நீதிபதிகள் ஏற்புரை ஆற்றினர்.
நீதிபதி ஆர்.சக்திவேல், ஐகோர்ட்டு கண்ணியத்தை காக்கும் வகையில் பணியாற்றுவதற்கு உரிய பலத்தை இயற்கை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.
நீதிபதி பி.தனபால் பேசும்போது, நான் பள்ளிப்படிப்பு தமிழ்வழியில் படித்தேன். அதனால், தமிழ்வழியில் படித்த வக்கீல்கள் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருத வேண்டாம். முயற்சித்தால் இயலாதது என்று எதுவுமில்லை என கூறினார். மேலும் தனக்கு கல்வி கற்க உதவிய தன் சொந்த கிராமத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் மூத்த வக்கீல்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார் .
நீதிபதி சி. குமரப்பன், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதாக நான் பணியாற்றுவேன் என்றுஉறுதி அளித்தார்.
நீதிபதி ராஜசேகர் தன்னுடைய குடும்பத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் தன்னுடன் பணியாற்றிய வக்கீல்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.
- சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா பதவியேற்றுக் கொண்டார்.
- இவர் அடுத்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
மும்பை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கும் சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு, சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கடந்த மாதம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. அதை ஏற்று மத்திய அரசு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது.
அதன்படி, எஸ்.வி.கங்கா பூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை ஐகோர்ட்டின் 33வது தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், ரகுபதி, தங்கம் தென்னரசு, சேகர் பாபு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அடுத்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி கங்கா பூர்வாலா ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்நாட்டு நாய்களுக்கு நோய் பரவியது என்பதற்கு ஆதாரம் இல்லை.
- வெளிநாட்டு நாய்கள் இறக்குமதியை மத்திய அரசு ஒழுங்குபடுத்த வேண்டும்.
சென்னை :
வெளிநாட்டில் இருந்து நாய்களை வர்த்தக ரீதியாக இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மேனகா காந்தி கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி கடிதம் எழுதினார். அதில், "வெளிநாட்டில் இருந்து தடையின்றி வர்த்தக ரீதியாக நாய்கள் இறக்குமதி செய்யப்படுவதால், அந்த நாய்களிடம் இருந்து உள்நாட்டு நாய்களுக்கு பல்வேறு நோய்கள் பரவுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டு நாய்களுடன் கலப்பினம் செய்யப்படுவதால், உள்நாட்டு நாய்களின் மரபணுவில் பாதிப்பு ஏற்படுகிறது" என்று கூறியிருந்தார்.
இந்த கடிதத்தை பரிசீலித்த அன்னிய வர்த்தகத்துறை தலைமை இயக்குனர், வெளிநாட்டு நாய்களை வர்த்தக ரீதியாக இறக்குமதி செய்ய தடை விதித்து கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கென்னல் கிளப் ஆப் இந்தியா, தி மெட்ராஸ் கென்னல் கிளப், பாலகிருஷ்ண பட் ஆகியோர் வழக்குகளை தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஆர்.ஸ்ரீனிவாஸ், வி.செல்வராஜ், வக்கீல் மைதிலி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அவர்கள் தங்கள் வாதத்தில், "எந்த ஒரு ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு நாய்களுக்கு நோய் பரவியது என்பதற்கு ஆதாரம் இல்லை" என்று கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு அறிவியல்பூர்வமான ஆய்வுகளை எதுவும் மேற்கொள்ளாமல், இந்த தடையை விதித்துள்ளதால், அந்த தடை உத்தரவை ரத்து செய்கிறேன். அதேநேரம், வெளிநாட்டு நாய்கள் இறக்குமதியை மத்திய அரசு ஒழுங்குபடுத்த வேண்டும்.
ஒருகாலத்தில் நம் நாட்டில் தாஜி, பூடானி, பஞ்சாரி, வடக்கு தோல், எஸ்கிமாக்ஸ் நாய், தெற்கு டோ, சலுகி, கூச்சி, போடியா (இமயமலை செம்மறி நாய் மற்றும் அதன் வகைகள்), திரிபுரி நாய், வகாரி ஹவுண்ட், மராத்தா முதோல் அல்லது பஷ்மி ஹவுண்ட், ராஜபாளையம், தனகரி, பொலிகர், சிப்பிப்பாறை தம்பி, சிப்பிப்பாறை ராஜா, பட்டி நாய், பக்கர்வால், ஜோனாங்கி, கோம்பை, சிந்தி, பாண்டிகோனா, லாசா, அலக்நூரி, கைகாடி, கன்னி, குருமலை என்று ஏராளமான நாய் இனங்கள் நம்மிடம் இருந்தன. இப்போது இதில், எத்தனை இனங்கள் நம்மிடம் உள்ளன? இந்த நாய்கள் இனங்கள் எல்லாம் பாதுகாக்க வேண்டும்.
எனவே, இந்த மாநிலத்தின் நாட்டு நாய்களை இனப்பெருக்கம், பராமரிப்பு ஆகியவை குறித்து விளக்கம் பெற தமிழ்நாடு கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளரை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். அவர், நாய்கள் இனப்பெருக்கம் மற்றும் வளர்ப்பு தொடர்பாக ஒழுங்கு விதிகள் மற்றும் கொள்கை முடிவை எடுக்க வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை வருகிற ஆகஸ்டு 5-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
- சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
- செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவை நாளை சென்னை ஐகோர்ட்டு விசாரிக்கிறது.
சென்னை:
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு நாளை சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
செந்தில் பாலாஜியை எப்போது முதல் அமலாக்கத் துறை விசாரிக்கலாம் என்பது குறித்து இரு நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் என 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்திருந்த நிலையில், நாளை இந்த விசாரணை நடைபெறுகிறது.
செந்தில் பாலாஜியை எந்த தேதியிலிருந்து காவலில் எடுக்கலாம் என்பது குறித்தும் முடிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
- அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து ஆலோசித்தார்.
- நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர், மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டின் பதிவுத்துறை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
உயர்நீதிமன்ற அறிவுறுத்தலில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் படம் இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து ஆலோசித்தார்.
அப்போது, அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டினை அமைச்சர் ரகுபதி கடிதமாக வழங்கினார்.
பேச்சுவார்த்தையின்போது, நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு ஏற்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும், நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.