search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheque"

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 411 மனுக்களை பொது மக்கள் வழங்கினர்
    • ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 411 மனுக்களை பொது மக்கள் வழங்கினர்.

    இதேபோல் மாற்றுத்திற னாளிகள் 14 மனுக்களை வழங்கினர். மாவட்ட மாற்றுத்தி றனாளி நல த்துறை சார்பில் தசை சிதைவு நோயினால் பாதிக்க ப்பட்ட 2 மாற்றுத்தி றனாளி களுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியும், மடக்கு சக்கர நாற்காலி 2 நபர்களுக்கும், இயற்கை மரணம் ஈமச்ச டங்கு காசோலை 5 நபர்க ளுக்கும், காதெலிக்கருவி ஒரு நபருக்கும் என மொத்தம் 10 மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இராஜலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • காசோலையை வங்கியில் செல்வராஜ் செலுத்தியபோது பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்துவிட்டது.
    • 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 82).விவசாயி.

    இவரிடம் மன்னார்குடி நியூ பைபாஸ் ரோடு புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஓட்டல் தொழில் செய்து வரும் சத்தியமூர்த்தி (வயது 55) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு ரூ 4 லட்சம் செல்வராஜ் கடன் வாங்கி உள்ளார்.

    கடனை செல்வராஜ் திருப்பி கேட்ட பொழுது சத்தியமூர்த்தி கடன் தொகைக்காக காசோலை வழங்கியுள்ளார்.

    காசோலையை வங்கியில் செல்வராஜ் செலுத்தியபோது பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்துவிட்டது.

    இதனை அடுத்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 -ல் செல்வராஜ் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று முன்தினம் முன்னாடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட சத்தியமூர்த்தி கடன்தொகையில் இரு மடங்கு தொகையான ரூ 8 லட்சத்தை அபராதமாக செலுத்த வேண்டும்.

    மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

    • கடலூர் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு ரூ. 3 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில்; பட்டா தொடர்பான 269 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 52 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 16 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 48 மனுக்களும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம் தொடர்பாக 76 மனுக்களும், இதர மனுக்கள் 55 ஆக மொத்தம் 516 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு)கிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து பயனாளிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கினார்.
    • முதல்-அமைச்சரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    விழுப்புரம் :

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ேமாகன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்தமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 415 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மேலும், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் முதல்-அமைச்சரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து விக்கிரவாண்டி வட்டம் தென்னமாதேவி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஆகாஷ் (வயது 7) நீரில் மூழ்கி இறந்ததையொட்டி அந்த குடும்பத்துக்கு நிவாரண உதவியாக முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியின்கீழ் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை தங்கராஜ் என்பவரிடம் மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, தனித்துைண கலெக்டர் (ச.பா.தி) விஸ்வநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உ.பி. முதல் மந்திரி அளித்த காசோலை வங்கியில் திருப்பி அனுப்பப்பட்டதால் பத்தாம் வகுப்பில் 7வது இடம் பிடித்த மாணவர் அதிர்ச்சி அடைந்தார். #UttarPradesh #BoardTopper #ChequeBounce
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 7வதி இடம் பிடித்தவர் அலோக் மிஸ்ரா.

    கடந்த மாதம் 29ம் தேதி லக்னோவில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அலோக் மிஸ்ராவை பாராட்டி, ஒரு லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கினார்.

    இதையடுத்து, மிஸ்ராவின் தந்தை அந்த காசோலையை கடந்த 5ம் தேதி வங்கியில் செலுத்தினார். ஆனால், காசோலையில் உள்ள கையெழுத்து பொருந்தவில்லை எனக்கூறி வங்கி காசோலை திருப்பி அனுப்பியது. அத்துடன், காசோலையை திருப்பி அனுப்பியதற்காக அபராத கட்டணத்தையும் மிஸ்ராவிடம் வசூலித்தது.

    இதையறிந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அந்த காசோலைக்கு பதிலாக வேறு காசோலையை வழங்கி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    முதல் மந்திரி அளித்த காசோலை வங்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh #BoardTopper #ChequeBounce
    ×