என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cheyyar"
செய்யாறு:
செய்யாறு காமராஜ் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30).வெங்கட்ராயன் பேட்டையை சேர்ந்தவர் குமார் (40). இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் ஆறுமுகம் நேற்று மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை வழியாக நடந்து சென்றார்.அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த குமார் ஆறுமுகத்திடம் வீண் தகராறு செய்துள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி பின்னர் கைகலப்பாக மாறியது இதில் ஆத்திரமடைந்த குமார் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து ஆறுமுகத்தை குத்தினார். இதனை கண்ட ஆறுமுகத்தின் சகோதரர்கள் நேதாஜி மற்றும் ரஜினிகாந்த் தட்டி கேட்டனர். அவர்களையும் குமார் பீர்பாட்டிலால் குத்தினார்.
இதில் படுகாயமடைந்த 3 பேரும் செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இது குறித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள தண்டரையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறபடுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் செய்யாறு ஆரணி செல்லும் சாலையில் திடீர் சாலை மறியல் செய்தனர். இது குறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்தை நடத்தினார்.
அப்போது பெண்கள் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கூறினர். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உரிதியளித்தார்.
இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்யாறு சமாதியான் தெருவை சேர்ந்தவர் அக்பர்பாஷா (வயது 33). புரோட்டா மாஸ்டர். இவரது மனைவி ஷாயினாதி இவர்களுக்கு 1 மகன் 1மகள் உள்ளனர்.
அக்பர்பாஷா நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி பல இடங்களில் தேடிவந்தார்.
இந்நிலையில் அக்பர் பாஷா வீட்டின் அருகே உள்ள தனியார் மண்டபத்தின் பின்பக்கம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
செய்யாறு பைங்கிணற்றை சேர்ந்தவர் மாதவன் (வயது 40). இவர் திருவத்திபுரம் நகராட்சியில் தற்காலிகமாக டேங்க் ஆப்ரேட்டர் வேலைபார்த்து வந்தார்.
சம்பவத்தன்று மாதவன் நேருநகர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு மாதவன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இது குறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
செய்யாறு அருகே வடதண்டலம் பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 35). விவசாயி. இவரது மனைவி உமா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று இரவு விநாயக மூர்த்தி அருகே உள்ள அவரது விவசாய நிலத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. நிலத்திலே படுத்து தூங்கி இருக்கலாம் என்று குடும்பத்தினர் கருதினர்.
இந்நிலையில் இன்று காலை விநாயக மூர்த்தியின் தந்தை முனுசாமி விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு டிராக்டர் மட்டும் இருந்தது. விநாயமூர்த்தியை காணவில்லை. பக்கத்து நிலத்திற்கு சென்று பார்த்த போது அங்கு விநாயக மூர்த்தி இறந்து கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த முனுசாமி இது குறித்து செய்யாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பார்வையிட்டனர். விநாயகமூர்த்தி உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்தன. மேலும் அவரது உடல் அருகே ரத்த கரையுடன் கடப்பாறை இருந்தை கண்டு பிடித்தனர்.
விநாயகமூர்த்தியை யாரோ அடித்து கொலை செய்து விட்டு பக்கத்து நிலத்தில் வீசி சென்றிருக்கலாம் என்று தெரிய வந்தது. உடலை மீட்ட போலீசார் செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விநாயகமூர்த்தியை முன் விரோத காரணமாக கொலை செய்யபட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி அடித்து கொலை செய்யபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இருந்து வாழைப்பந்தல் செல்லும் சாலையில் உள்ள பாராசூர் கிராமத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இரவு காவலாளியாக பாராசூர் எறையூர் காலனியை சேர்ந்த வஜ்ரவேல் (52) என்பவர் உள்ளார்.
வஜ்ரவேல் வழக்கம் போல் இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவில் முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கல்லூரிக்குள் புகுந்தனர். காவலாளி வஜ்ரவேலுவை தாக்கி ஒரு அறையில் தள்ளி பூட்டினர்.
பின்னர், அலுவலகத்தின் அறை கதவை உடைத்தனர். உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்தனர். இதையடுத்து, அந்த கும்பல் கல்லூரியில் இருந்து தப்பிச் சென்றது.
ஒரு வழியாக அறையின் கதவை திறந்து வெளியே வந்த காவலாளி வஜ்ரவேல், கல்லூரி செயலர் நடராஜன் மற்றும் முதல்வர் சதாசிவம் ஆகியோருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். அவர்கள் கல்லூரிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இதையடுத்து, செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரவு காவலாளியிடம் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும், பணத்தை கொள்ளையடித்த 4 பேர் கும்பலை பிடிக்கவும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள கீழ்புதுபாக்கம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி புஷ்பவதி (வயது 65). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த புஷ்பவதி இன்று காலை விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் புஷ்பவதியை மீட்டு குடியாத்தம் அரசு ஆபத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தை கடத்தல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்தார்.
போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வதந்தி பரப்புவது குறித்த கண்காணிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் செய்யாறு பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் பேசிய வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக்கிலும் வேகமாக பரவியது.
அதில் பேசிய வாலிபர் எனது பெயர் வீரராகவன் (வயது35). செய்யாறு அருகே உள்ள புரிசை கிராமத்தில் இருந்து பேசுகிறேன்.
செய்யாறு பக்கத்துல அதிகமா குழந்தைகளை கடத்துறாங்க இன்று இரவு பாராசூர் என்ற கிராமத்தில் 2 குழந்தைகளை தூக்கிட்டு போய்ட்டாங்க.
ஏழியனூரில் வடமாநில கும்பல் 2 குழந்தைகளை கடத்திட்டாங்க. தாங்கல், உத்திரமேரூரில் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். அதனால உங்க குழந்தைளை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும்.
செய்யாறு பக்கத்துல விநாயகபுரம் என்ற ஊரில் இந்திகாரனுங்க ஐஸ்பெட்டிக்குள் வைத்து குழந்தைகளை தூக்கி சென்றனர். பொதுமக்கள் துரத்தியதால் விட்டுட்டு ஓடிடாங்க.
இதுவரை செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். அனைவரும் உஷாராக இருங்கள். வேலை முக்கியமில்லை. குழந்தைதான் முக்கியம்.
குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்க. அனைவரும் உஷாராக இருங்கள். முடிந்த வரை இதனை சேர் செய்து எவ்வாளவு குழந்தைகளை காப்பாற்ற முடியுமோ காப்பாற்றுங்கள் நன்றி என கூறியபடி இந்த வீடியோ பதிவு நிறைவு பெறுகிறது.
வீரராகவின் வீடியோ செய்யாறு பகுதியில் வேகமாக பரவியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
சமூக வலைதளங்களை கண்காணித்த அணக்காவூர் போலீசார் இந்த வீடியோவை கண்டு திடுக்கிட்டனர்.
இன்று அதிகாலை 4 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையிலான போலீசார் புரிசை கிராமத்திற்கு சென்று வீரராகவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்