என் மலர்
நீங்கள் தேடியது "Chief Justice of india"
- சஞ்சீவ் குமார் திவாரி என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்
- இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்று நீதிபதிகள் கூறினர்
புதுடெல்லி:
உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த 9ம் தேதி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமானம் செய்துவைத்தார்.
தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சஞ்சீவ் குமார் திவாரி என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்தார். டி.ஒய்.சந்திரசூடிட நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்று கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
இதே கோரிக்கையுடன் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி இக்குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் உறுப்பினர்களாக இருப்பார்கள்
- புதிய மசோதாவின்படி, இக்குழுவில் ஒரு கேபினெட் அமைச்சர், பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் உறுப்பினர்களாக இருப்பார்கள்
இந்தியாவின் அரசியலமைப்பின்படி நிர்வாகம் (Executive), பாராளுமன்றம் (Legislature) மற்றும் நீதித்துறை (Judiciary) மூன்றும் முக்கியமான அங்கங்கள். அவ்வப்போது இவற்றிற்கிடையே கருத்து வேறுபாடுகள் உருவாவதுண்டு.
அத்தகைய ஒரு சூழ்நிலையை தோற்றுவிக்க கூடிய ஒரு சட்டத்திற்கான மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர மாநில தேர்தல் ஆணையர்கள் ஆகியோரின் நியமனம், சேவைக்கான நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் சம்பந்தமான ஒரு புதிய மசோதா இன்று மாநிலங்களைவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்படி பிரதமர், எதிர்கட்சி தலைவர், மற்றும் பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு மத்திய கேபினெட் அமைச்சர் ஆகிய மூவரை கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். இதற்கு பிரதமர் தலைவராக இருப்பார். இக்குழு பரிந்துரைக்கும் நபர்களை இந்திய ஜனாதிபதி தலைமை தேர்தல் ஆணையர்களாகவும், மாநில தேர்தல் ஆணையர்களாகவும் நியமனம் செய்வார்.
ஆனால் இது சம்பந்தமாக கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது.
அந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி அதன் பரிந்துரைகளின்படி ஜனாதிபதி நியமனங்களை செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. பாராளுமன்றம் இந்த நியமனங்களில் ஒரு சட்டம் கொண்டு வரும் வரை இந்த முறையே தொடர வேண்டும் எனவும் அது தெரிவித்திருந்தது.
தற்போதைய இந்த மசோதா, அந்த தீர்ப்பை நீர்த்து போக செய்யும் விதமாக உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நீதிபதிகளின் நியமனத்திலிருந்து புதுடெல்லிக்கான சேவைகள் சட்டம் வரை நீதித்துறைக்கும், மத்திய அரசாங்கத்திற்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் பின்னணியில் இந்த புதிய மசோதா அத்தகைய வேறுபாடுகளை தீவிரமடைய செய்யலாம் என அரசியல் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
- 1984ல் ம.பி. உறுப்பினராக பதிவு செய்து கொண்டார் ப்ரிதிங்கர் திவாகர்
- அதிர்ஷ்டவசமாக எனக்கு சாபமே வரமானது என்றார் திவாகர்
உத்தர பிரதேச மாநிலத்தின் உயர் நீதிமன்றம், பிரயாக்ராஜ் (முன்னர் அலகாபாத்) நகரில் உள்ளது.
இங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் ப்ரிதிங்கர் திவாகர் (Pritinker Diwaker).
திவாகர், கடந்த 1984ல் மத்திய பிரதேச பார் கவுன்சில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர். பிறகு 2005 ஜனவரி மாதம் சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரானார். கடந்த 2009ல் சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 2018 அக்டோபர் மாதம் பிரயாக்ராஜ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். 2023 அன்று தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கடந்த மார்ச் 26 அன்று பிரயாக்ராஜ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனமானார்.
பிரயாக்ராஜ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ப்ரிதிங்கர் திவாகரின் பணிக்காலம் முடிவடைந்து அவர் விடைபெற்று செல்வதால், நேற்று அவருக்கு விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது:
இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜியம், என்னை துன்புறுத்துவதற்காகவே பிரயாக்ராஜ் நீதிமன்றத்திற்கு மாற்றல் வழங்கியது. அது ஒரு கெட்ட நோக்கத்தில் வழங்கப்பட்ட பணி மாறுதல். ஆனால், அதிர்ஷ்டவசமாக, சாபமே வரமானது போல் எனக்கு மிகவும் உற்சாகமான வரவேற்பும், சக பணியாளர்களின் ஒத்துழைப்பும், பார் கவுன்சில் உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தது. எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை தற்போதைய இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சரி செய்தார். அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் உயர் நீதிமன்ற மட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் அமைப்பே முடிவுகளை எடுக்கும் இறுதி அதிகாரம் கொண்டது. இந்த அமைப்பில் முழுவதும் நீதிபதிகளே உள்ளதால், "நீதிபதிகளை நீதிபதிகளே நியமிப்பது" எனும் வழிமுறை சரியல்ல என பலர் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பின் நியமன முடிவை ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியே விமர்சித்திருப்பதற்கு சட்ட நிபுணர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- தேர்தல் ஆணையர் நியமன மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
- இதனை எதிர்த்து மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
புதுடெல்லி:
இந்தியாவின் அரசியலமைப்பின்படி நிர்வாகம் (Executive), பாராளுமன்றம் (Legislature) மற்றும் நீதித்துறை (Judiciary) என மூன்றும் முக்கியமான அங்கங்கள். அவ்வப்போது இவற்றிற்கிடையே கருத்து வேறுபாடுகள் உருவாவதுண்டு.
அத்தகைய ஒரு சூழ்நிலையை தோற்றுவிக்கக்கூடிய ஒரு சட்டத்திற்கான மசோதா கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர மாநில தேர்தல் ஆணையர்கள் ஆகியோரின் நியமனம், சேவைக்கான நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் சம்பந்தமான ஒரு புதிய மசோதா கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி மாநிலங்களைவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு மத்திய கேபினெட் அமைச்சர் ஆகிய 3 பேரை கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். இதற்கு பிரதமர் தலைவராக இருப்பார். இக்குழு பரிந்துரைக்கும் நபர்களை இந்திய ஜனாதிபதி தலைமை தேர்தல் ஆணையர்களாகவும், மாநில தேர்தல் ஆணையர்களாகவும் நியமனம் செய்வார்.
இதற்கிடையே, மத்திய மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் கூறுகையில், பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை 3 பேர் அடங்கிய குழு தேர்வு செய்யும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும் வகையில், சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் விதிமீறல் இல்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்திய தண்டனை சட்டம் 597-வது பிரிவில் தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க வகை செய்கிறது. பெண்ணுக்கும் சமமான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர்.
அப்போது ஆணுக்கு மட்டும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கும் 597-வது பிரிவு ரத்து செய்யப் படுவதாகவும் தகாத உறவு குற்றம் இல்லை என்றும் பரபரப்பு தீர்ப்பளித்தனர்.

கணவர் என்பவர் பெண்ணின் எஜமானர் அல்ல. ஆணுக்கு பெண் சமம். இதில் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விரோதம் ஆகும். ஆணுக்கு சமமாக பெண்களையும் நடத்த வேண்டும். இதில் பாகுபாடு காட்டுவது சட்ட விதிமீறல் ஆகும்.
கணவன்-மனைவி இடையே விவாகரத்து நடக்க தகாத உறவு காரண மாகிறது. தகாத உறவு விஷயத்தில் அதில் யாரும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் அது குற்றம் இல்லை. தகாத உறவில் விவாகரத்து நடக்கலாம். யாரும் தற்கொலைக்கு தூண்டப்படக்கூடாது.
திருமணமான பெண் கணவருடன் மட்டுமல்ல, வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தால் அது குற்றம் இல்லை. மேற்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் தகாத உறவு குற்றம் இல்லை. எனவே ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் 597-வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அது ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார். #Adultery #Section497 #SupremeCourt