என் மலர்
நீங்கள் தேடியது "Chief Minister MK Stalin"
- தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- 2024-ம் ஆண்டு தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் சண்முகபுரம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இதில் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழ் மொழி வளர்ச்சிக்காக தலைவர் கலைஞருடன் மாணவ பருவமுதல் பேராசிரி யர் அன்பழகன் கொள்கைப் பிடிப்போடு சுய மரியாதை யுடன் பல நூல்களை எழுதினார். அதற்கு பெருமை சேர்க்கும் நூற்றாண்டு பணியை பாராட்டும் வகையில் கல்வி இயக்க வளாகத்திற்கு அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் 3 பெரிய தொழிற்சாலைகள் வரவுள்ளன. அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுக மாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது. விவசாயி களுக்கு என தனி பட்ஜெட் உள்ளன.
தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை நாங்கள் சொல்ல தயார். மோடி ஆட்சியின் சாதனைகளை நீங்கள் சொல்ல தயாரா? வேலை வாய்ப்பு இல்லை உரிமைகள் பறிப்பு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியா ருக்கு விற்பனை இது தான் உங்கள் சாதனை பல்வேறு கருத்துக்களை கூறி குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைப்பார்கள். அதற்கு நாம் இடம் அளிக்க கூடாது.
தி.மு.க. ஆட்சியில் கல்வி வேலை வாய்ப்பு மகளிர் என அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து என்று தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
2024-ம் ஆண்டு தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச்செயலளார்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவிந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச் செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனக ராஜ், மாவட்ட அணி அமைப்பா ளர்கள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், அபிராமிநாதன், கஸ்தூரிதங்கம், உமாதேவி, துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், வக்கீல் சீனிவாசன், அருணா தேவி, ஜீவன்ஜேக்கப், அந்தோணி கண்ணன், சங்கர், ராமர், பார்வதி, சரவணன், கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர்கள் வக்கீல் ஆனந்தகேபரியேல்ராஜ், அருண்குமார், முருகஇசக்கி, ஜெயக்கனி, டேனி, பிரபு, தேவதாஸ், சக்திவேல், சுரேஷ், துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர்வினோத், அருண்சுந்தர், பால்மாரி, ஆர்த ர்மச்சாது, சங்கர நாராயணன், பிக்அப் தனபால், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காங்கிரசை உள்ளடக்கிய தேசிய கூட்டணியை உருவாக்குவதன் மூலம் மட்டும்தான் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க முடியும்.
- பாரதிய ஜனதாவின் மத அரசியலுக்கு சரியான மாற்றாக ராகுல்காந்திதான் இருக்க முடியும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை:
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் பலம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும், கேள்விக்குறியும் எல்லோர் மனதிலும் உள்ளது. ராகுல்காந்தி நடத்தும் பாத யாத்திரையும், அருணாச்சல பிரதேசத்தில் கிடைத்துள்ள வெற்றியும் காங்கிரசை வளர்க்க போதாது என்றே கருதப்படுகிறது.
காங்கிரசுக்கு பல்வேறு மாநிலங்களிலும் தனி செல்வாக்கு பெற்ற மாநில கட்சிகளின் ஆதரவு கிடைப்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளது. ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவிலும் காங்கிரசை தாங்கி பிடிக்கும் முதன்மையான தலைவராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.
சமீபத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவின் பழமை வாய்ந்த காங்கிரஸ் தேசிய அளவில் தன் முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை. காங்கிரசை உள்ளடக்கிய தேசிய கூட்டணியை உருவாக்குவதன் மூலம் மட்டும்தான் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க முடியும்" என்று பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு தமிழக காங்கிரசார் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அகில இந்திய அளவில் விரைவில் காங்கிரசை உள்ளடக்கிய தேசிய கூட்டணியை அமைக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி உள்ளது. அதே போன்று தேசிய அளவில் கூட்டணி அமைந்தால்தான் பாரதிய ஜனதாவை விரட்ட முடியும்" என்று தெரிவித்தார்.
மேலும் ராகுல்காந்தியையும் அவர் புகழ்ந்து உள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், "ராகுல் காந்தியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. அவர் நாடு முழுவதும் உள்ள வெறுப்பு அரசியலை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார். அவரது வாதங்கள், அணுகுமுறைகள் தெளிவாக உள்ளன. இதன் மூலம் நாட்டின் ஒருமைபாட்டை பாதுகாக்க முடியும்" என்று கூறி உள்ளார்.
இது தவிர முதலமைச்சர் தனது பேட்டியில் பாரதிய ஜனதாவின் மத அரசியலுக்கு சரியான மாற்றாக ராகுல்காந்திதான் இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த பேட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களை நெகிழ வைத்து உள்ளது.
- முதல்வர் முக ஸ்டாலின் மிகச் சிறந்த லெக் ஸ்பின்னர்.
- கலைஞர் வீட்டிற்கு முன்பு உள்ள இடத்தில் நானும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனைவரும் கிரிக்கெட் விளையாடினோம்.
சட்டமன்றத்தில் இன்று மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போதும் சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.
அவர் கூறியதாவது:-
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரோட இல்லத்தில் தான். எனது தந்தை முதல்வர் முக ஸ்டாலின் மேயர் ஆனதும் வேளச்சேரிக்கு சென்று விட்டோம். நான் சிறு வயதாக இருக்கும் போது கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் வீட்டிற்கு முன்பு உள்ள இடத்தில் நானும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனைவரும் கிரிக்கெட் விளையாடுவோம்.
கலைஞருடனும் கிரிக்கெட் விளையாடிருக்கிறேன். வருவாங்க பந்து வீசிட்டு பேட் செய்து விட்டு போயிருவாங்க. கலைஞர் மட்டும் இல்ல தற்போதைய முதல்வர் முக ஸ்டாலினுடனும் விளையாடி இருக்கிறேன். முதல்வர் மிகச் சிறந்த லெக் ஸ்பின்னர். அவர் பந்து வீசினா யாராலும் அடிக்கமுடியாது.
இங்க எப்படி சிக்சர் அடிக்கிறாரோ அதுபோலதான் பவுலிங்லயும் சிறப்பாக செயல்படுவார்.
"முதல்வர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர்" -"கலைஞர், முதல்வர் இருவரோடும் விளையாடி இருக்கிறேன்#TNAssembly2023 | #ThanthiTVhttps://t.co/nj5ZNszgIj
— Thanthi TV (@ThanthiTV) April 11, 2023
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
- இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் அரியானா அணியை வென்று, முதலிடம் பெற்று தங்கப் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
- கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
சென்னை:
27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்- 2023 போட்டி, பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்தரில் ஜூன் 12 முதல் 28 வரை நடைபெற்றது. இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் அரியானா அணியை வென்று, முதலிடம் பெற்று தங்கப் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் டி.தேவி, என்.சவுமியா, பி. தனலட்சுமி, எஸ்.கவுசல்யா, என்.லாவண்யா, எம்.பவித்ரா, பி.துர்கா, எஸ்.சண்முகப்பிரியா, எம்.சுபாஷிணி, எம். பரமேஸ்வரி, எஸ். பிரியதர்ஷினி, எம்.மாளவிகா, எம்.நந்தினி, ஏ. கார்த்திகா, கே. இந்துமதி, ஆர். வினோதினி, எஸ். ஐஸ்வர்யா, ஆர். சந்தியா, பி.சந்தியா, எஸ். சண்முகப்பிரியா, ஆர். யுவராணி, என். அம்சவள்ளி மற்றும் பயிற்சியாளர்கள் எஸ். கோகிலா மற்றும் வி. கலா ஆகியோர் பங்கேற்றனர். இந்த அணியில் உள்ள 12 வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவியர்கள்.
தங்க கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்று, முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- செல்வ பிரபு கடந்த ஆண்டு கொலம்பியாவில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஆவார்.
- ஆசிய தடகள சம்மேளனத்தின் 50-வது ஆண்டு விழா தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.
சென்னை:
ஆசிய தடகள சம்மேளனத்தின் சிறந்த வீரராக (20 வயதுக்கு உட்பட்டோர்) தமிழகத்தை சேர்ந்த டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) வீரர் செல்வ பிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் இந்த விருதை பெறும் முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.
மதுரையை சேர்ந்த 19 வயதான செல்வ பிரபு கடந்த ஆண்டு கொலம்பியாவில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஆவார். ஆசிய தடகள சம்மேளனத்தின் 50-வது ஆண்டு விழா தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவில் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது.
ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வபிரபுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மென்மேலும் புதிய சாதனைகளை படைத்து தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபுக்கு பாராட்டுகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
- தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதியில் நுழைய அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
- தென்கொரியா, பாகிஸ்தான் அணிகள் தங்களது கடைசி ஆட்டங்களில் ‘டிரா’ செய்தாலே அரைஇறுதிக்கு நுழைந்துவிடும்.
சென்னை:
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
6 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஹர்மன் பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 3 வெற்றி, 1 டிராவுடன் 10 புள்ளிகள் பெற்றும், மலேசியா 3 வெற்றி, 1 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்றும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. சீனா 1 டிரா , 3 தோல்வியுடன் 1 புள்ளியுடன் வாய்ப்பை இழந்தது.
நடப்பு சாம்பியன் தென்கொரியா 1 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், பாகிஸ்தான் 1 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஜப்பான் 2 டிரா, 2 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன அரை இறுதியில் நுழைவதற்கான எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் இந்த 3 அணிகளும் இருக்கின்றன.
இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் ஜப்பான்-சீனா( மாலை 4 மணி), மலேசியா-தென் கொரியா (மாலை 6.15 மணி), இந்தியா-பாகிஸ்தான் (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்க்கிறார்.
தென்கொரியா, பாகிஸ்தான் அணிகள் தங்களது கடைசி ஆட்டங்களில் 'டிரா' செய்தாலே அரைஇறுதிக்கு நுழைந்துவிடும். ஜப்பான் அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் தென்கொரியா, பாகிஸ்தான் அணிகள் தோற்றாக வேண்டும்.
அப்படி நிகழ்ந்தால் 3 அணிகளும் 5 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். கோல்கள் அடிப்படையில் 2 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். கோல்கள் வித்தியாசத்தில் ஜப்பான் பின்தங்கி காணப்படுகிறது.
ஜப்பான்-சீனா அணிகள் மோதும் போட்டிக்கு பிறகே கொரியா மற்றும் பாகிஸ்தான் ஆட்டம் நடக்கிறது. இதனால் அதற்கு ஏற்ற வகையில் இரு அணிகளும் விளையாடும். தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதியில் நுழைய அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
- 2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- நமது திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு.
தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, நமது #DravidianModel அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது.
கூடுதல் தகவல்… இது ஒன்றிய அரசின் புள்ளிவிவரம்!
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம்! #தலைநிமிரும்_தமிழ்நாடு!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை.
- அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர், தேனி பெரியகுளத்தில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில், தேனி உழவர் சந்தை, பாரஸ்ட் ரோட்டில் நடைபயணம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் வாக்கு சேகரித்தார்.
இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியகுளம் சாலையில் உள்ள என்.ஆர்.டி. ரோடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையோர கடைகளிலும், நடந்து சென்ற பொதுமக்களிடமும் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தார்.
பின்னர் உழவர் சந்தைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சாலையோர வியாபாரிகள் கைகுலுக்கி வரவேற்பு தெரிவித்தனர். அவர்களிடம் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். காய்கறிகள் வாங்க வந்த பெண்களிடமும் மகளிர் உரிமைத் தொகை முறையாக கிடைக்கிறதா? என்று விசாரித்தார்.
அதற்கு பெண்கள் தங்களுக்கு உரிமைத்தொகை சரியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதாகவும், இதனால் தங்கள் குடும்ப செலவுக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டனர்.
அதன் பின் சாலையோரம் இருந்த ஒரு தேனீர் கடையில் அமர்ந்து எளிமையான முறையில் தேனீர் குடித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த எளிமையான பிரசாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. முதல்-அமைச்சருடன் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.
- ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சறற் நினைக்கிறது பாஜக அரசு.
- ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி.
கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.10.76 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பாஜக கூறுவது அப்பட்டமான பொய்க்கணக்கு எனக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜ.க. அரசு.
இது அப்பட்டமான பொய்க்கணக்கு!
இதில் இரண்டு கூறுகள் உள்ளன:
1) மத்திய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி.
மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது.
இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே!

2) மத்திய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு.
இதில் பாஜக காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா?
இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி,
ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி,
சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று, ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு.
இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?
இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது!
தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது மத்திய பாஜக அரசு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்?
எங்கள் காதுகள் பாவமில்லையா!
- திருமண வரவேற்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது.
- உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்துகின்றனர்.
புதுக்கோட்டை:
தமிழக சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான எஸ்.ரகுபதியின் பேரன் டாக்டர் எஸ்.நாச்சியப்பன் ரகுபதி-டாக்டர் பி.அழகம்மை திருமணம் புதுக்கோட்டையை அடுத்த புதுப்பட்டியில் உள்ள மணமகள் இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி அளவில் புதுக்கோட்டை ஜெ.ஜெ. அறிவியல் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
மணமக்களை தமிழக முதல்-அமைச்சரும். தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்துகின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.
அங்கிருந்து மாலை 5 மணிக்கு தனி விமானத்தில் மாலை 5.50 க்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து 6 மணிக்கு காரில் புறப்பட்டு 6.45 மணிக்கு புதுக்கோட்டை செல்கிறார்.
புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரியில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். பின்பு அங்கிருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்பு 8.15 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லை ஆகிய இடங்களில் தி.மு.க. வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
- ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் மேல்படிப்பு படிக்க 3 மாதம் சென்றாலும் என் இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும்.
- மாணவனாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்தாலும் எனது சண்டை தொடரும்.
சென்னை:
முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அமெரிக்கா சுற்றுப்பயணம் செல்கிறார். முதலமைச்சர் பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த 3 முறை பயணம் தோல்வியில் முடிந்ததை போல் அமெரிக்க பயணமும் தோல்வியில் முடிந்துவிடக்கூடாது. பெரிய திட்டங்களுடன் அமெரிக்கா செல்லும் முதல்வர் ஏதேனும் நன்மையை தமிழகத்திற்கு கொண்டுவருகிறாரா என பார்ப்போம். அமெரிக்காவில் அதிக தமிழர்கள் உள்ளனர். அவர்களிடம் பேசினாலே ஆயிரக்கணக்கான முதலீடுகளை தமிழகம் கொண்டுவரலாம்.
முதலமைச்சரின் முதல் 3 வெளிநாடு பயணத்தையும் தோல்வி பயணமாக தான் பார்க்கிறேன். சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் பயணங்களை மேற்கொண்ட முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன். கடந்த வெளிநாட்டு பயணங்களில் பெறப்பட்ட முதலீடுகள் எவ்வளவு? அதன் தற்பொதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை தேவை.
கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு மூலம் RTE உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.5,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்தனை வருடங்களாக Right to education மூலம் பணம் வந்திருக்கிறது. திமுக அரசு நாடகம் ஆடுவதாக அண்ணாமலை.
நவீன மயமாக்கப்பட்ட மாநில அரசு PM Shree பள்ளிகள் தமிழகத்திற்கு வேண்டும் என ஒத்துக்கொண்டுள்ளது. திட்டத்திற்கு ஒத்துக்கொண்ட தமிழக அரசு மும்மொழி கொள்கை இருப்பதால் கையெழுத்திட மறுக்கிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் மேல்படிப்பு படிக்க 3 மாதம் சென்றாலும் என் இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். மேல்படிப்பிற்காக லண்டன் சென்றாலும் அறிக்கை மூலம் பேசிக்கொண்டே இருப்பேன் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மாணவனாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்தாலும் எனது சண்டை தொடரும், அறிக்கை மூலம் பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நண்பர் கமல்ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, அமரன் திரைப்படம் பார்த்தேன்.
- நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பெரிய சல்யூட்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
அமரன் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு படக்குழுவினர் சிறப்பு திரையிடல் செய்தனர். அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

அமரன் படத்தை பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன்.
புத்தகங்களைப் போல்- திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் இயக்குநர் ராஜ்குமார் படமாக்கியுள்ளார்.
மேஜர் முகுந்த் வரதராஜன்- திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும்- நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பெரிய சல்யூட் என பதிவிட்டிருந்தார்.