என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Child Care"
- வெதுவெதுப்பான நீர் அருந்துவது ஏராளமான நன்மைகளை உடலுக்கு அளிக்கும்.
- சளி கட்டிகளால் ஏற்படும் தொண்டை புண்ணை ஆற்றவும் உதவும்.
மழைக்காலம் தொடங்கியதும் குழந்தைகள் சாதாரண குடிநீருக்கு விடை கொடுத்துவிட்டு வெந்நீர் குடிப்பது நல்லது. ஏனெனில் வெந்நீர் மழைக்கால நோய்களான சளி, இருமல் பிரச்சனை வராமல் தடுக்கும். இயல்பாகவே வெதுவெதுப்பான நீர் அருந்துவது ஏராளமான நன்மைகளை உடலுக்கு அளிக்கும். அவற்றுள் 7 பலன்கள் பற்றி பார்ப்போம்.
1. தொண்டைக்கு இதமளிக்கும்
ஒரு கப் சூடான நீரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்து வெளிப்படும் நீராவியை மூக்கு துவாரங்கள் வழியாக ஆழமாக உள்ளிழுக்க வேண்டும். பின்பு அந்த நீரை பருக வேண்டும். அப்படி சூடான நீரை உள்ளிழுப்பதும், பருகுவதும் சைனஸ் மற்றும் தொண்டை பகுதிகளை சூழ்ந்திருக்கும் சளி சவ்வுகளுக்கு இதமளிக்கும். அந்த பகுதியை சூடேற்றுவதோடு சளி கட்டிகளால் ஏற்படும் தொண்டை புண்ணை ஆற்றவும் உதவும்.
தேநீர், வெந்நீர் போன்ற சூடான பானம் மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, சோர்வு போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் என்பதை ஆய்வு முடிவுகளும் உறுதிபடுத்தியுள்ளன.
2. செரிமானத்திற்கு உதவும்
வெந்நீர் குடிப்பது செரிமான மண்டல செயல்பாடுகளை ஊக்குவிக்க உதவும். வயிறு மற்றும் குடல் வழியாக வெந்நீர் செல்லும்போது, உடல் கழிவுகளை அகற்றுவதற்கும் துணை புரியும். குறிப்பாக செரிமானமாவதில் சிக்கல் இருந்தால் சூடாக நீர் பருகுவது பலனளிக்கும்.
அப்படி வெந்நீர் பருகுவது செரிமானத்திற்கு உதவுவதாக உணர்ந்தால் அதனை தொடர்வது எந்த தீங்கும் விளைவிக்காது என்பது ஆய்வுகளின் மூலம் உறுதியும் செய்யப்பட்டிருக்கிறது.
3. நரம்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்தும்
போதுமான அளவு தண்ணீரோ, வெந்நீரோ, குளிர்ந்த நீரோ பருகாவிட்டால் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இறுதியில் மன நிலை மற்றும் மூளை செயல்பாட்டில் பாதிப்பை உண்டாக்கலாம்.
போதுமான அளவு தண்ணீரோ, வெந்நீரோ பருகுவது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும், மனநிலையையும் மேம்படுத்தும் என்பது ஆய்வுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.
4. மலச்சிக்கலை போக்கும்
மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நீரிழப்பும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அதனால் மலச்சிக்கலை போக்குவதற்கு தண்ணீர் சிறந்த வழிமுறையாக இருக்கிறது. உடலில் நீரேற்றத்தை தக்கவைப்பது மலத்தை மென்மையாக்கும்.
தொடர்ந்து வெந்நீர் பருகுவது குடல் இயக்கங்களை சீராக வைத்துக்கொள்ள உதவும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிவாரணம் தரும்.
5. நீரேற்றமாக வைத்திருக்கும்
வெந்நீரோ, தண்ணீரோ அதனை எந்த வெப்பநிலையில் பருகினாலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். பெண்கள் குறைந்தபட்சம் 2.3 லிட்டர் தண்ணீரும், ஆண்கள் குறைந்தபட்சம் 3.3 லிட்டர் தண்ணீரும் பருக வேண்டும் என்று இன்ஸ்டிடியூட் ஆப் மெடிசின் அமைப்பு பரிந்துரைக்கிறது.
எல்லா நேரமும் அருந்த முடியாவிட்டாலும் தினமும் காலை பொழுதில் வெந்நீர் அருந்தும் பழக்கத்தை தொடரலாம். உடலின் அனைத்து அத்தியாவசிய செயல்பாடுகளுக்கும் தண்ணீர் மிகவும் தேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
6. குளிரில் நடுக்கம் குறையும்
குளிர்ச்சியான சூழலின் போது சூடான திரவங்களை பருகுவது உடல் நடுக்கத்தை குறைக்க உதவும். அந்த சமயத்தில் சூடான நீரை பருகுவது உடல் வெப்பநிலையை பராமரிப்பதற்கும் உதவிடும்.
குளிர்ச்சியான சூழலில் வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வு முடிவுகளும் கூறுகின்றன.
7. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
வெதுவெதுப்பான நீரில் குளியல் போடுவது தமனிகள், நரம்புகளை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். ரத்த அழுத்தம், இதய நோய் அபாயம் ஏற்படுவதை தடுக்கும். வெந்நீர் குடிப்பதும் இதேபோன்ற விளைவை ஏற்படுத்தும்.
அதிலும் இரவில் சுடு நீரில் குளியல் போடுவதும், வெந்நீர் அருந்துவதும் உடலை ஆசுவாசப்படுத்தி நிம்மதியான உறக்கத்திற்கு தயார்படுத்த உதவும்.
எப்படி பருகுவது?
மிகவும் சூடாக இருக்கும் நீரை குடிப்பது உணவுக்குழாயில் உள்ள திசுக்களை சேதப்படுத்தலாம். நாக்கின் சுவை மொட்டுகளையும் பாதிக்கும். அதனால் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.
வெந்நீர் மற்றும் சூடான பானங்களை அருந்தும்போது, 130 முதல் 160 டிகிரி பாரன்ஹீட் வரையே வெப்பநிலை இருக்க வேண்டும்.
- கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுதல்.
- உடல் செயல்பாடுகள் அதிகம் உள்ள விளையாட்டுகளை தவிர்ப்பது.
வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பது என்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. 2019-ம் ஆண்டில் 5 வயதுக்குட்பட்ட 38.2 மில்லியன் குழந்தைகள் அதிக எடை அல்லது பருமனாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க காரணம் அவர்கள் உட்கொள்ளும் கலோரியைவிட குறைவான கலோரிகளை செலவிடக்கூடிய செயல்பாடுகளில் மட்டுமே ஈடுபடுவதாகும்.
எனவே குழந்தைகளுக்கு சாப்பாடு பரிமாறும் போது தட்டு நிறைய எல்லாவற்றையும் வைத்து கட்டாயமாக சாப்பிட வேண்டும் என்று சொல்லக்கூடாது. அதற்கு மாற்றாக அவர்களுக்கு பிடிக்காத அல்லது அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கூட சத்துக்கள் நிறைந்த உணவுகளை வித்தியாசமாக அவர்கள் சாப்பிடும் விதத்தில் செய்து கொடுக்கலாம்.
மேலும் சத்தான சாப்பாடு என்ன என்பதனையும் அவர்களுக்கு விளக்கி கூறலாம். துரித உணவுகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் விளக்கி கூறலாம்.
உதாரணத்துக்கு கீரைகளை குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள். கீரையை வடை அல்லது ஸ்டஃப்டு பரோட்டாவாக செய்து கொடுக்கும் போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஃப்ரைடு ரைஸ் குழந்தைகளுக்கு பிடித்தமான மற்றொரு உணவாகும். எனவே வீட்டில் ஃப்ரைடு ரைஸ் செய்து கொடுக்கும் போது பொடியாக நறுக்கிய விதவிதமான காய்கறிகள், பன்னீர், கொண்டை கடலை போன்றவற்றை கலந்து கொடுக்கலாம்.
எடை அதிகரிக்க காரணம்:
* கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுதல்.
* வீட்டிற்குள்ளேயே அமர்ந்துகொண்டு நீண்டநேரம் டிவி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது.
* சத்தாண உணவிற்கு பதிலாக சோடாக்கள், ஐஸ்கிரீம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், நொறுக்கித்தீனி வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாக்லேட் போன்றவற்றை அதிக உட்கொள்ளுதல்.
* உடல் செயல்பாடுகள் அதிகம் உள்ள விளையாட்டுகளை தவிர்ப்பது, ஆகியவற்றால் குழந்தைகள் எடை அதிகரிக்கிறது.
எடை அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்:
உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களுக்கு உடல் பருமன் முக்கிய காரணமாக உள்ளது.
* நீரிழிவு, கீழ்வாதம், எண்டோம்ண்ட்ரியல், மார்பகம், கருப்பை, புரோஸ்டெட், கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம் மற்றும் பெருங்குடல் ஆகியவற்றில் புற்றுநோய், இருதய பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாக அதிகாரப்பூர்வ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
* குழந்தைகள் சுவாசிப்பதில் சிக்கல், உயர் ரத்தம் அழுத்தம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உளவியலான பிரச்சனைகளுக்கும் குழந்தைகள் காரணமாகின்றனர்.
- குழந்தை வளர்ப்பு என்பது பல்வேறு சவால்கள் நிறைந்தது.
- குழந்தைகளுடன் பேசி மகிழ்வது வலுவான பந்தத்தை ஏற்படுத்தும்.
குழந்தை வளர்ப்பு என்பது பல்வேறு சவால்கள் நிறைந்தது. ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் அன்பும், உணர்ச்சியும் கலந்த வலுவான பந்தத்தை கட்டமைக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் வேலை, தொழில் நிமித்தமாக குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவளிக்க முடிவதில்லை.
எவ்வளவு பிசியானவராக இருந்தாலும் தூங்கச் செல்வதற்கு முன்பாவது குழந்தைகளுடன் நேரம் செலவிடும் வழக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்போது சில விஷயங்களை பேசுவதை தவிர்க்க வேண்டும். அவை குறித்து பார்ப்போம்.
வலுவான பந்தம்
பெரும்பாலானவர்களுக்கு இரவில் தூங்க செல்வதற்கு முந்தைய நேரம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட ஏற்புடையதாகவே இருக்கும். அந்த நேரத்தை டி.வி. பார்ப்பது, செல்போன் பார்ப்பது போன்ற வேறு வகையில் செலவிடாமல் குழந்தைகளுடன் பேசி மகிழ்வது வலுவான பந்தத்தை ஏற்படுத்தும்.
அதேநேரத்தில் நேர்மறையான விஷயங்களை மட்டுமே குழந்தைகளிடம் பேச வேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின் தூக்கத்தை பாதித்து, மன ரீதியாக பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்.
எதிர்கால கவலை
தூங்கச் செல்வதற்கு முன்பு பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதிர்கால கவலைகளை பற்றி பேசக்கூடாது. அது அவர்களை கவலையடைய செய்வதுடன் தூக்கத்தையும் பாதிக்கும்.
தண்டனை
தூங்கும் முன்பு குழந்தைகளை தண்டிப்பதையும், அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும். அவர்களை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் உணர செய்யும் விதமாக நேர்மறையான கருத்துக்களை பேச வேண்டும்.
ஒப்பிடுதல்
தூங்கும் முன்பு குழந்தைகளுடன் பேசும்போது தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது. அது தன்னை தானே தாழ்த்திக்கொள்ள வழிவகை செய்துவிடும்.
மற்றவர்களுடன் ஒப்பிடாமல் அவர்களின் தனித்துவமான தனித்திறன்களைப் பற்றி பேச வேண்டும். அதனை மெருகேற்றுவதற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும். அவர்களின் திறமைகளை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.
பொய் வாக்குறுதி
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வேலையை கொடுத்து அதனை நிறைவேற்றிக்கொடுத்தால் பரிசு தருவதாக தவறான வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது. அவர்களை நம்ப வைத்து வேலை வாங்குவதும், அந்த வேலையை செய்து முடித்த பின்பு எதுவும் வாங்கிக்கொடுக்காமல் ஏமாற்றுவதும் தவறான பழக்கம்.
பெற்றோர் பிள்ளைகளிடத்தில் வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் குழந்தைகளும் அதையே பின்பற்றத் தொடங்கி, பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வார்கள்.
எதிர்மறையான விஷயங்கள்
தூங்கும் முன்பு குழந்தைகளின் மனதில் நேர்மறையான வார்த்தைகளை பதிய வைக்க வேண்டும். எதிர்மறையான விஷயங்களை சொல்வது அவர்களை மன வேதனைக்குள்ளாக்கும்.
தங்களை தாங்களே கேள்வி கேட்டு தேவையற்ற மனக்குழப்பத்திற்கு ஆளாவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் நேர்மறையான கருத்துக்களை வழங்குவதும் அவர்களை ஊக்குவிப்பதும் முக்கியம்.
- பிறருடைய உணர்வுகளை மதிப்பதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
- குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
மழலை பருவத்தின்போதே குழந்தைகளிடம் சின்ன சின்ன வாழ்வியல் விஷயங்களை கற்றுக்கொடுத்துவிட வேண்டும். அவற்றை அவர்கள் பின்பற்றுவதற்கும் பெற்றோர் வழிகாட்டியாக இருக்க வேண்டும். அப்படி ஆரம்பக்கட்டத்திலேயே கற்றுக்கொடுக்க வேண்டிய அடிப்படை வாழ்வியல் பாடங்கள் இவை..
முழு கவனத்துடன் கேட்கும் கலை
மற்றவர்கள் பேசும்போது அதை கவனமாகக் கேட்பதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பேசுபவர்களின் கண்களை பார்த்தபடி கேட்பது, அவர்களின் பேச்சில் குறுக்கிடாமல் இருப்பது, அவர்கள் பேசும் விஷயத்தை மனதில் பதியவைப்பது போன்ற விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். அதன்படி செயல்படுகிறார்களா? என்பதையும் பெற்றோர் கவனிக்க வேண்டும். அப்படி முழு கவனத்துடன் கேட்கும் கலையை வளர்த்துக்கொள்வது பிறருக்கு மரியாதை கொடுப்பதற்கும், தகவல் தொடர்பை வளர்த்துக்கொள்வதற்கும் வழிவகுக்கும்.
மதிக்கும் பண்பு
பெற்றோர்கள், ஆசிரியர்கள், மூத்தவர்கள், அதிகாரிகள் போன்றவர்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அதனை பின்பற்றுவது, பிறருக்கு உரிய மரியாதையை கொடுக்கும் பண்பை குழந்தை பருவத்திலேயே வளர்த்துக்கொள்ள வழிகாட்டும்.
அட்டவணை
அன்றாடம் செய்யும் விஷயங்களை முறையாக மேற்கொள்வதற்கு அட்டவணை தயாரிக்கவும், திட்டமிடவும் கற்றுக்கொடுக்க வேண்டும். சாப்பிடும் நேரம், வீட்டுப்பாடம் செய்யும் நேரம், விளையாடும் நேரம், தூங்கும் நேரம் என எல்லாவற்றையும் அட்டவணைப்படுத்தி அதன்படி அவர்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த நடைமுறை, ஒழுக்கத்தையும் பொறுப்புணர்வையும் வளர்க்க உதவும்
நாகரிகமான சொற்கள்
சிறு வயதில் இருந்தே, 'தயவுசெய்து', 'நன்றி', 'தவறு செய்திருந்தால் என்னை மன்னிக்கவும்' போன்ற நாகரிகமான சொற்களை உபயோகிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இவை பிறரிடத்தில் மரியாதைக்குரிய தொடர்புகளை வளர்த்துக்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.
பொறுப்பு ஏற்பது
குழந்தைகள் தாங்கள் செய்யும் செயல்களுக்கு தாங்களே முழு பொறுப்பையும் ஏற்க கற்றுக்கொடுக்க வேண்டும். சந்திக்கும் எதிர் விளைவுகளை புரிந்துகொண்டு செயல்படுவதற்கும், தவறுகளை திருத்திக்கொள்வதற்கும், தீர்க்கமாக முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்வதற்கும் வித்திடும்.
மற்றவர்களுக்கு உதவுவது
பெற்றோருக்கு வீட்டு வேலைகளில் உதவுவது, வகுப்புத் தோழர்களுக்கு தக்க சமயத்தில் உதவுவது, கருணை காட்டுவது என உதவும் பண்பை கற்றுக்கொடுக்க வேண்டும். அக்கறை மனப்பான்மையை வளத்துக்கொள்வதற்கு இந்த நடத்தைகள் உதவும்.
சுயக்கட்டுப்பாடு
குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். பொறுமையுடன் காத்திருப்பது, விரக்தியை சுமுகமாக கையாள்வது, சுய ஒழுக்ககத்தை பின்பற்றுவது என சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படுவதற்கு வழிகாட்டும்.
நேர்மையை கடைப்பிடித்தல்
எந்தவொரு சூழலிலும் நேர்மையாக செயல்பட சொல்லிக்கொடுக்க வேண்டும். அது உண்மையை சொல்லவும், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவும் வழிவகை செய்யும்.
பின்பற்றுதல்
பெற்றோர் சொல்லும் வேலைகள், அறிவுறுத்தல்களை உடனடியாக பின்பற்றுவதற்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும். இந்த பழக்கம் பணிகளை உடனடியாக முடிப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள உதவும். கொடுத்த வேலைகளை உடனடியாக செய்து முடிக்கும் நபர் என்ற நம்பகத்தன்மையை பிறர் மத்தியில் ஏற்படுத்தவும் செய்யும்.
பிறர் உணர்வுகளை மதிப்பது
பிறருடைய உணர்வுகளை மதிப்பதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களின் மனக்குமுறல்களை அனுமதியாக கேட்கவும், உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளவும் வழிவகை செய்யும்.
- உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும்.
- எந்த வேலையும் செய்ய முடியாத சோர்களை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநல பாதிப்பு உருவாகி வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகள் ஓடியாடி விளையாடி உடல் நலனை மேம்படுத்தும் விஷயத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விடுவதால் உடற்பயிற்சி இன்றி குழந்தைகள் உடல் பருமன் அதிகரித்து, பின்னர் சிறுவயதிலேயே நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உருவாகலாம்.
செல்போனில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகளுக்கு தூக்கம் கெட்டு அவர்கள் பகல் நேரத்தில் கூட ஒருவித தூக்க கலக்கத்திலேயே இருக்கும் உணர்வுடன் காணப்படுகிறார்கள்.
நீண்ட கால தூக்கமின்மை, குழப்ப மனப்பான்மை, பதற்றம், எந்த வேலையும் செய்ய முடியாத சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் செல்போன் மூலம் தங்கள் வயதுக்கு பொருத்தமற்ற நண்பர்கள் அல்லது குழுவில் பகிர்ந்து கொள்ளும் பொருத்தமற்ற செய்திகள், ஆபாச படங்கள் அல்லது உரையாடல்களை காணும் போது அவர்கள் சிறு வயதிலேயே ஆபாசங்களை நோக்கி நகரும் அபாயம் இருக்கிறது. இது உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி நடத்தை மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இதுதவிர, தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் கை விரல் எலும்பு, கழுத்து எலும்பு தேய்மானம், கண்களில் வறட்சி மற்றும் பார்வைத்திறன் குறைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
செல்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்தி இரவில் தாமதமாக உறங்க செல்பவர்களுக்கு நோய் எதிர்ப்புதிறன் குறைவு, சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் உள்ள 74 ஆயிரம் பேரிடம் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- கல்வி என்பது, எதிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
- கல்வி முறைகள் தான் சிறப்பான எதிர்காலத்தை கட்டமைக்க உறுதுணையாக இருக்கும்.
எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. என அறியப்படும் கிண்டர் கார்டன் கல்வி முறையும், மாண்டிசோரி கல்வி முறையும்... 18-ம் நூற்றாண்டிலும், 19-ம் நூற்றாண்டிலும் கட்டமைக்கப்பட்டவை. அதைத்தான், நாம் இன்றும் பின்பற்றி, பாடம் பயில்கிறோம். அதை அப்படியே பின்பற்றினாலும், தவறில்லை.
ஆனால், 'அட்வான்ஸ்ட்' கல்வி என்ற பெயரில், 4 வயதிலேயே குழந்தைகளை எழுத, படிக்க பழக்கப்படுத்தி, அவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை குறைத்துவிடுகிறார்கள். இத்தகைய ஹைபிரீட் கல்வி முறைதான் இப்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது.
உண்மையில், குழந்தைகளை 6 வயதிற்கு மேலாகதான் எழுத-படிக்க பழக்கப்படுத்த வேண்டும் என்பது, அறிவியல் உண்மை. ஆனால் அவை இந்தியாவில் பின்பற்றப்படுவதில்லை. இங்கிலாந்து, பின்லாந்து... போன்ற நாடுகளில் மட்டுமே பின்பற்றப்படுகிறது.
குறிப்பாக, 21-ம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்டிருக்கும், இ.எல்.எஸ். எடிபிகேஷன் கல்வி முறை தான் அதிகம் பின்பற்றப்படுகிறது. இதுதான், எதிர்கால கல்வியாகவும் உருவெடுத்து வருகிறது.
இது, 21-ம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட கல்வி என்பதால், நவீன கால குழந்தைகளின் எண்ண ஓட்டங்களை புரிந்துக்கொண்டு, அதற்கு ஏற்ப கல்விமுறையை உருவாக்கி இருக்கிறார்கள். எல்.எஸ்.ஆர்.டி.டபிள்யூ.ஏ. என்ற முறையில்தான் இது இயங்குகிறது.
அதாவது லெர்னிங், ஸ்பீக்கிங், ரீடிங், டீச்சிங், ரைட்டிங், அனிமேஷன்... இப்படிதான் பாடம் கற்பிக்கப்படும். இதில் மொழி, கணிதம், அறிவியல் உள்பட வாழ்க்கைக்கு தேவையான 10 பாடங்கள் கற்பிக்கப்படும்.
ஒரு வகுப்பில் 10 நிமிட 'தியரி' பாடமும், 15 நிமிட செயல்முறை பாடமும் கற்பிக்கப்படுவது இதன் தனிப்பெரும் சிறப்பு. மழலையர் கல்வியில் சிறப்பானதாக கருதப்படும் மாண்டிசோரியில், வெறும் 32 கல்வி உபகரணங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், இதில் 64 கல்வி உபகரணங்கள் மூலமாக அறிவியலையும், வாழ்க்கை கல்வியையும் புகட்டுகிறார்கள்.
பெரும்பாலும், புதிர்கள், அட்டைப்படங்கள் மூலமாகவே கல்வி பயிற்றுவிக்கப்படும். பழைய கதைகளும், பழைய பாடல்களும் இதில் இருக்காது. ஆனால் நவீன உலகில் ஒன்றியிருக்கும் கதைகளும், எதிர்கால தொழில்நுட்பத்தை சார்ந்த பாடல்களுமே இதில் இடம் பிடிக்கின்றன.
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா... என வளர்ச்சி கண்டு வரும் இந்த கல்வி முறையை, எதிர்கால கல்வி முறையாக பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு, மேம்படுத்தி வருகின்றன.
கல்வி என்பது, எதிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதை, எல்லா உலக நாடுகளும் உணர்ந்திருப்பதால், மழலையர் கல்வி முதற்கொண்டு, இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
கல்வி முறைகள், நாளுக்கு நாள் மாறிக்கொண்டேதான் இருக்கும். அப்படி மாற்றம் காணும் கல்வி முறைகள்தான் சிறப்பான எதிர்காலத்தை கட்டமைக்க உறுதுணையாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டு, எதிர்காலத்திற்கு தேவையான கல்வி முறையில் குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். அதுவே அவர்களது எதிர்காலத்தை வளமானதாக கட்டமைக்கும்.
அதே வேளையில் ஏதேனும் நிர்பந்தத்தின் பேரில் குழந்தைகளின் கற்றல் திறனுக்கு பொருத்தமற்ற கல்வி முறைக்குள் திணித்து அவர்களின் கல்வி ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிடாதீர்கள்.
- குழந்தை விழித்திருக்கும் நேரம் மிக குறைந்த நேரம்.
- குழந்தையை தூக்கும் போதும் கவனமாக தூக்குங்கள்.
குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில் குழந்தை பராமரிப்பில் பெற்றோர்களுக்கு நிறைய குழப்பம் ஏற்படலாம். பெற்றோருக்கு இந்த குறிப்புகள் உதவியாக இருக்கும்.
* புதிதாக பிறந்த குழந்தைகள் பகலில் அதிக நேரம் தூங்குவார்கள். இரவில் விழித்திருப்பார்கள். அவர்களது உணவு முறை மற்றும் தூக்க முறை குறித்து குழப்பங்கள் இருக்கலாம்.
* பிறந்த குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு கணக்கில்லாமல் பல முறை உணவளிக்க வேண்டும். குழந்தைக்கு ஒரு மாதம் வரை ஆறு முறைக்கு மேல் உணவளிக்க வேண்டும். 12 முறை வரை உணவளிக்கலாம்.
* குழந்தை அதிக நேரம் தூங்குவார்கள் ஆனாலும் குழந்தையின் உணவு நேரத்தை கட்டுப்படுத்த கூடாது. குழந்தையை தட்டி எழுப்பியாவது பசியாற செய்ய வேண்டும்.
* பிறந்த குழந்தையின் வளர்ச்சி ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளது. 1 மாத குழந்தை பராமரிப்பில் தூக்க முறைகளை கவனிப்பது முக்கியமானது. தூங்கும் நேரம் சரியாக கணக்கிட முடியாது. குழந்தைகள் தூங்கும் நேரம் மாறுபடும். குழந்தைகள் நாள் முழுவதும் தூங்க முயற்சிக்கிறார்கள்.
* ஒரு மாத கைக்குழந்தையை அவரவர் வசதிக்கேற்ப தூங்க விடுங்கள். குழந்தையின் தூக்க குறிப்புகளை உணர்ந்து கொள்ளுங்கள். பெரும்பாலான குழந்தைகள் உணவளித்த உடனேயே தூங்கிவிடுவார்கள். அவர்களது தூக்கத்தை கெடுக்காமல் இருக்க வேண்டும்.
* குழந்தை விழித்திருக்கும் நேரம் மிக குறைந்த நேரம். குழந்தை விழித்திருக்கும் போதெல்லாம் அவர்களுடன் பழகுங்கள். குழந்தையின் பெயரை சொல்லி அழையுங்கள். குழந்தை திரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களால் புரிந்து கொள்ள முடியும். கேட்க முடியும். குழந்தைகள் இசையை கவனிப்பார்கள்.
* குழந்தையின் தலையை நேராக வைத்து கண்களை நோக்கி பேசுங்கள். குழந்தையால் பேசுவதை புரிந்து கொள்ள முடியும்.
* குழந்தையை படுக்க வைக்கும் இடம் பாதுகாப்பாக இருக்கட்டும். குழந்தைக்கு தீங்கு விளைவிக்காத இடத்தில் படுக்க வையுங்கள்.
* குழந்தை படுக்கும் அருகில் தொட்டிலில் பொம்மைகள் மற்றும் பிற பொருள்கள் வைப்பதை தவிருங்கள்.
* குழந்தையை தூக்கும் போதும் கவனமாக தூக்குங்கள்.
* குழந்தை பிறந்த ஒரு மாதத்துக்குள் அவருக்கு தடுப்பூசி தேவைப்படலாம். தடுப்பூசி அட்டவணைக்கேற்ப குழந்தைக்கு தடுப்பூசிகள் போட வேண்டும். குழந்தைக்கு தொற்றுநோய் அல்லது நோயாளிகள் உடன் நெருக்கமான தொடர்பை தவிர்க்க வேண்டும்.
* குழந்தையை தூக்கும்போதும் தாய்ப்பால் கொடுக்கும்போதும் கைகளை, உடலை சுத்தமாக வைத்திருங்கள். குழந்தையின் டயபரை அவ்வப்போது மாற்றி விட் வேண்டும். தூய்மையும் சுகாதாரமும் குழந்தையின் வளர்ச்சியை சிறப்பானதாக்கும்.
- இன்றைய இணைய உலகில் மொபைல் போன்கள் அவசியமாகிவிட்டன.
- அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது ஸ்மார்ட்போன்.
இன்றைய இணைய உலகில் மொபைல் போன்கள் அவசியமாகிவிட்டன. மொபைல்போன் இல்லாத வாழ்க்கை பலருக்கு சங்கடமாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் எல்லா நேரங்களிலும் தம்முடன் எடுத்துச்செல்லும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது.
நம்மில் பலர் தூங்கும்போது கூட மொபைல் போன்களை பக்கத்திலேயே வைத்திருப்போம். இந்த ஸ்மார்ட்போன் மோகம் குழந்தைகளையும் விட்டுவைக்க வில்லை. சிறு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன்களில் சிக்கிக்கொள்ளும் அவலநிலையே இன்றளவும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
வாட்ஸ் அப்பில் தங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, இன்ஸ்டாகிராமில் படங்களை பகிர்வது, பேஸ்புக்கில் இடுகைகளை இடுவது, யூடியூப்பில் வீடியோக்கள் பார்ப்பது, ரீல்ஸ் எடுப்பது மற்றும் கேம்கள் விளையாடுவது போன்று குழந்தைகள் மணிக்கணக்கில் செல்போனில் தான் அவர்களைது நேரத்தை செலவிடுகின்றனர்.
ஸ்மார்ட் போன் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகள் இருந்தாலும் அது அதிகம் தீங்கு விளைவிக்கும் விளைவுகளையே கொண்டுள்ளது.
மொபைல் போன்கள் குழந்தைகளின் மூளையை பாதிக்கிறது. மற்றும் பிற உடல் செயல்பாடுகளுக்கும் தீங்கு விளைவிக்கிறது. செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு அவர்களது மூளையை பெரிதும் பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மொபைல் போன்களை அதிகநேரம் பயன்படுத்துவது, தூங்கும் போது அருகில் வைத்திருப்பது ஆகியவற்றால் அவர்களின் மூளை பாதிக்கப்படும்.
மேலும் குழந்தைகள் மொபைல் போன்களை பயன்படுத்துவதால் அவர்களின் கண்களும் பாதிக்கப்படுகின்றன. மொபைல் போன் திரைகளை நீண்டநேரம் வெளிப்படுத்துவது நம் கண்களில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை கொடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக கடுமையான கண்பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். வீடியோ கேம்களை நீண்டநேரம் விளையாடும் போது விழித்திரை பாதிக்கப்பட்டு தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது மற்றும் கண்களில் விரும்பத்தகாத தாக்கங்களை உண்டுபண்ணுகிறது.
உட்கார்ந்த நிலையிலேயே இருந்து செல்போன் கேம் விளையாடுவதால் அவர்களின் முதுகெலும்புகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் உடல் பருமன், சோம்பல், மனச்சோர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
குழந்தைகள் அதிக நேரம் மொபைல் போன்களுக்கு அடிமையாகி விடுவதால், படிப்பிற்கு நேரம் ஒதுக்குவது குறைவு. இது அவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்தும் குழந்தைகள் டிஜிட்டல் அடையாள மோசடி, சைபர்புல்லிங், ஃபிஷிங், மால்வேர் போன்ற பல்வேறு சைபர் கிரைம்களுக்கு ஆளாகின்றனர். இந்த சைபர் குற்றங்கள் குழந்தைகளின் நுட்பமான மனதில் ஆழ்ந்த மன, உடல் மற்றும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்.
இணைய உலகம் பெரும்பாலும் கட்டுப்பாடற்றது. உலகளவில் பொருளாதாரங்கள் கட்டுப்பாடுகளுடன் வரும் அதே வேளையில், இணையத்தில் உள்ள உள்ளடக்கம் இன்னும் பெரும்பாலும் கட்டுப்பாடற்றதாகவே உள்ளது. இது குழந்தைகளுக்குப் பொருத்தமில்லாத உள்ளடக்கத்தை அணுகுவதற்கான வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது.
அதிகப்படியான வன்முறை, போலிச் செய்திகள், ஆபாசப் படங்கள் மற்றும் பிற பொருத்தமற்ற காட்சிகள் அல்லது செய்தி அனுப்புதல் ஆகியவற்றைக் கொண்ட உள்ளடக்கம் குழந்தைகளின் நுட்பமான ஆன்மாவில் ஆழமான மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பதிவுகள் அவர்களின் சிந்தனை மற்றும் மனநிலையில் அழியாத வடுக்களை ஏற்படுத்தலாம். பெற்றோர்கள் யோசித்து செயல்படுங்கள்.
- புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி எதுவும் இல்லை.
- சிறந்த வாசிப்பாளனால் மட்டுமே சிறந்த எழுத்தாளானாக முடியும்.
குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விட்டாலே போதும் அவர்கள் வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும்.
புத்தகங்களை படிக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுத் திறனையும், கற்பனை ஆற்றலையும், நினைவாற்றலையும் பெற்று விடுகின்றனர். இத்தகைய ஆற்றலால் பள்ளிப் பாடங்கள் படித்தல் கூட எளிதாக வசப்பட்டு விடுகிறது.
படிக்கும் போதே மகிழ்ச்சியைத் தருவது புத்தகங்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதில் வரும் பாத்திரங்களை மனதில் காட்சிப் படுத்தும் போதே கற்பனைத் திறன் விரிவடைகிறது.
மனம் சோர்ந்திருக்கும் போது ஊக்கத்தை தருவதும் புத்தகங்கள் தான். அறம் சார்ந்த சிந்தனைகளையும் சமூகம் சார்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முயல்வதும் புத்தகங்கள் தான்.
ஒரு குழந்தையை நேர்மையான வழியில் நடக்க வைப்பதற்கும், சிறந்த சமூக செயற்பாட்டாளானாக அவனை உருவாக்குவதிலும் புத்தகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.
புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி எதுவும் இல்லை. நல்ல நண்பனாக நம்முடன் பயணிப்பவை புத்தகங்கள். நம் சிந்தனையைத் துாண்டவும், சிந்தனையை புதுப்பிக்கவும் உதவுவது புத்தகங்கள்.
நம் மனதை உழுது, அதில் நல்ல பண்புகளை விதைப்பது புத்தகங்கள். சிறந்த வாசிப்பாளனால் மட்டுமே சிறந்த எழுத்தாளானாக முடியும்.
எனவே பெற்றோர்கள் புத்தகங்களை வாசிக்கும் குழந்தைகளை சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.
படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களை பரிசளியுங்கள். கதைகளை படிக்கும் குழந்தைகளை பின்னர் அந்த கதையை கூறச் செய்யலாம்.
கதை சொல்லிகளாக இருந்த பாட்டிகள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை குழந்தைகளைக் கொண்டு நிரப்புங்கள். பின்னாளில் அவர்களை சிறந்த கதை சொல்லிகளாக உருவாக்கும் நல் வாய்ப்பை புத்தகங்கள் வழங்குகின்றன.
முதலில் பெற்றோர் முன்னுதாரணமாக இருந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அப்பழக்கம் இயல்பாக மாறிவிடும்.
தேடலை உருவாக்கி அவர்களின் சிந்தனைகளைத் துாண்டிவிடும். புத்தகங்களைப் படிக்கும் போது அவை நம்மை அந்த காலத்திற்கே கடத்திச் செல்லும். இயற்கை காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். வரலாற்றுக் காலத்தின் சுவடுகளில் அவர்களை பதிய விடும்.
- குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பது நல்லது.
- குழந்தைகளுக்கு நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.
பள்ளி விடுமுறை நாட்கள் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நாட்களாகும். இந்த விடுமுறையில் குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பது பெற்றோருக்கு ஒரு சவால். குழந்தைகள் அதிக வெயிலில் விளையாடுவதால் வியர்வை வெளியேறுகிறது. அத்துடன் நீர், உப்புச் சத்தும் குறைகிறது. குழந்தைகளுக்கு தண்ணீர், மோர், பழச்சாறு போன்று அதிக நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.
குழந்தைகளிடம் வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். மண்பானை தண்ணீருடன் வெட்டிவேர், நன்னாரி வேர், சப்ஜா விதைகளை சேர்த்தால் நீரின் சுவை, மணம் கூடும். இது இயற்கையான முறை தான். தண்ணீர் குளிர்ந்து இருப்பதால் குழந்தைகள் விரும்பி அருந்துவர். இதன் மூலம் உடல்உஷ்ணத்தை தவிர்க்கலாம்.
உணவில் நீர்சத்து அதிகம் உள்ள சவ்சவ், பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம். வெயில் மதியம் 1 முதல் மாலை 4 மணிவரை அதிக பாதிப்பை தரும். இந்த நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால், சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே நிழலில் விளையாடும் கேரம் போர்டு, தாயம், பல்லாங்குழி, டேபிள் டென்னிஸ், செஸ் இவைகளை விளையாடலாம்.
குழந்தைகள் கோடையில் பருத்தி ஆடைகள் உடுத்துவது நல்லது. தினமும் காலை, மாலை இரு வேளையும் குளிக்கச்செய்ய வேண்டும். ஆண் குழந்தைகள் வாரம் இரு முறையும், பெண் குழந்தைகள் 2 நாட்களுக்கு ஒரு முறையும் தலைக்கு குளித்து வந்தால், உடல் உஷ்ணத்தை தவிர்க்கலாம். குளிக்கும் நீரில் தேவையான அளவு வெந்தயம், வெட்டிவேர் ஊற வைத்து 15 நிமிடம் கழித்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
- மனிதன் உருவான நாளில் இருந்து கதைகளும் உருவாகிவிட்டன.
- கதைகளை சுமக்காத மனிதர்கள் யாருமே இல்லை.
குழந்தையாக இருந்தபோது பாட்டியிடம் கதை கேட்டு தூங்கிய அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் அந்த அனுபவத்தை நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்திட நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம். அதற்கு பெற்றோராகிய உங்களை தயார்படுத்தும் சிறிய முயற்சி இது.
மனிதன் உருவான நாளில் இருந்து கதைகளும் உருவாகிவிட்டன. கதைகளை சுமக்காத மனிதர்கள் யாருமே இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கு பின்னும் ஒரு கதை இருக்கும். அந்த கதை வலி நிறைந்ததாகவும், மகிழ்ச்சியானதாகவும், மறக்க நினைப்பதாகவும், மறக்க முடியாதாகவும் இருக்கலாம்.
தனது கதைகளை மற்றொருவருக்கு சொல்வதன் மூலம் தனது கருத்தை, எண்ண ஓட்டத்தை மற்றவரிடம் பகிர்கிறார்கள். இதன் மூலம் தங்களது மனக்கவலை நீங்குகிறது என்றும் நம்புகிறார்கள். கதைகள் என்பவை கற்பனையாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்கிற வரைமுறை இல்லை. நாம் பார்த்தவை, நமக்குள் நடப்பவை, சில சமயம் நமக்குள் எழுகிற கனவுகள்கூட கதைகளாக மாறுகின்றன.
எனவே கதைகள் என்பவை எங்கோ தூரத்தில் இல்லை, நம்மோடுதான் இருக்கின்றன. அவற்றை கவனிக்க வேண்டும். பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றித்தான் பல கதைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. அவற்றை வாசிக்க வேண்டும். வாசித்தபின் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்.
ஏன் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்? அவர்களையே அந்த புத்தகத்தை படிக்க வைத்துவிடலாமே என்ற கேள்வி பலருக்கு எழலாம். கதைகள் குழந்தைகளை அவர்கள் பார்த்திராத புதியதோர் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அவர்களின் கற்பனைத்திறனையும், கேட்கும் திறனையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்கும். அடுத்தவரை பற்றி புரிந்து கொள்ள வழிவகை செய்யும்.
தான் வாழும் சமூகத்தையும், தான் வாழ உதவி செய்யும் எல்லா உயிர்களையும் நேசிக்க கதைகள் கற்றுக் கொடுக்கின்றன. எத்தனை கதைகளை குழந்தைகள் கேட்டாலும் ஒரு சில கதைகள் அவர்களோடு ஐக்கியமாகிவிடுகின்றன.
அவர்களது வாழ்க்கையை ஆக்கப்பூர்வமாய் மாற்றுகின்ற வேலையையும் கதைகள் செய்கின்றன. எனவே குழந்தைகளுக்கு கதைகளை சொல்லுங்கள். ஒவ்வொரு கதைக்கு பின்னும் ஒரு கருத்து நிச்சயம் இருக்கும். அதில் எந்த கருத்து உங்கள் குழந்தைக்கு தேவையோ அந்த கதையை சொல்லுங்கள்.
உதாரணமாக உங்கள் குழந்தை பயப்படுகிறது என்றால் தைரியத்தை முன்நிறுத்தும் கதையை சொல்லுங்கள். அந்த கதை உங்கள் குழந்தையின் உள்ளத்துக்குள் சென்று நம்பிக்கையை கொடுக்கும். அதனால் பெற்றோர் கதைகளை வாசிப்பதற்கு ஆர்வம் காண்பிக்க வேண்டும்.
அதில் வாழ்வியல் போதனைகளை வழங்கும் கதைகளை குழந்தைகள் ரசிக்கும் விதத்தில் சொல்லலாம். கதைகள் உங்களையும், உங்கள் குழந்தைகளையும் பக்குவமிக்க மனிதர்களாக மாற்றும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
- இயற்கை முறையில் மருந்து தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- இஞ்சியுடன் சுத்தம் செய்த வேப்பிலை சேர்த்து, சிறிதளவு உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
குழந்தைகள் பால், சாக்லேட், இனிப்பு வகைகள் சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் இருக்கும். குழந்தைகள் முகத்தில் அங்கங்கே தேமல் இருந்தால், சாப்பாடு சரியாக உட்கொள்ளாமல் இருப்பது, அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக பூச்சி வயிற்றில் இருக்கும்.
இதற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து டாக்டரிடம் காண்பித்து கொடுப்பது நல்லது. இயற்கை முறையிலும் மருந்து தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகள் என்றில்லை பெரியவர்களுக்கும் இந்த மருந்து சிறந்தது.
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 50 கிராம்
வேப்பிலை - 20 இலைகள்
தேன் - தேவையான அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை - சிறிதளவு
செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியுடன் சுத்தம் செய்த வேப்பிலை சேர்த்து, சிறிதளவு உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டவும்.
வடித்த சாறை அப்படியே 15 நிமிடம் வைக்கவும், அடியில் நஞ்சு தங்கி இருக்கும். மேலோடு தெளிந்த சாறை மட்டும் எடுத்து கசப்பு தெரியாமல் இருக்க தேவைக்கு தேன் கலந்து குடிக்கவும்.
கைக்குழந்தைகள் அதிக இனிப்பு சாப்பிட வாய்ப்பு இருக்காது தேவைபட்டால் அரை சங்கு ஊற்றலாம். 9 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 சங்கு முழுவதும் கொடுக்கலாம்.
அதற்கு மேற்பட்ட வயது மற்றும் பெரியவர்கள் கால் டம்ளர் குடிக்கலாம். சிறியவர்களுக்கு தேன் நன்றாக கலந்து கொடுக்கலாம். வயதிற்கு வந்த பெண்களுக்கு வரும் வயிறு உபாதைகளுக்கு இது சிறந்த மருந்து. கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக்கூடாது. கர்ப்பம் தரிப்பதற்கு முன், குழந்தை பெற்ற பிறகு இதை அடிக்கடி செய்து குடிக்கலாம்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் அடிக்கடி இதை செய்து குடிக்கலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்