என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "child kidnapping"
- பீகாரில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்ததாக புகார்.
- குழந்தைகளை கடத்தி விற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கோவை:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவருடைய மனைவி அஞ்சலி தேவி. இவர்கள் கோவையை அடுத்த சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் ஓட்டல் நடத்தி வந்தனர்.
இவர்கள் பீகாரில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் மகேஷ்குமார், அஞ்சலி தேவி ஆகியோரை சூலூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு ஆண் குழந்தை, பெண் குழந்தையை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி, மீட்கப்பட்ட பெண் குழந்தையை விலை கொடுத்து வாங்கியதாக திம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பவரை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக அஞ்சலி தேவியின் தாயார் பூனம் தேவி(61), தங்கை மேகாகுமாரி(21) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.
மகேஷ்குமாரும், அஞ்சலி தேவியும், தனது தாய் பூனம் தேவி மற்றும் தங்கை மேகாகுமாரி உதவியுடன், பீகாரில் வறுமையில் தவித்த குடும்பத்திடம் இருந்து அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்குவதாக கூறி ரூ.1500 கொடுத்து வாங்கியுள்ளனர்.
பின்னர் அந்த குழந்தையை கோவைக்கு கொண்டு வந்து தனது மகள் மற்றும் மருமகனுடன் சேர்ந்து, விஜயனிடம் ரூ.5 லட்சம் வரை பேரம் பேசியுள்ளனர். கடைசியாக இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விஜயனுக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதேபோல மற்றொரு ஆண் குழந்தையையும் குறைந்த விலைக்கு வாங்கி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் மேலும் சில குழந்தைகளை கடத்தி விற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- குழந்தையை விலைக்கு வாங்கியது சூலூர் திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி விஜயன் என்பது தெரியவந்தது.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
சூலூர்:
பீகாரை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மனைவி அஞ்சலி.
இவர்கள் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் பீகாரில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்தி வந்து விற்பனை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது. யாரிடம் இருந்து குழந்தை கடத்தி வரப்பட்டது. வாங்கியவர்கள் யார்? என்பது உள்ளிட்ட விரிவான விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. தங்கராமன் மேற்பார்வையில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
தனிப்படை விசாரணையில், குழந்தையை விலைக்கு வாங்கியது சூலூர் திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி விஜயன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், தங்களுக்கு குழந்தை இல்லை என்பதை தெரிந்து கொண்ட மகேஷ்குமார் ஆசை வார்த்தை கூறி சட்டப்படியான குழந்தையை பெற்று தருவதாக கூறினார். ஆனால் அவர் போலியான ஆவணங்களை கொடுத்து எங்களிடம் ஏமாற்றி குழந்தையை ரூ.2.50 லட்சத்துக்கு விற்று விட்டார் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் விஜயனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியவில்லை.
- குழந்தையை தூத்துக்குடி குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் சந்தியா (வயது34). இவர் தூத்துக்குடி பகுதியில் சுற்றித்திரிந்து யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். கடந்த 8-ந் தேதி இரவு சந்தியா தனது 4 மாத பெண் குழந்தையுடன் சாலையோரம் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அவரது குழந்தையை மர்மநபர்கள் கடத்தி சென்றனர்.
இது தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் 150 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் குழந்தையை கடத்தியது ஆலங்குளம் அண்ணாநகர் தெருவை சேர்ந்த சாமி என்ற கருப்பசாமி (47), ஆலங்குளம் கரும்பனூரை சேர்ந்த ராஜன் என்ற ராஜா (53) என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் சந்தியாவின் குழந்தை தவிர மேலும் 3 குழந்தைகளை கடத்தியது தெரியவந்தது. இவர்கள் ஆதரவற்ற நிலையில் சாலையோரம் மற்றும் திருவிழாவிற்கு வந்தவர்களை கண்டறிந்து அவர்களின் குழந்தைகளை கடத்தி, குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதற்காக அவர்கள் முன்கூட்டியே ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் குழந்தைகள் இல்லாத தம்பதிகளை அடையாளம் கண்டறிந்துள்ளனர். பின்னர் குழந்தையை கடத்திச் சென்று, இந்த குழந்தை மலைப்பகுதியை சேர்ந்தவர்களின் குழந்தை. அவர்களால் குழந்தையை வளர்க்க முடியாததால், கொடுப்பதாக கூறி விற்பனை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடத்தப்பட்ட 4 குழந்தைகளையும் அவர்கள் மீட்டனர்.
இதில் சந்தியாவின் குழந்தை மற்றும் திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினத்தில் கடத்தப்பட்ட 3 குழந்தைகளை பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியவில்லை. அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த குழந்தையை தூத்துக்குடி குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட 2 பேர் மீது சிறார் குற்ற தடுப்பு சட்டம் 80, 81, 84 மற்றும் இந்திய தண்டனை சட்டம் 363 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கருப்பசாமிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் பிரேம் ஆனந்த், ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு உள்ளிட்ட தனிப்படையினரை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர்.
- குழந்தையை கடத்திச் சென்ற 2 நபர்களின் புகைப் படங்களை தூத்துக்குடி மாவட்ட போலீசார் வெளியிட்டனர்.
தூத்துக்குடி:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 34). கணவரை பிரிந்த இவருக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது.
சமீபத்தில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள அந்தோணியார் ஆலயம் அருகே யாசகம் எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த சந்தியா அந்த பகுதியில் இரவில் குழந்தையுடன் தூங்கினார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். குழந்தை கடத்தல் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். குழந்தையை திருடிய மர்ம நபர்கள் யார் என்பதை அறிய 150-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் குழந்தையை கடத்திச் சென்ற 2 நபர்களின் புகைப் படங்களை தூத்துக்குடி மாவட்ட போலீசார் வெளியிட்டனர்.
அந்த புகைப்படங்களை வைத்து அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த கருப்பசாமி, ராஜன் என்பது தெரியவந்தது. உடனடியாக நேற்று மாலை கருப்பசாமி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இன்று காலை ராஜனும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது தூத்துக்குடியில் 4 மாத குழந்தையை கடத்தியது மட்டுமின்றி திருச்செந்தூரில் கடந்த 21.12.2022-ம் ஆண்டு நெல்லை சுத்தமல்லியை சேர்ந்த பாபநாசம் என்பவரது 2½ வயது குழந்தை முத்துப்பேச்சி மற்றும் குலசேகரன் பட்டினத்தில் கடந்த 21.10.2023-ம் ஆண்டு மற்றொரு குழந்தையையும், தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு குழந்தை என 4 குழந்தைகளை இவர்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 4 குழந்தைகளையும் தனிப்படை போலீசார் மீட்டனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் அவர்களுக்கு வேறு ஏதேனும் கடத்தலிலும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.
- 7-வயது ப்ரைசன் டுவாங், ஆசிய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த சிறுவன்
- காவல் அதிகாரிகளிடமிருந்து தப்பித்த போது ப்ராண்டனின் வாகனம் விபத்துக்குள்ளானது
அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியில் உள்ள மாநிலம் அயோவா (Iowa). இதன் தலைநகரம் டெஸ் மாயின்ஸ் (Des Moines).
அயோவாவின் க்ரீன் கவுன்டி பிராந்தியத்தில் உள்ள நகரம் ஜெஃபெர்சன். இங்குள்ள க்ரீன் கவுன்டி ஆரம்ப பள்ளியில் படித்து வந்தவர், ஆசிய வம்சாவளி சிறுவனான, 7 வயது ப்ரைசன் டுவாங் (Bryson Duong).
நேற்று மதியம், ப்ரைசனின் தந்தை ப்ராண்டன் டுவாங் (34), சுமார் 12:40 மணியளவில், பள்ளிக்கு வந்து அங்கு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ப்ரைசன் டுவாங்கை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாக பள்ளி நிர்வாகத்திடம் கூறினார். அவர்கள் மறுக்கவே, வாக்குவாதம் செய்து ப்ராண்டன் மகனை அழைத்து சென்றார். அவர்கள் இருவரும் டொயோட்டா டகோமா காரில் சென்றனர்.
இதையடுத்து காவல்துறையினருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
இருவரும் வீடு திரும்பவில்லை.
இதை தொடர்ந்து "ஆம்பர் அலர்ட்" எனும் எச்சரிக்கை வெளியிட்ட காவல்துறையினர், காணாமல் போன இருவரை குறித்தும் பொதுவெளியில் விவரங்களை வெளியிட்டு, பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறையினருக்கு உடனே தெரிவிக்குமாறு கோரினர்.
நீண்ட தேடுதலுக்கு பிறகு அவர்கள் சென்ற வாகனத்தை கண்ட காவல்துறையினர், அதனை நிறுத்த முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்று வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக்கிய ப்ராண்டன், சிறுவனை தூக்கி கொண்டு கையில் ஒரு துப்பாக்கியுடன் ஓடினார்.
ப்ராண்டனுடன் பேச்சுவார்த்த நடத்திய காவல்துறையினர், சிறுவனை மீட்டு, ப்ராண்டனை கைது செய்தனர்.
அவர் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தையை மர்ம கும்பல் யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி நேதாஜி நகரை சேர்ந்தவர் வீரபிரதாப். இவரது மனைவி சோனியா. இவர்கள் கடற்கரை மற்றும் சாலையோரம் இளநீர், சோளம், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 3 வயதில் பெண் குழந்தையும், 2½ மாதங்களே ஆதித்யா என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
இவர்கள் மிஷின் வீதியில் உள்ள ஜென்மராகினி கோவில் அருகே சாலையோர உள்ள பைக் வாடகை விடும் கடை வாசலில் படுத்து தூங்குவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு தனது குழந்தையுடன் சாலையோரம் படுத்து தூங்கினர். ஆனால் காலையில் பார்த்த போது குழந்தை ஆதித்யாவை காணவில்லை. இதனால் அவர்கள் திடுக்கிட்டனர். அங்குள்ள இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் குழந்தை கிடைக்கவில்லை. குழந்தையை மர்ம கும்பல் யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சோனியா பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கமலினி கடந்த 22ந் தேதி பிரசவத்திற்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
- எஸ்தர் மற்றும் உமா ஆகிய 2 பெண்கள் கடத்தி சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தின் காரணமாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார். இவரது மனைவி கமலினி (24). இவர்கள் பல்லடம் கே.அய்யம்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். கர்ப்பிணியான கமலினி பிரசவ வலியால் கடந்த 22&ந் தேதி பிரசவத்திற்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கமலினுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் குழந்தை பிறந்து 3 நாளே ஆன நிலையில் நேற்று உதவி செய்வது போல் நடித்து எஸ்தர் மற்றும் உமா ஆகிய 2 பெண்கள் கடத்தி சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களை போலீசார் தேடிய நிலையில் அவர்கள் தலைமறைவாகி உள்ளனர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதற்கிடையே திருப்பூர் அரசு மருத்துவமனையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக பலத்த பாதுகாப்பு போடப்படுள்ளது.அரசு மருத்துவமனைக்கு உள்ளே வருகிறவர்கள் விசா ரணை நடத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இதுபோல் மருத்துவமனையில் இருந்து வெளியே செல்கிறவர்கள் விசாரணை நடத்தப்பட்டு அனுப்பப்படுகிறார்கள். குறிப்பாக குழந்தைகளுடன் வருகிறவர்கள் அவர்களின் விவரங்கள் ஆய்வு செய்ய்பபட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இது குறித்து டீன் முருகேசன் கூறியதாவது:& அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் கமலியிடம், எஸ்தர் மற்றும் உமா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இதனால் அவர்களை நம்பி குழந்தையை கொடு த்துள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் ஒரு குழந்தை கடத்தப்பட்டதும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தினோம். அதன்படி வார்டில் ஒரு நோயாளிகளுக்கு ஒருவர் மட்டுமே இருக்க அனுமதித்து வந்தோம். தற்போது அவர்கள் நெருங்கி பழகி குழந்தையை ஏமாற்றி கடத்தி சென்றுள்ளனர். விரைவாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்போம். என்றார்.
- தருண் ஆதித்யா (4) என்பவர் கடந்த மாதம் 7- ந்தேதி நள்ளிரவு காணாமல் போய்விட்டார்.
- பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியும், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி வந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அக்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த லோக நாதன். மனைவி கவுரி (வயது 35), இவரது குழந்தை தருண் ஆதித்யா (4) என்பவர் கடந்த மாதம் 7- ந்தேதி நள்ளிரவு காணாமல் போய்விட்டார். இதுகுறித்து கவுரி கொடுத்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி குழந்தை யை கடத்திய கச்சிராபாளை யம் அருகே ஊத்தோடை, அக்கரைக்காடு பகுதி யைச் சேர்ந்த சுந்தர சோழன் (42), கச்சிராயபாளை யம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்டர்ஜாய் (33), கல்வராயன் மலை அருகே சுண்டகபாடி கிராமத்தைச் சேர்ந்த அருள்செல்வம்(29), இதே கிராமத்தைச்சேர்ந்த ரகுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்ப டைக்கப்பட்டது.
கைதான அனைவரும் தொடர்ந்து மேற்படி கிராமத்தில் பொது அமை திக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் குழந்தையை கடத்திய குற்றச்செயலில் ஈடுபட்ட துடன் பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி யும், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி வந்தனர். எனவே இவர்கள் வெளியே இருந்தால் வரும் காலங்களில் தொட ர்ந்து இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட க்கூடும் என்பதால், இவர்கள் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பகலவன் ஓராண்டு குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார். அதன்படி கள்ள க்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மேற்படி நபர்களை ஓராண்டு குண்டர் தடுப்பு க்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி 4 பேரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
சேலம் ஜான்சன்பேட்டை கிழக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்(வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு நிவேதா(9), சரவணன்(3) என்ற 2 குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியில் 10 நாட்களாக ஒரு பெண் சுற்றி திரிந்தார். நேற்று அந்த பெண் ஜஸ்டின் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிவேதாவை அழைத்து சென்றுள்ளார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் குழந்தையை மீட்டு அந்த பெண்ணை விரட்டி விட்டனர். இன்று காலை அதே பெண் ஜஸ்டின் வீட்டிற்கு சென்று நிவேதாவிடம் எனது குழந்தையை கொடு என்று கூறி அங்கு விளையாடிகொண்டிருந்த சரவணனை கடத்த முயன்றார்.
இதனால் பயந்துபோன நிவேதா உறவினர்களிடம் தகவல் கூறினார். உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு குழந்தையை மீட்டு அந்த பெண்ணை பிடித்து குழந்தையை மீட்டனர். பின்னர் அந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து தாக்கினர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் யார் என்று தெரியவில்லை, சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிவித்தனர்.
தற்போது குழந்தை கடத்தல் சம்பவம் பல்வேறு பகுதிகளில் நடப்பதால், சேலத்தில் குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்த செல்லூரை சேர்ந்தவர் முரளிதரன். 13 வயது சிறுமியான இவரது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் வேடம் பூரை சேர்ந்த யோகேஸ்வரன் (30) என்பவர் முரளிதரன் வீட்டில் தங்கி தச்சு வேலை செய்தார். அவர் நேற்று சிறுமியை அழைத்து கொண்டு மாயமாகி விட்டார். அவர்களை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றி சிறுமியின் தாய் குடவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சந்தான மேரி வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியையும் அவரை கடத்தி சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.
சிறுமியின் தந்தை முரளிதரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதுபற்றி அறிந்ததால் தான் சிறுமியை யோகேஸ்வரன் கடத்தி சென்றது தெரிய வந்தது.
முன்பின் தெரியாத நபர்களை வீட்டில் தங்க வைத்தால் இதுபோன்ற நிலைதான் ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் கூறினர். இந்த சம்பவம் குடவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
சென்னை:
சென்னையில் நேற்று நடந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் குழந்தைகள் கடத்தலின் பின்னணியில் மாபியா கும்பல் செயல்படுவதாக குற்றம்சாட்டி இருந்தார்.
ரோட்டில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை அழைத்து விசாரித்தாலே போதும், பின்னணியில் இருப்பவர்களை பிடித்து விடலாம் என்பது போன்று ரஜினியின் கருத்து அமைந்துள்ளது.
எப்போதுமே ஒரு விஷயத்தை பற்றி யார் குரல் எழுப்புகிறார்களோ அவர்களின் செல்வாக்கை பொறுத்தே அந்த விஷயமும் ஆழமாக அலசப்படும்.
அந்த வகையில் குழந்தை கடத்தல் தொடர்பாகவும், அதன் பின்னணி குறித்தும் ரஜினி குரல் கொடுத்த பின்னர் அது விவாதப் பொருளாகி இருக்கிறது. தமிழகம் முழுவதுமே காணாமல் போன பல குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளன.
இந்த நிலையில் சென்னையில் கடத்தப்பட்ட தங்களது 2 பெண் குழந்தைகளும் தங்களுக்கு மீண்டும் கிடைப்பார்களா? என்கிற ஏக்கத்துடன் 2 பெற்றோர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.
சென்னை சாலிகிராமம் மஜித்நகர் வலம்புரி விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் கணேஷ். இவரது மகள் கவிதா. கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி சிறுமி கவிதா வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனாள். அப்போது சிறுமிக்கு 2 வயதே ஆகி இருந்தது.
மகளை காணாததால் கணேசும், அவரது குடும்பத்தினரும் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதுபற்றி போலீசில் புகார் அளித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
சிறுமி கவிதா காணாமல் போனது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் வழக்கு விசாரணை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தந்தை கணேஷ் தனது மகளை மீட்டு தரக்கோரி நடையாய் நடந்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசில் அதிகாரிகள் மாறிக் கொண்டே இருந்தனர். ஆனால் வழக்கு விசாரணை மட்டும் அப்படியே இருந்தது. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஒருபக்கம் போலீசை நம்பி கொண்டே... இன்னொரு பக்கம் சாமியையும் நாடினர். போகாத கோவில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு கோவில் கோவிலாக சென்றனர். எங்கு சென்று பார்த்தாலும் குழந்தை கண்டிப்பாக கிடைப்பாள் என்றே இப்போதும் கூறு கிறார்கள். இதனால் 7 ஆண்டுகளாக ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள் சிறுமி கவிதாவின் பெற்றோர்.
சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் வசித்து வரும் பெருமாள்-லட்சுமி தம்பதியினரின் ஒரு வயது பெண் குழந்தை சரண்யா. கடந்த 2016-ம் ஆண்டு கடத்தப்பட்டது.
நடைபாதையே வாழ்க்கையாகி போனதால் குழந்தையை அரைஞான் கயிற்றோடு தனது உடலில் கட்டியபடியே தாய் லட்சுமி தூங்கினார். அப்போது காரில் வந்த ஒரு ஆணும், 2 பெண்களும் கயிற்றை கத்தியால் வெட்டி எறிந்து விட்டு குழந்தையை காரில் கடத்திச் சென்று விட்டனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் கைப்பற்றப்பட்டன. அதனை வைத்து பூக்கடை போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும் எந்த துப்பும் துலங்கவில்லை. இதனால் கடந்த 2½ ஆண்டாக பெருமாளும், லட்சுமியும் தவியாய் தவித்து வருகிறார்கள். காணாமல் போன இந்த 2 குழந்தைகளும் எங்கு இருக்கின்றன என்பது மர்மமாகவே உள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற போது காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து கொடுக்க கோர்ட்டு உத்தர விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பெற்றோர்களை போன்று கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ பெற்றோர் தங்களது குழந்தைகளை தொலைத்து விட்டு காத்திருக்கிறார்கள். எனவே கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க போலீசார் வேகம் காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. #Childkidnapping
பெரம்பூர்:
புளியந்தோப்பை சேர்ந்த பிரகாஷ்-துர்கா தம்பதியின் மகன் அஜய் (3). புளியந்தோப்பில் உள்ள உருது பால்வாடி பள்ளியில் சிறுவன் அஜய் படித்து வந்தான். கடந்த மாதம் 29-ந்தேதி மதியம் இந்த பள்ளிக்கு வந்த 2 பெண்கள் சிறுவனை கடத்திச் சென்றனர்.
சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார். இதில் வியாசர்பாடியை சேர்ந்த குட்டியம்மாள் (37). அவருடைய மகள் ஐஸ்வர்யா (20) ஆகியோர் சிறுவன் அஜய்யை கடத்தியது தெரிய வந்தது.
கடத்தப்பட்ட சிறுவனை ஓட்டேரியை சேர்ந்த ஜோதி (50) என்ற பெண் ரூ.50 ஆயிரம் கொடுத்து வாங்கினார். இதையடுத்து குட்டியம்மாள், ஜோதி, ஐஸ்வர்யா ஆகியோரை புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் ஜெயிலில் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் குழந்தையை கடத்திய குட்டியம்மாள், விலைக்கு வாங்கிய ஜோதி ஆகியோரை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவு புழல் ஜெயிலில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு ஜெயிலில் இருக்கும் குட்டியம்மாள், ஜோதி ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த சட்டப்படி 2 பேரும் ஒருவருடம் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் குழந்தை கடத்தலில் 2 பெண்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்