search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சூலூரில் ரூ.2 ½ லட்சத்துக்கு பச்சிளம் குழந்தையை வாங்கிய விவசாயி கைது
    X

    சூலூரில் ரூ.2 ½ லட்சத்துக்கு பச்சிளம் குழந்தையை வாங்கிய விவசாயி கைது

    • குழந்தையை விலைக்கு வாங்கியது சூலூர் திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி விஜயன் என்பது தெரியவந்தது.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சூலூர்:

    பீகாரை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மனைவி அஞ்சலி.

    இவர்கள் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் பீகாரில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்தி வந்து விற்பனை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சம்பவத்தில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது. யாரிடம் இருந்து குழந்தை கடத்தி வரப்பட்டது. வாங்கியவர்கள் யார்? என்பது உள்ளிட்ட விரிவான விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. தங்கராமன் மேற்பார்வையில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    தனிப்படை விசாரணையில், குழந்தையை விலைக்கு வாங்கியது சூலூர் திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி விஜயன் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், தங்களுக்கு குழந்தை இல்லை என்பதை தெரிந்து கொண்ட மகேஷ்குமார் ஆசை வார்த்தை கூறி சட்டப்படியான குழந்தையை பெற்று தருவதாக கூறினார். ஆனால் அவர் போலியான ஆவணங்களை கொடுத்து எங்களிடம் ஏமாற்றி குழந்தையை ரூ.2.50 லட்சத்துக்கு விற்று விட்டார் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    பின்னர் விஜயனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×