search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child safety"

    • தூத்துக்குடி மாவட்ட் சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நேற்று ஆத்தூர் பேரூராட்சியில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    • குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட் சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நேற்று ஆத்தூர் பேரூராட்சியில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் கமாலுதீன் தலைமையில் நடைபெற்றது.இதில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பிரதிநிதி கிளாரன்ஸ், ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஸ்வரி, ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆத்தூர் சுகாதார ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காவல்துறையினர் 24 மணி நேரமும் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • பெற்றோர்கள் தரப்பில் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி கலந்து கொண்டு குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது பற்றியும், குழந்தைகளுடைய வளர்ப்பு பற்றியும் எடுத்து கூறினார்.அப்போது காவல்துறையினர் 24 மணி நேரமும் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். யாரேனும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டாலோ அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றார்.

    இக்கூட்டத்தில் பெற்றோர்கள் தரப்பில் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்றனர். பள்ளியின் நிர்வாகத்தின் சார்பில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினர். ஒரு சில குழந்தைகள் பள்ளி நேரத்திற்கு அதிக நேரம் முன்பே வந்து விடுகின்றனர். அதனால் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் குழந்தைகளை சரியான பள்ளி நேரத்திற்கு மட்டும் தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டும். மாதந்தோறும் பள்ளியில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் அனைத்து பெற்றோர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொண்டனர்.

    கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் கே.ஆர்.முத்துகுமார், நகர துணை செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன், நகர் மன்ற உறுப்பினர் ஏ.என்.சேகர், வக்கீல் வி.கந்தசரவணகுமார் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வி. விநாயகமூர்த்தி மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு குழுவின் காலாண்டு கூட்டம் மற்றும் பெண் குழந்தைகள், வளர்இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி, இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான கண்காணிப்பு குழுக்கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை, குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும் பெண் குழந்தைகள், வளர்இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி, இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அரசாணை எண்.31-ல் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்தல் மற்றும் இவ்வகை விடுதிகளை உரிய சட்டத்தின் கீழ் பதிவு செய்தல், விடுதிகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய மாவட்டத்திலுள்ள பல்வேறு வகை துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சைல்டு லைன் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இதையடுத்து கலெக்டர் சாந்தா பேசியதாவது:-

    குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் வளர் இளம் பருவத்திலுள்ள மாணவ-மாணவிகள் இடையே தற்கொலை எண்ணத்தை தடுத்து நிறுத்தவும், வட்டார மற்றும் கிராம அளவில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கவும், குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தை நலக்குழு, சைல்டு லைன் மற்றும் கல்வித்துறை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முதன்மை நீதிபதி (இளைஞர் நீதிக்குழுமம்) அசோக்பிரசாத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) பாரதிதாசன், மாவட்ட சமூக நல அதிகாரி தமீமுன்னிசா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பூங்கொடி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி அருள்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×