search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் ஊராட்சி பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
    X

    வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது பற்றி எடுத்து கூறிய காட்சி.

    வெள்ளகோவில் ஊராட்சி பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

    • காவல்துறையினர் 24 மணி நேரமும் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • பெற்றோர்கள் தரப்பில் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி கலந்து கொண்டு குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது பற்றியும், குழந்தைகளுடைய வளர்ப்பு பற்றியும் எடுத்து கூறினார்.அப்போது காவல்துறையினர் 24 மணி நேரமும் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். யாரேனும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டாலோ அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றார்.

    இக்கூட்டத்தில் பெற்றோர்கள் தரப்பில் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்றனர். பள்ளியின் நிர்வாகத்தின் சார்பில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினர். ஒரு சில குழந்தைகள் பள்ளி நேரத்திற்கு அதிக நேரம் முன்பே வந்து விடுகின்றனர். அதனால் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் குழந்தைகளை சரியான பள்ளி நேரத்திற்கு மட்டும் தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டும். மாதந்தோறும் பள்ளியில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் அனைத்து பெற்றோர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொண்டனர்.

    கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் கே.ஆர்.முத்துகுமார், நகர துணை செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன், நகர் மன்ற உறுப்பினர் ஏ.என்.சேகர், வக்கீல் வி.கந்தசரவணகுமார் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வி. விநாயகமூர்த்தி மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×