என் மலர்
நீங்கள் தேடியது "Children Death"
- ஜாமியா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தைகள் விளையாட்டாக பெட்டிக்குள் இறங்கியபோது லாக் ஆகியிருக்கலாம் என தெரிகிறது
புதுடெல்லி:
டெல்லயின் ஜாமியா நகரில் உள்ள ஒரு வீட்டில் உள்ள மரப்பெட்டியில் இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.
ஜாமியா நகரைச் சேர்ந்த காவலாளி பல்பீரின் குழந்தைகள் நீரஜ் (வயது 8), ஆர்த்தி (வயது 6) ஆகிய இருவரும் நேற்று மதியம் பெற்றோருடன் சாப்பிட்டுள்ளனர். பின்னர் 3.30 மணியளவில் காணாமல் போயிவிட்டனர். வீட்டில் உள்ளவர்கள் நீண்டநேரமாக தேடியும் தகவல் கிடைக்கவில்லை. அதன்பின்னர் வீட்டில் இருந்த பெட்டியை திறந்து பார்த்தபோது இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்துள்ளனர்.
இதுபற்றி ஜாமியா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் விளையாட்டாக பெட்டிக்குள் இறங்கியபோது லாக் ஆகியிருக்கலாம் என்றும், இதன் காரணமாக மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.
குழந்தைகளின் உடலில் காயம் ஏதும் இல்லை என்றும், தற்செயலாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
- முதல் ஆறு மாதங்களில் 11,600 குழந்தைகள் மத்திய தரைக்கடல் பகுதிய கடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- குடியேறிகளின் மரணப் பாதையாக மத்திய தரைக்கடல் பகுதி விளங்குகிறது.
ஜெனிவா:
உள்நாட்டு போர், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் துருக்கி, சிரியா, சூடான் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைவது அதிகரித்து வருகிறது. ஆனால் இவர்கள் பெரும்பாலும் சட்ட விரோதமாக படகுகளில் புறப்பட்டு. மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவுக்கு செல்கின்றனர். இவ்வாறு செல்லும்போது அபாயகரமான விபத்துகளை சந்தித்து பலர் உயிரை விட்டுள்ளனர். இதனால் குடியேறிகளின் மரணப் பாதையாக மத்திய தரைக்கடல் பகுதி விளங்குகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் மத்திய தரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்ற 289 குழந்தைகள் இறந்திருப்பதாக ஐ.நா குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
மத்திய தரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் பாதியில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என யுனிசெப் அமைப்பின் தலைவர் வெரீனா கனாஸ் கூறி உள்ளார்.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 11,600 குழந்தைகள் மத்திய தரைக்கடல் பகுதிய கடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2022ல் இதே காலக்கட்டத்தில் இருந்ததை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், சுமார் 3,300 குழந்தைகள் துணையில்லாமல் அல்லது பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட மூன்று மடங்கு அதிகம்.
இந்த குழந்தைகள் தாங்கள் தனியாக இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உலகத் தலைவர்கள், இந்த குழந்தைகளுக்கு பயனுள்ள தீர்வுகளைத் தேடுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என கனாஸ் வலியுறுத்தினார்.
- நேற்று தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வ தற்காக ஆரோக்கியசாமி தனது மகன் டிக்சனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- தூத்துக்குடி மட்டக்கடை குரூஸ்புரத்தை சேர்ந்த ரித்திஸ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சாமுவேல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் பின்னால் மோதியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பூபால ராயபுரம் அருகே உள்ள சாமுவேல்புரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. மீனவர். இவரது மகன் டிக்சன்(வயது 7) அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தான்.
இந்நிலையில் நேற்று தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வ தற்காக ஆரோக்கியசாமி தனது மகன் டிக்சனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் இரவில் வீடு திரும்பினர். அவர்கள் தெற்கு கடற்கரை சாலை இனிகோ நகர் பகுதியில் வந்த போது தூத்துக்குடி மட்டக்கடை குரூஸ்புரத்தை சேர்ந்த ரித்திஸ்(21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சாமுவேல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கி ளில் பின்னால் மோதியது.
இதில் தந்தை, மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த வர்க ளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். ஆனால் செல் லும் வழியி லேயே டிக்சன் பரிதாபமாக உயிரிழந்தான். ஆரோக்கிய சாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீ சார் வழக்குப்பதிவு செய்து ரித்திசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நில உரிமையாளரின் வீட்டு அருகே அந்த தொழிலாளியின் 4 குழந்தைகள் உள்பட 7 குழந்தைகள் அங்கு விளையாடிக்கொண்டு இருந்தனர்.
- கார் கதவுகள் தானாகவே பூட்டிக்கொண்டதால், குழந்தைகளால் கதவை மீண்டும் திறக்கமுடியவில்லை.
மத்திய பிரதேச மாநிலம் தார் பகுதியை சேர்ந்த விவசாய தொழிலாளி ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா கிராமத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2-ந்தேதி காலை அவர், தனது மனைவி மற்றும் சில தொழிலாளர்களுடன் விவசாய வேலைக்காக காலையிலேயே சென்று விட்டார். அவர்களை நிலத்தின் உரிமையாளரே அழைத்து சென்றார்.
நில உரிமையாளரின் வீட்டு அருகே அந்த தொழிலாளியின் 4 குழந்தைகள் உள்பட 7 குழந்தைகள் அங்கு விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நின்ற காருக்குள், தொழிலாளியின் 4 குழந்தைகளும் ஏறி விளையாடினர். கார் கதவுகள் தானாகவே பூட்டிக்கொண்டதால், குழந்தைகளால் கதவை மீண்டும் திறக்கமுடியவில்லை.
நீண்ட நேரம் பூட்டிய காருக்குள் இருந்த 4 குழந்தைகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த பகுதியில் யாரும் இல்லாததால் நடந்த விபரீதம் பற்றி யாருக்கும் தெரியாமல் போயிற்று. சிறிது நேரத்தில் குழந்தைகள் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய தொழிலாளி தனது குழந்தைகளை தேடியபோது அவர்கள் காருக்குள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் கார் கதவை உடைத்து குழந்தைகளின் உடல்களை மீட்டனர். பலியான 4 குழந்தைகளும் 2 முதல் 7 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இந்த சம்பவம் குறித்து அம்ரேலி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் எலி மருந்து, எலி பேஸ்ட் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
- தனியார் மருத்துவமனையில் கிரிதரன், பவித்ரா இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னை குன்றத்தூரில் வசிப்பவர் கிரிதரன். இவர் தனது மனைவி பவித்ரா மற்றும் விஷாலினி (6 வயது), சாய் சுதர்சன் (4 வயது) ஆகிய 2 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
அவர்களது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் எலி மருந்து, எலி பேஸ்ட் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
அப்போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்குள் வைக்கப்பட்ட எலி மருந்தின் நெடி, வீடு முழுவதும் பரவியுள்ளது. இதனை சுவாசித்த நால்வருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில், 2 குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் கிரிதரன், பவித்ரா இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக எலியை கட்டுப்படுத்த மருந்து வைத்த தி.நகரில் உள்ள Pest Control நிறுவனம் மீது வழக்கு பதிந்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து வேளாண்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனை, வேளாண்துறை கூடுதல் இயக்குனர் அமுதா, சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
வருசநாடு அருகே முத்தூத்து கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவர் தனது தோட்டத்திற்கு அருகிலேயே வீடு கட்டி விவசாயம் செய்து வருகின்றார். இவருக்கு நிதீஷ்குமார், சசிகுமார் (வயது 8) என 2 மகன்கள் இருந்தனர். சசிகுமார் கீழபூசனூத்து கிராமத்தில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இளையராஜா தனது தோட்டத்தில் நீர் தேக்கி வைப்பதற்கு 4 அடி ஆழத்தில் தொட்டி கட்டி வைத்துள்ளர். அதில் இருந்து வீட்டின் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கும் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
நேற்று காலை அந்த தொட்டியில் நீர் எடுத்து வருவதற்காக சசிகுமார் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவன் எதிர்பாராதவிதமாக தொட்டியில் தவறி விழுந்தான். அவனுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். தண்ணீர் எடுக்க சென்ற சசிகுமாரை நீண்ட நேரம் காணவில்லை என்று இளையராஜா குடும்பத்தினர் அவனை தேடி சென்றனர். அப்போது சசிகுமார் தொட்டியில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த வருசநாடு போலீசார் அங்கு விரைந்து சென்று அவனுடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் காலாப்பூர் அருகே உள்ள மகத் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் மானே என்பவரின் வீட்டு கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் நேற்று இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். விருந்தில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
முதல் சுற்று உணவு பரிமாறி முடிந்ததும், உணவு சாப்பிட்ட சில குழந்தைகளுக்கு தலைசுற்றல், வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. பெரியவர்களுக்கும் வயிற்று உபாதை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நேரம் செல்லச் செல்ல மருத்துவமனைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 3 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் பாதிப்பு ஏற்பட்டதா? அல்லது வீட்டு உரிமையாளர் மீது பொறாமை கொண்ட நபர்கள், உணவில் விஷம் கலந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. விருந்து நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #FoodPoisoningDeath