என் மலர்
நீங்கள் தேடியது "City police commissioner"
- மாநகர பகுதியில் தொலைந்து போன செல்போன்களை மீட்கும் நடவடிக்கைகளில் சைபர்கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
- வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை இழந்த 40 பேரின் ரூ.49 லட்சம் மீட்கப்பட்டு அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் தொலைந்து போன செல்போன்களை மீட்கும் நடவடிக்கைகளில் சைபர்கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அதன் பயனாக, தொலைந்து போன 100 செல்போன் மீட்கப்பட்டன.
உரியவர்களிடம் ஒப்படைப்பு
அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் கலந்து கொண்டு, மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைந்தார்.
நிகழ்ச்சியில் மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா மற்றும் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-
போலி ஆவணங்கள் ரத்து
நெல்லை மாநகர பகுதிகளில் நில மோசடி தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு ரூ.8 கோடியே 91 லட்சம் மதிப்பிலான சொத்துக்களின் போலி ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் நெல்லை மாநகர பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி இதுவரை ரூ.25 லட்சத்து 19 ஆயிரத்து 500 மதிப்பிலான செல்போன்கள் கைப்பற்ற ப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரூ.30 லட்சம் முடக்கம்
இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும் டிரேடிங் ஆப் மூலமும் கே.ஒய்.சி. அப்டேட் பரிசு கூப்பன் உள்ளிட்டவைகள் மூலமும் மோசடி செய்யப்பட்டு வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை இழந்த 40 பேரின் ரூ.49 லட்சம் மீட்கப்பட்டு அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மூலமாக பண மோசடி புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 15 பேர்களிடமிருந்து மோசடி செய்த நபர்களின் வங்கி கணக்கில் ரூ. 32 லட்சம் பணம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாலை விதிகளை மீறியதாக 23 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- அபராதங்களை ஒரு வாரத்திற்குள் கட்டுமாறு சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கப்படும்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது சமீபகாலமாக அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
23 ஆயிரம் வழக்குகள்
அந்த வகையில் மாநகர காவல் பகுதிக்குட்பட்ட மேற்கு மண்டலம், கிழக்கு மண்டல பகுதிகளில் சாலை விதிகளை மீறியதாக 23 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் அறியாமல் உள்ளனர். இதனால் ஏராளமான வாகன ஓட்டிகள் அபராத தொகையை கட்டவில்லை.
அழைப்பு மையங்கள்
இதைத்தொடர்ந்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தெரியப் படுத்தும் வகையில், மேற்கு மண்டல பகுதிக்கு சந்திப்பு போலீஸ் நிலையத்திலும், கிழக்கு மண்டல பகுதிக்கு சமாதானபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள போக்குவரத்து பிரிவு அலுவலகத்திலும் பிரத்யேக மாக அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அலுவலகங்களில் 24 மணி நேரமும் ஒரு காவலர் பணியில் இருப்பார். அவர் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு விபரங்களை போன் மூலம் தெரிவிப்பார்.
இந்த அலுவலகங்களை இன்று மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
வாகனங்கள் பறிமுதல்
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சமீப காலத்தில் விதி மீறியதாக பதிவு செய்யப்பட்ட 23 ஆயிரம் வழக்குகளில் சுமார் 15 ஆயிரம் வழக்குகளுக்குரிய அபராதங்கள் கட்டப்பட வில்லை. இன்று திறக்கப் பட்டுள்ள அலுவலகங்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதங்களை ஒரு வாரத்திற்குள் கட்டுமாறு எச்சரிக்கப்படும்.
அதன் பிறகும் அபராத தொகை கட்டாதவர்களுக்கு நீதிமன்ற உத்தரவு பெற்று வாகனங்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருநங்கைகள்
வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை, புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள பகுதிகளில் திருநங்கைகள் தொல்லை இருப்பதாக புகார்கள் வந்தது.
இதுதொடர்பாக நேற்று திருநங்கைகளை அழைத்து பேசி சட்டவிரோத செயல்களில் ஈடுபட கூடாது என எச்சரித்துள்ளோம். அதே நேரத்தில் அப்பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிகளில் தலைமை இடத்து துணை கமிஷனர் அனிதா, மேற்கு மண்டல துணை கமிஷனர் சரவண குமார், உதவி கமிஷனர்கள் மணிமாறன், சரவணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் பேச்சிமுத்து, செல்லத்துரை, இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன், தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் உலகம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.