என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "CJI"
- தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் கணபதி பூஜை நடைபெற்றது.
- இந்த பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்து கொண்டார்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் டி.ஒய்.சந்திரசூட். டெல்லியில் உள்ள இவரது வீட்டில் இன்று கணபதி பூஜை நடைபெற்றது. இந்த கணபதி பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்துகொண்டார்.
பிரதமர் மோடியை நீதிபதி சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடி மகாராஷ்டிராவினர் அணியும் தொப்பியை அணிந்திருந்தார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
#WATCH | PM Narendra Modi attended the Ganesh Puja celebrations at the residence of Chief Justice of India DY Chandrachud, in Delhi. pic.twitter.com/VqHsuobqh6
— ANI (@ANI) September 11, 2024
- அரசமைப்பு நாட்டு மக்களுக்கு ஏரளமான உரிமைகள் கொடுத்துள்ளது.
- ஆனால் நம் மீது சுமத்தப்படும் கடமையை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது.
2024 மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் என் வாக்கு என் குரல் (My Vote My Voice) திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்கள், இது நம் நாடு. அரசமைப்பு நாட்டு மக்களுக்கு ஏரளமான உரிமைகள் கொடுத்துள்ளது. ஆனால் நம் மீது சுமத்தப்படும் கடமையை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது. குடிமக்களின் முதன்மையான கடமைகளில் ஒன்று அரசியலமைப்பு ஜனநாயகத்தில் வாக்களிப்பதாகும்
நம்முடைய சிறந்த தாய்நாட்டு மண்ணில் உள்ள மக்கள் வாக்களிக்கும் வாய்ப்பை தவற விடாதீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். நம் தேசத்திற்காக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் வெறும் ஐந்து நிமிடங்கள். இது செய்யக்கூடியது, இல்லையா? பெருமையுடன் வாக்களிப்போம். "என் வாக்கு, என் குரல்"
இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- புதிய தேர்தலை நடத்தும் கோரிக்கையை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- ஒரு ரிடர்னிங் ஆஃபீசர் இவ்வாறு நடக்கலாமா என நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்
கடந்த ஜனவரி 30 அன்று சண்டிகர் நகரசபை தேர்தல் நடந்தது.
அந்த தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஒருவரையொருவர் கண்டித்து போராட்டங்களை நடத்தினர்.
பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 ஓட்டுகள் பெற்றதாகவும், ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் குல்தீப் சிங்கிற்கு ஆதரவாக 20 கவுன்சிலர்கள் இருந்த போதும் 12 வோட்டுகளே பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
20 கவுன்சிலர்கள் இருந்தும் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்தது.
முறைகேடுகளை சுட்டிக்காட்டி புதிய தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு வைக்கப்பட்ட கோரிக்கையை பஞ்சாப்/அரியானா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் குல்தீப் சிங் வழக்கு தாக்கல் செய்தார். அவர் சார்பில் பிரபல வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 3-பேர் கொண்ட அமர்வு பெஞ்ச் அளித்த உத்தரவில், தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் (Anil Masih) கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
வாக்கு சீட்டை தேர்தல் கண்காணிப்பாளர் முறைகேடாக அழித்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது. அவர் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளார். அவர் ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டுள்ளார். ஒரு "ரிடர்னிங் ஆஃபீசர்" (Returning Officer) இவ்வாறு நடந்து கொள்ளலாமா?
உச்ச நீதிமன்றம் பார்த்து கொண்டுதான் இருக்கிறது. ஜனநாயக படுகொலை நடைபெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
ஜனநாயகத்தின் மாசற்ற தூய்மைதான் இந்த நாட்டை வழிநடத்தும் சக்தி.
இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, உச்ச நீதிமன்றம் பஞ்சாப்/அரியானா உயர் நீதிமன்ற பதிவாளர் மூலமாக சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு கோரியுள்ளது.
மேலும், இந்த உத்தரவில் வரும் பிப்ரவரி 7 அன்று நடைபெற இருந்த சண்டிகர் உள்ளாட்சி அமைப்பின் கூட்டங்களையும் ஒத்தி வைக்க உத்தரவிட்டது.
- 70 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சட்ட வல்லுனர்கள் கலந்து கொள்கின்றனர்
- பொதுமக்கள் நலனிற்காக பல தடைகற்களை உச்ச நீதிமன்றம் நீக்கியது என்றார் தலைமை நீதிபதி
மத்திய அரசாங்கத்தின் உதவியுடனும் சர்வதேச சட்ட அமைப்பு (International Legal Foundation), ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UN Development Programme) மற்றும் ஐ.நா. குழந்தைகள் நிதி அமைப்பு (UNICEF) ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும் இணைந்து, இந்திய தேசிய சட்ட சேவை ஆணையம் (NALSA), அனைவருக்குமான சட்ட உதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதல் பிராந்திய மாநாட்டை இந்திய தலைநகர் புது டெல்லியில் நவம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நடந்தது.
இந்த மாநாட்டில் உலகின் 70 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முக்கிய சட்ட வல்லுனர்கள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்று பேசிய இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்ததாவது:
1980களின் ஆரம்பத்தில் இருந்தே இந்திய உச்ச நீதிமன்றம், நீதியை நிலைநாட்ட புரட்சிகரமான முயற்சிகளை எடுத்து அதன் மூலம் பொது நலன் சார்ந்த விஷயங்களில் நீதி பரிபாலனம் சிறப்பாக நடைபெற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. பொதுமக்கள் உச்ச நீதிமன்றத்தை நாட தடையாய் இருந்த வழிமுறை சிக்கல்களையும், உச்ச நீதிமன்றம் எளிமைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சமூக-பொருளாதார விஷயங்களில் அநீதி ஏற்பட்டால் அவை விரைவாக சரி செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற காரணங்களால் இந்திய உச்ச நீதிமன்றம் மக்கள் நீதிமன்றமாக கருதப்படுகிறது. அனைத்துவிதமான மேல்முறையீடுகளையும், சட்ட உதவி மறுக்கப்படும் சூழ்நிலை குறித்த வழக்குகளையும் மிகுந்த கவனத்துடன் கையாளுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
#WATCH | Delhi: At the first regional conference on access to legal aid, CJI DY Chandrachud says, "... Since the early 1980s, the Supreme Court of India made revolutionary attempts to increase access to justice by way of its public interest jurisprudence. The court removed… pic.twitter.com/YG90WyGGp2
— ANI (@ANI) November 27, 2023
- ஆண்டுதோறும், நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு தினம் என கொண்டாடப்படுகிறது
- பல வழக்கறிஞர்கள் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வேண்டி கோரிக்கை வைத்தனர்
இந்திய ஜனநாயகத்தை வழிநடத்தும் அரசியலமைப்பு சட்டம் அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்டு 1949, நவம்பர் 26 அன்று இந்திய பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டது.
இதையொட்டி, 2015லிருந்து ஆண்டுதோறும் நவம்பர் 26, அரசியலமைப்பு தினம் என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இன்று நாடு முழுவதும், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய குழுவின் தலைவரான டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் உயரிய சித்தாந்தங்களும், கோட்பாடுகளும் மக்களால் நினைவுகூரப்படும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இதன் தொடர்ச்சியாக, இன்று இந்திய நீதித்துறையின் தலைமையிடமாக விளங்கும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் 7 அடி உயர சிலை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதியுடன், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அம்பேத்கர், வழக்கறிஞர் உடையுடன் தனது கையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வைத்து கொண்டிருப்பதை போல் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம், பல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலை ஒன்றை நீதிமன்ற வளாகத்தில் நிறுவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதம் சமர்ப்பித்திருந்ததை அடுத்து உடனடியாக இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- தனது உரையில் இந்திய நீதித்துறையை மோடி புகழ்ந்து பேசினார்
- தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருந்ததால் அனைவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை
இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லியிலுள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
2014ல் முதல் முறை பிரதமராக பதவியேற்றதில் தொடங்கி இவ்வருடம் 10-வது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடியேற்றம் முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார். சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த முக்கிய விருந்தினர்கள் மற்றும் பொது மக்கள் உரையை கேட்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மாநில மொழியில் பாடத்திட்டங்களை அமைப்பது குறித்து தனது அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து தெரிவித்தார். அத்துடன் நில்லாமல் இந்திய நீதித்துறையை புகழ்ந்து பேசினார். அப்போது பிரதமர் கூறியதாவது:
"மாநில மொழிகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. தீர்ப்புகளில் உள்ள செயலாக்க பாகம் (operating part) இனி மாநில மொழிகளிலும் மக்களுக்கு கிடைக்கும். இதற்காக, இந்த பணியை மேற்கொண்ட உச்ச நீதிமன்றத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன்," இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனை கேட்டதும் விருந்தினர்களில் ஒருவராக அமர்ந்திருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மனம் நெகிழ்ந்து மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரை நோக்கி கும்பிட்டார். பின்னர் இது குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது:
"ஜனவரி 26 குடியரசு தினத்தையும், உச்ச நீதிமன்றத்தின் தொடக்க நாளான ஜனவரி 28-ஐ கொண்டாடும் விதமாகவும் இந்த வருடம் இந்த மொழிபெயர்ப்பு முயற்சி தொடங்கப்பட்டது. இதுவரை 9,423 தீர்ப்புகள் இந்திய மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழ் உட்பட 14 மொழிகள் அடங்கும். உச்ச நீதிமன்றம் தோன்றிய நாளிலிருந்து இதுவரை வழங்கப்பட்ட 35,000 தீர்ப்புகளும் விரைவில் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும். தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருந்ததனால் 99 சதவீத குடிமக்களுக்கு அவற்றை புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை," இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மோடியின் பாராட்டும், அதற்கு தலைமை நீதிபதியின் நன்றி தெரிவித்தலும் காண்போரை பெருமையடைய செய்தது. இது சம்பந்தமான வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
- உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27ம் தேதி பதவியேற்க உள்ளார்.
- உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27ம் தேதி பதவியேற்க உள்ளார்.
புதுடெல்லி:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ல் நிறைவடைகிறது. எனவே, புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27ம் தேதி பதவியேற்க உள்ளார்.
தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித்துக்கு, தற்போதைய தலைமை நீதிபதி ரமணா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி நியமிக்கப்பட்ட நீதிபதி யு.யு.லலித், முத்தலாக் வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம்பெற்றவர். அயோத்தியில் சர்ச்சைகள் நிறைந்த ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிப்பதில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை அறிவித்து பரிந்துரை செய்வது நடைமுறையில் உள்ளது.
தற்போது தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதி நியமனத்திற்கான பணிகள் தொடங்கின. தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று முறைப்படி பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்படும் முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார்.
கடந்த ஜனவரி மாதம் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, உச்ச நீதிமன்ற செயல்பாடுகளை விமர்சித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 4 நீதிபதிகளில் ரஞ்சன் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. #RanjanGogoi #CJI
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்