search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Clean Cities"

    • சங்கரன்கோவில் நகராட்சியில் மாணவ- மாணவிகள் தூய்மை நகரங்களுக்கான சுகாதார உறுதிமொழியை நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி தலைமையில் எடுத்துக்கொண்டனர்.
    • அரசு மருத்துவமனை அருகில் உள்ள சுவர்களில் சுவரொட்டிகள் அகற்றப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சியில் மாணவ- மாணவிகள் தூய்மை நகரங்களுக்கான சுகாதார உறுதிமொழியை நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி தலைமையில் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து சங்கரன்கோவில் நகரம் முழுவதும் அதிரடியாக சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

    பஸ் நிலையம் கழிவறை சுகாதாரம் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அதனை எப்படி சுகாதாரமாக பயன்படுத்துவது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்பு காவிரி நகர் மற்றும் கோமதி நகர் பூங்கா மற்றும் நகரில் உள்ள அனைத்து பொதுக்கழிப்பிடம் சுத்தம் செய்யப்பட்டது. முப்புடாதி அம்மன் கோவில் முன்பு உள்ள கட்டிடக்கழிவுகள் அகற்றப்பட்டது. கோவிலை சுற்றியுள்ள மாட வீதி சுத்தம் செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை அருகில் உள்ள சுவர்களில் சுவரொட்டிகள் அகற்றப்பட்டது, தகன மேடை சுற்றி சுத்தம் செய்யப்பட்டது, நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஹரிகரன், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சரவணன், கவுன்சிலர்கள் செல்வராஜ், விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் எஸ்.பி.எம். பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மஞ்சப்பை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
    • தூய்மை விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

    ஊட்டி :

    ஓவேலி பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குப்பைகளைத் தரம் பிரித்தல், உரமாக்குதல் குறித்து செயல் அலுவலா் சி.ஹரிதாஸ் செயல் விளக்கமளித்தாா்.

    தொடா்ந்து பெரியாா் நகா் மற்றும் காந்தி நகா் பகுதியில் மஞ்சப்பை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் பேரூராட்சிப் பணியாளா்கள், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தூய்மை விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.  

    • தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் செல்வராஜ் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட துணி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர் .

    பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர் . இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் திருப்பூர் மாநகரை தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

    பள்ளி மாணவிகளுக்கு மக்கும், மக்கா குப்பையை பிரித்து வழங்கும் வகையில் குப்பை பாக்சை செல்வராஜ் எம்.எல்.ஏ., தினேஷ்குமார் அருகில் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் மற்றும் பலர் உள்ளனர்.

    ×