என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » clothes shop
நீங்கள் தேடியது "clothes shop"
- ரூ.32 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடி தப்பிச் சென்றனர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்
கோவை,
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது41). இவர் புது சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் ரோட்டில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 25 -ந் தேதி இரவு பாலகிருஷ்ணன் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் ஞயிற்றுக்கிழமை என்பதால் அவர் கடையை திறக்க வில்லை. அன்று இரவு அவரது கடையின் மேலே உள்ள ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரையை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையில் இருந்த பேண்ட், சட்டை உள்ளிட்ட ரூ.32 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடி தப்பிச் சென்றனர். இது குறித்து பாலகிருஷ்ணன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரத்தில் துணி கடை அதிபர் வீட்டில் பொருட்களை திருட முயன்ற வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் ராசிபுரம் மெயின் ரோட்டில் துணி கடை அதிபர் சேகர் என்பவரின் வீடு உள்ளது. இவர் நேற்றிரவு வழக்கம் போல கடைக்கு சென்று விட்டு இரவில் வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன் பக்க பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேகர் அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் 2 பேரும் வெளியில் தப்பியோடினர்.
இதை பார்த்த அந்த பகுதியினர் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ஆட்டையாம்பட்டி போலீசில் 2 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராம்சிங் 21, ஜோத்சிங் 26 என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கொங்கணாபுரம் பகுதியில் டீ கடை நடத்தி வருவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×

X