search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Co-op"

    • 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
    • பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியின் 2023-24 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வருகிற 6-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பு பவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.200 பயிற்சி நிலையத்தில் நேரில் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்ட ப்படிப்பு படித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விபரங்களுக்கு, கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரின் தொலைபேசி எண்களுக்கோ 94435 87759, 94860 45666 அல்லது முதல்வர், பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் அருகில், முத்துப்பேட்டை ரோடு, நாடிமுத்து நகர்-அஞ்சல், பட்டுக்கோட்டை- 614602 என்ற முகவரியில் நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிராம கூட்டுறவு அங்காடி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருள்களும் வைக்கப்பட்டுள்ளது.
    • கிராம கூட்டுறவு அங்காடி கட்ட வேண்டும் என்று கூறி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பழுதடைந்த கட்டிடத்தில் கிராம கூட்டுறவு அங்காடி இயங்கி வந்தது இதனை அடுத்து ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒரு பொதுவான இடத்தில் கிராம கூட்டுறவு அங்காடி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருள்களும் வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் ஒரு சிலர் அந்த இடத்தில் கட்டுவதற்கு ஆட்சபனை தெரிவித்து வேறு ஒரு இடத்தில் கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்து அதற்கான முயற்சிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது இதனை அடுத்து பொதுமக்கள் சார்பாக ஊராட்சி எந்த இடத்தில் அனுமதி வழங்கி மூலப்பொருள் வைக்கப்பட்டுள்ளதோ அந்த இடத்திலேயே கிராம கூட்டுறவு அங்காடி கட்ட வேண்டும் என்று கூறி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்திற்கு கோவிந்தன் தலைமை தாங்கினார்.

    வேதாரத்தினம், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், பாலசுப்ரமணியம், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அரங்கநாதன் வரவேற்றார். இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள்,பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி தந்த இடத்தில் கிராம கூட்டுறவு அங்காடி கட்ட வேண்டும் என கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்பு வேதாரண்யம் கோட்டாட்சியர்ஜெயராஜ பெளலின் பேச்சுவார்த்தை நடத்தியதில் உண்ணாவிரம் மாலைமுடித்து கொள்ளபட்டது.

    ×