என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Co operative societies"

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
    • மாநிலங்களின், தேவைக்கேற்ப கணினிம யமாக்குவதற்கான நெகிழ்வுத்தன்மை கொண்ட இந்த மென்பொருள் வட்டார மொழியில் இருக்கும்.

    மதுரை

    தேசிய கூட்டுறவு பயிற்சி நிறுவன நிதி இயக்குநர் டாக்டர் கோபால்சாமி, ஆர்.கே.22 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கே.வி.கே.ஆர்.பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் சமூக பொரு ளாதார வளர்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் மற்றும் இடு பொருட்கள் வழங்குவதன் மூலம் விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவதில் இந்த சங்கங்கள் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் 3 அடுக்கு நிர்வாக அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதன்படி மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட அளவில் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமிய அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் சுமார் 13 கோடி விவசாயிகள் உறுப்பி னர்களாக உள்ளனர். மற்ற 2 அடுக்குகள் அதாவது மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் ஏற்கனவே நபார்டு வங்கி மூலம் தானியங்கப்படுத்தப்பட்டு, பொது வங்கி மென்பொருள் இயக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இருப்பினும், பெரும்பா லான சங்கங்கள் இதுவரை முழுமையான முறையில் கணினிமயமாக்கப்பட வில்லை. இதனால் தற்கால சூழ்நிலைக்கேற்றவாறு வேகமான, துல்லியமான, திறமையான, நம்பிக்கை யான மற்றும் வெளிப்படையான உறுப்பினர் சேவைகள் புரிவதில் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது. சில மாநிலங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தனித்த மற்றும் பகுதியளவு கணினிமயமாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மத்திய கூட்டுறவு அமைச்சகம் அகில இந்திய அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடனும் அவற்றின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வைக் கொண்டுவரும் நோக்கத்து டனும் இக்கடன் சங்கங்களை முழுமையாக கணினிமயமாக்கும் திட்டத்தினை சமீபத்தில் அறிவித்துள்ளது.

    இக்கணினிமயமாக்கல் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நிதிச் சேர்க்கை, விவசாயிகளுக்கு சிறு மற்றும் குறு விவசாயி களுக்கு சேவையை வலுப்படுத்துதல் மற்றும் உரங்கள், விதைகள், போன்ற இடு பொருட்கள் வழங்குவது ஆகியன உட்பட்ட முக்கிய சேவை மையங்களாக மாற இந்தத் திட்டம் உதவும்.

    மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கிகள் இத்தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு அரசாங்க திட்டங்களை (கடன்) மற்றும் மானியம் சம்பந்தப்பட்ட இனங்கள்) முன்னெடுப்பதற்கான முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

    இது கடன்களை விரைவாகச் செலுத்துதல், குறைந்த மாற்றச் செலவு, விரைவான தணிக்கை மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணம் செலுத்துதல் மற்றும் கணக்கீடு ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வுகளைக் உறுதி செய்யும்.

    இணைய பாதுகாப்பு மற்றும் தரவு சேமிப்பகம் அடைப்படையிலான ஒரே மாதிரியான மென்பொருளை உருவாக்கு தல், சங்கங்களுக்கு கணினி மென்பொருள் ஆதரவை வழங்குதல், பராமரிப்பு ஆதரவு மற்றும் பயிற்சி உட்பட ஏற்கனவே உள்ள பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும். மாநிலங்களின், தேவைக்கேற்ப கணினிம யமாக்குவதற்கான நெகிழ்வுத்தன்மை கொண்ட இந்த மென்பொருள் வட்டார மொழியில் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2-9-2023 வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • தள்ளுபடி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உறுப்பினர்கள் தொடர்புடைய கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை நேரில் அணுகி பயன்பெறலாம்.

    திருப்பூர் :

    கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (வீட்டு வசதி) அர்த்தனாரீஸ்வரன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் செயல்படும் அனைத்து வகை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் இருந்து 31-12-2013-க்கு முன்னர் கடன் பெற்ற உறுப்பினர்களுக்கு கடன் வழங்கியதில் தவணை தவறிய கடன்தாரர்களுக்கு அர–சாணை எண் 40 வீட்டுவசதி மற்றும் நகர் வளர்ச்சி நாள் 16-3-2015 படி தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு முறை கடன் தீர்வு திட்டத்தின் கீழ் கடன்தாரர்கள் செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டி செலுத்தினால் அவர்கள் செலுத்த வேண்டிய தவணை தவறிய வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை பெற்று பயனடையலாம்.இந்த தள்ளுபடி சலுகை அரசாணை எண் 31 வீட்டு வசதி மற்றும் நகர் வளர்ச்சி 3-3-2023-ன் படி 6 மாதங்கள் அதாவது 2-9-2023 வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே 31-12-2013-க்கு முன் இணைய நிதி மூலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் இருந்து கடன் பெற்று தவணை தவறிய கடன்தாரர்கள் அனைவரும் இந்த சலுகையை பயன்படுத்தி செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டியை மட்–டும் செலுத்தி தவணை தவறிய வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தள்ளுபடி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உறுப்பினர்கள் தொடர்புடைய கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை நேரில் அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
    • முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகரகூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு அச்சகங்கள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

    இந்த தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரரிடம் இருந்து விண்ணப்பங்கள் www.drbtiruppur.net என்ற இணைய தளம் வாயிலாக 1.12.2023 அன்று மாலை 5.45 மணிவரை வரவேற்றப்படுகின்றன. இதற்கான எழுத்து தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர்) 24-ந் தேதி காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை திருப்பூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது.

    இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சியாகும்.புனேயில் உள்ள வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை ( கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24 -ஆம் ஆண்டு நேரடி பயிற்சி, அஞ்சல்வழி, பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு ( Diploma in Cooperative Management) சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்டணம் செலுத்தியற்கான ரசீதை திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு இணை தளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு இல்லை. எழுத்து தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவுகணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ்போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்து தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) 200 வினாக்களுடன், 170 மதிப்பெண்களுக்கானதாகவும் தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும். எழுத்து தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுகான மதிப்பெண் முறையே 85:15 என்ற விகிதத்தில் இருக்கும். விண்ணப்ப தாரர்கள் எழுத்து தேர்விலும், நேர்முக தேர்விலும் பெற்ற ஒட்டு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அரசாணைப்படியான இட ஒதுக்கீடு, இன சுழற்றி முறை, அவர்கள்தெரிவித்த முன்னுரிமை விருப்ப சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உரிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணைய தளத்தில் www.drbtiruppur.net வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மதுைர மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் போதிய அளவு உரம் கையிருப்பில் உள்ளது.
    • மேற்கண்ட தகவலை இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 13 ஆயிரத்து 777 நபர்களுக்கு ரூ. 110.85 ேகாடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை பராமரிப்பு கடன் 6 ஆயிரத்து 163 நபர்களுக்கு ரூ. 26.28 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 513 டன் கிரிப்கோ யூரியா மற்றும் விஜய் யூரியா 125 டன் அனுப்பப்பட்டுள்ளது.

    தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா ஆயிரத்து 49 டன், டி.ஏ.பி. 372 டன், பொட்டாஷ் 254 டன், காம்ப்ளக்ஸ் 941 டன் என மொத்தம் 2 ஆயிரத்து 616 டன் இருப்பு உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான பயிர்க்கடன் மற்றும் உரங்களை பெற்று பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை வேளாண் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். #TNMminister#SellurRaju
    திருச்சி:

    திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 63-வது கிளை கே.கே.நகர் தென்றல் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு, புதிய கிளையை தொடங்கி வைத்து குத்துவிளக்கேற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் இதுவரை 104 கூட்டுறவு வங்கி கிளைகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 23 மாவட்ட வங்கிகள் மற்றும் 848 கிளைகள் உள்ளது. வரலாறு காணாத அளவுக்கு ரூ.27ஆயிரத்து 750 கோடி கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ளனர். இதன் மூலம் நகைக்கடன், பயிர்க்கடன், வாகனக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் என பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனைபெற்று பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.


    நடப்பாண்டில் விவசாய கடனுக்கு ரூ.8ஆயிரம் கோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியுள்ளார். கடன் வழங்குவது தொடர்பாக 8 டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு செய்ய உள்ளேன். 8ஆயிரம் கோடியில் இதுவரை ரூ.500 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தங்கு தடையின்றி பாரபட்சமில்லாமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்ந்த உறுப்பினருக்கு 30 சதவீதமும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகளை தடுக்க விஜிலென்ஸ் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் நடந்தது போல் அல்லாமல் தற்போது முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் பற்றிய உண்மை நிலை மக்களுக்கு தெரியும். முதல்வரின் விளக்கத்தை கேட்டு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினே ஆதரவு தெரிவித்து விட்டார். சில சுயநலவாதிகள் தங்களை பிரபலபடுத்துவதற்காக அத்திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தூண்டி விடுகின்றனர். தமிழகத்தின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்கு 8 வழி பசுமை சாலை உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMminister#SellurRaju
    ×