என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "coastal"
- ஜாம்புவானோடை கந்தபரிச்சான் ஆற்றங்கரையோரங்களில் பனை விதைகள் நடும் பணி.
- 1000-க்கும் மேற்பட்ட பனை விதைகள் விவசாய தொழிலாளர்கள் மூலம் நடப்பட்டது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு மற்றும் ஜாம்புவானோடை கிராமங்களில் தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் பனைவிதை நடும் பணி நடைபெற்றது.
இதை தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்க மாவட்ட தலைவர் துரைஅரசன் தலைமையில் மாநில தலைவர் வழக்கறிஞர் சிறுகளத்தூர் ஜெய்சங்கர் பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.
இதில் ஆலங்காடு கோட்டகம், குளக்கரை ஆற்றங்கரையோரம் மற்றும் ஜாம்புவானோடை கந்தபரிச்சான் ஆற்றங்கரையோரங்களில் 1000-க்கும் மேற்பட்ட பனை விதைகள் விவசாய தொழிலாளர்கள் மூலம் நடப்பட்டது.
இதில் ஆலங்காடு கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் பிரவீன்குமார், ஜாம்புவானோடை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் ராமஜெயம், சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் இளையராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இருதயராஜ், கோட்டூர் ஒன்றிய தலைவர் நடராஜன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு உபரி நீர் அதிக அளவில் வந்து கொண்டுள்ளது.
- காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடாமல் இருக்க, தாழ்வான பகுதிகளில் பொக்லின் மூலம் மண் கொட்டி மேடான பகுதியாக மாற்றும் பணியை நகராட்சி ஊழியர்கள் துவங்கியுள்ளனர்.
குமாரபாளையம்:
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு உபரி நீர் அதிக அளவில் வந்து கொண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை மேடான பகுதிக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்களை பாதுகாக்க, பாதுகாப்பு மையங்களும் தாயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் மணிமேகலை தெரு, கலைமகள் தெரு உள்ளிட்ட கரையோர பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மழைக் காலங்களில் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, இந்த குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். எனவே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அப்பகுதிகள் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனிடையே, தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடாமல் இருக்க, தாழ்வான பகுதிகளில் பொக்லின் மூலம் மண் கொட்டி மேடான பகுதியாக மாற்றும் பணியை நகராட்சி ஊழியர்கள் துவங்கியுள்ளனர். முதற்கட்டமாக மணிமேகலை தெருவில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்