என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cobra"
- கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நாக தேவதை அம்மன் சிலை உள்ளது.
- கிராம மக்கள் திரண்டு வந்து சாமி சிலை மீது பாம்பு ஆடுவதை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம், பெத்த பள்ளி அடுத்த ஒடேலாவில் சம்பு லிங்கேஸ்வரர், ஆபத் சகாயஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நாக தேவதை அம்மன் சிலை உள்ளது. கோவில் பூசாரி நாக தேவதை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது திடீரென நல்ல பாம்பு ஒன்று வந்து நாக தேவதை அம்மன் சிலையின் மீது அமர்ந்தது. பின்னர் சாமி சிலையின் மீது படம் எடுத்து ஆடியது. இந்த செய்தி ஊர் முழுவதும் காட்டு தீ போல் பரவியது. ஏராளமான கிராம மக்கள் திரண்டு வந்து சாமி சிலை மீது பாம்பு ஆடுவதை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர். சாமியை வணங்கி சென்றனர்.
இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
- நீண்ட நேரம் போராடி பிடித்தனர்
- காப்புகாட்டில் விட்டனர்
ஆலங்காயம்:
வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் ரோட்டில் உள்ள கொத்தகோட்டை என்ற இடத்தில் ரோட்டையொட்டியுள்ள ஒரு கிணற்றில் சுமார் 8 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தது.
அவ்வழியாக சென்றவர்கள் கிணற்றில் சத்தம் கேட்டு கிணற்றை எட்டி பார்த்தனர்.
அப்ேபாது கிணற்றில் 8 அடி நீளமுள்ள நாக பாம்பு தத்தளித்து கொண்டிருந்ததை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி நீண்ட நேரம் போராடி அந்த பாம்பை பிடித்து பத்திரமாக மீட்டு காப்புகாட்டில் விட்டனர்.
- சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்
- ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு சென்றனர்
ஆம்பூர்:
மாதனூர் அடுத்த கீழ்முருங்கை ஊராட்சியில் ஸ்ரீ சுயம்பு பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவிலில் மூலவர் மற்றும் நந்தி மீது நுமார் 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு பின்னி, பிணைந்து படம் எடுத்து ஆடியது.
இதனைப் பார்த்த கிராம மக்கள் மற்றும் கோவில் பூசாரி பாம்பிற்கு கற்பூர தீபாரணை காட்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இந்த நிகழ்வு குறித்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது. ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலில் நடந்த அதிசய நிகழ்வை வந்து பார்வையிட்டு சாம தரிசனம் செய்தனர்.
- தீயணைப்பு துறையினர் மீட்டனர்
- வீட்டினுள் பாம்பு வந்ததால் அச்சமடைந்தனர்
அணைக்கட்டு:-
ஒடுகத்தூர் அடுத்த ஓட்டேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலா. இவரது வீட்டில் நாகபாம்பு ஒன்று நுழைந்துள்ளது.
இதனை கவனிக்காத கலா வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கலா வீட்டினுள் பாம்பு ஊர்ந்து சென்றதை திடீரென பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் வீட்டில் புகுந்த நாகபாம்பை பிடித்து அருகே உள்ள காப்பு காட்டில் விட்டனர்.
- அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் 'கோப்ரா'.
- இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்தார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கோப்ரா
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருந்தார். இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் கோப்ரா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோப்ரா திரைப்படம் வரும் 23 -ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
- அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் 'கோப்ரா'.
- இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்தார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கோப்ரா
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருந்தார். இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
கோப்ரா
மேலும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோப்ரா' படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் திருத்தப்பட்ட படமாக இன்று மாலை முதல் திரையரங்குகளில் வெளியிடப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
From team #Cobra!@chiyaan @AjayGnanamuthu @arrahman @Udhaystalin @7screenstudio @SrinidhiShetty7 @IrfanPathan @SonyMusicSouth pic.twitter.com/YW9XyC0tVc
— Red Giant Movies (@RedGiantMovies_) September 1, 2022
- அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.
- இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கோப்ரா
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்தப் படத்தை அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான 29 இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 1788இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கோப்ரா
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது "மிகுந்த பொருட்செலவில், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் படத்தை வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும். இதனால், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்" என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, 'கோப்ரா' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.
- அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.
- இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விக்ரம்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கொச்சியில் ஜெயின் கல்லூரி வளாகத்தில் 'கோப்ரா' குழுவினர், மாணவ, மாணவிகளை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது விக்ரம் பேசியதாவது, ''உங்களுக்கு 'அந்நியன்' படம் பிடிக்கும் என்றால் இந்தப் படமும் பிடிக்கும். சயின்ஸ் பிக்சன், காமெடி, எமோஷன் காட்சிகளும் இருக்கின்றன. என் படங்கள் திரையரங்கில் வெளியாகி 3 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது கோப்ரா வெளியாகிறது" என்றார்.
கோப்ரா
மேலும், படத்தின் வெற்றி தோல்வி பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், ''படத்தின் வெற்றி, தோல்வி உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெரும் போராட்டத்துக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் படம் ரசிகர்களிடம் சென்றடையாத நேரங்களும் உண்டு. அது கடினமாக இருக்கும்'' என்றார்.
- அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.
- இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கோப்ரா
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அஜய் ஞானமுத்து கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பிவந்தனர்.
கோப்ரா
இந்நிலையில், இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அஜய் ஞானமுத்து தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மன்னித்துவிடுங்கள். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதால் கலந்து கொள்ளமுடியவில்லை. விரைவில் புரொமோஷனில் கலந்துகொள்வேன். ஆனால் என்னுடைய அமேஸிங் டீம் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி, உள்ளிட்ட அனைவரும் எங்கள் கிங் கோப்ரா விக்ரம் சாருடன் புரொமோஷனில் ஈடுபடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.
- இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கோப்ரா
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், கோப்ரா படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் துருவ் விக்ரம் கூறியதாவது, "என்னுடைய அப்பா கடின உழைப்பாளி என்று அனைவருக்கும் தெரியும். அவருடன் 'மகான்' படத்தில் பணியாற்றும்போது ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனித்தேன்.
துருவ் விக்ரம்
நீளமான காட்சி ஒன்றில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கும் போது ஒருகட்டத்தில் எனக்கு சோர்வு ஏற்பட்டது. ஆனால் அப்பா சோர்வே இல்லாமல் உற்சாகத்துடன் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம், "என்னப்பா.. எனக்கு எனர்ஜி போய்ருச்சு. ஆனால் நீங்க உற்சாகமாக இருக்கீங்க... எப்படி?" எனக் கேட்டேன். அதற்கு அவர், ''இந்த இடத்தை பெற கடுமையாக போராடியதால் இந்த உற்சாகம் தொடர்கிறது" என்று கூறினார்.
'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 31- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.
- இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கோப்ரா
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. "கோப்ரா" திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.
- இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருத்திருக்கிறார். இப்திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கோப்ரா படத்தை பிரபலப்படுத்துவதற்காக விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் திருச்சி, மதுரை உள்பட பல இடங்களில் கல்லூரிகளிலும், முன்னணி வணிக வளாகங்களிலும் ரசிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். அந்த வகையில் கல்லூரி மாணவர்களிடையே பேசிய விகரம், 'கோப்ரா' ஆகஸ்ட் 31ம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ஆதரவளிக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கு எந்த துறையில் விருப்பம் இருக்கிறதோ. அந்த துறையில் முழுமையான மனதுடன் பணியாற்றினால், நீங்களும் சாதனையாளர் தான். உங்களையும் ஒரு நாள் உலகம் திரும்பி பார்க்கும் என்று கூறினார்.