search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cold Drinks"

    • சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிர்பானங்கள் அருந்துவதால் பலவிதமான உடல் கோளாறுகள் ஏற்படும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
    • குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது.

    தினமும் காலை எழுந்ததும் பலர் கட்டாயம் காபி குடிப்பதை விரும்புவார்கள். காபி குடிக்காவிட்டால் அந்த நாளே ஓடாது என்று சொல்லுவார்கள். அதே போல், இன்றைய காலத்தில் நம் வாழ்வோடு குளிர்பானங்கள் இரண்டற கலந்துவிட்டன என்றே கூறலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதனை அருந்தாமல் இருக்க முடிவதில்லை.

    ஒருமுறை சுவை பழகி போனவர்களுக்கு இன்னும் சொல்லவே வேண்டாம். ஆனால், இயற்கையாக அல்லாத செயற்கையாக விற்கப்படும் குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. அவற்றில் கெமிக்கல், சர்க்கரை மற்றும் தண்ணீர் இதைத் தவிர ஒன்றுமே இருக்காது. எந்த சத்துமில்லாத, ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள இவ்வகை குளிர்பானங்களை எதற்காக விரும்பி அருந்துகின்றனர் என்று தெரியாமலே பலர் அருந்தி வருகின்றனர்.

    சாப்பிட்டது செரிமாணம் ஆவதற்கு பலரும் குளிர்பானங்களை அருந்துவார்கள். சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிர்பானங்கள் அருந்துவதால் பலவிதமான உடல் கோளாறுகள் ஏற்படும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில், குளிர்பானங்களை அருந்தாமல் இருப்பது உடலுக்கு பல வழிகளில் நல்லது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது.

    குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் (பல் பற்சிப்பியை சேதப்படுத்துகிறது), அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் (குழிவுகளை உண்டாக்குகிறது) மற்றும் அசெசல்பேம் பொட்டாசியம் (புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையது) உள்ளது என்று வோக்கார்ட் மருத்துவமனையின் டாக்டர் அனிகேத் முல் கூறினார்.

    • பாவூர்சத்திரத்தில் குளிர்பான கடை நடத்தி வரும் நபர் ஒருவர் முன்மாதிரியாக இருப்பது பெரிதும் பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
    • காரணம் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை சேர்ப்பதால் வாடிக்கையாளர்களின் தாகம் அடங்குவதோடு, ஒரு சில நோய்க்கும் மருந்தாக அமைவதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

    தென்காசி:

    கோடைகாலம் என்றாலே சாலை ஓரங்களில் அதிகம் இளநீர், சர்பத், தர்பூசணி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் கடைகள் தோன்றுவது வழக்கம்.

    அதன்படி குளிர்பா னங்கள் பருக வரும் பொதுமக்களை கவரும் விதத்திலும் அவர்களின் உடல்நிலையில் அக்கறை கொள்ளும் விதத்திலும் பாவூர்சத்திரத்தில் குளிர்பான கடை நடத்தி வரும் நபர் ஒருவர் முன்மாதிரியாக இருப்பது பெரிதும் பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

    பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அரிராமகிருஷ்ணன் (வயது 48). இவர் கடந்த 8 ஆண்டுகளாக பாவூர்சத்திரத்தில் நெல்லை -தென்காசி சாலையில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். இங்கு தர்பூசணி, இளநீர், சர்பத், சோடா உள்ளிட்ட பானங்களை விற்பனை செய்து வருகிறார்.

    பொதுவாக நாம் குளிர்பான கடைகளில் லெமன் சோடா கேட்டால் எலுமிச்சை பழத்தை பிழிந்து அதனுடன் சோடா மற்றும் உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து கொடுப்பதை பார்த்திருப்போம். ஆனால் அரிராமகிருஷ்ணன் அப்படி இல்லாமல் தன்னிடம் லெமன் சோடா கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு லெமன் சோடாவுடன் இஞ்சி, பூண்டு, மிளகாய், மல்லி, சீரகம், மிளகு உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட பொருட்களையும் சேர்த்து கனகச்சிதமாக லெமன் சோடா வழங்கி வருகிறார்.

    இதனை பருகும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. காரணம் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை சேர்ப்பதால் வாடிக்கையாளர்களின் தாகம் அடங்குவதோடு, ஒரு சில நோய்க்கும் மருந்தாக அமைவதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

    மக்களின் நலனுக்காக வும், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிக ரிக்கும் வண்ணமும், தான் மற்றவ ர்களை போல் இல்லா மல் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை சேர்த்து லெமன் சோடா வழங்கி வருவதாக தெரிவிக்கிறார். 

    ×