என் மலர்
நீங்கள் தேடியது "Collector Akash"
- மாவட்ட அளவிலான முதல்- அமைச்சர் விளையாட்டு போட்டிகள் வருகிற ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.
- விளையாட்டு போட்டிகளில் இணையதள பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தென்காசி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பொதுப்பிரிவு, பள்ளி கல்லூரி , மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதல்- அமைச்சர் விளை யாட்டு போட்டிகள் வருகிற ஜனவரி மாதம் தென்காசி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in என்ற முகவரியில் வீரர்களின் தனி நபர் விவரங்கள், அணி விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
போட்டியில் திறமையாக செயல்படும் பள்ளி, கல்லூரி மாணவர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகள், சிறப்பு விளையாட்டு விடுதிகளில் உள்ள காலி இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் நேரடியாக சேர்த்து அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
இப்போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா போட்டிகள், அகில இந்திய அளவிலான குடிமைப் பணியாளர்கள் போட்டிகள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பப்படுவர்.
ஒவ்வொரு போட்டியிலும் மாநில அளவில் முதல் 3 இடங்கள் பெறுவோருக்கு பரிசுத் தொகையுடன் முதல்-அமைச்சர் கோப்பை வழங்கப்படும்
அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டு மொத்தமாக அதிக பதக்கங்கள் பெற்று முதல் 3 இடம் பெறும் மாவட்டங்களுக்கு ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்புக்கான முதல்-அமைச்சர் கோப்பை வழங்கப்படும்.
மேலும் இணையதள பதிவு செய்தவர்கள் மட்டுமே விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள இயலும். எக்காரணம் கொண்டும் வேறு வழிமுறை மூலமாக போட்டிகளில் பங்கேற்க இயலாது.
இதுகுறித்த மேலும் விபரங்கள் அறிய 7401703454 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.65 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
- கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை யில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நல துறையின் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4-மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் ரூ.48 ஆயிரம் மதிப்பிலும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் ரூ.17 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.65 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 371 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலு வலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தென்காசி மாவட்டம் சார்பாக பொதுப்பிரிவு, பள்ளி கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் இந்த மாதம் நடைபெறவுள்ளது.
- பொது மக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ- மாணவிகள் www.sdat.tn.gov.in இணையதளத்தில் நாளைக்குள் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தென்காசி மாவட்டம் சார்பாக பொதுப்பிரிவு, பள்ளி கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் இந்த மாதம் நடைபெறவுள்ளது.
தற்போது பொதுப்பிரிவு (15 முதல் 35 வயது வரை), பள்ளி (12முதல் 19 வயது வரை), கல்லூரி (17 முதல் 25 வயது வரை) கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ- மாணவிகள் www.sdat.tn.gov.in இணையதளத்தில் நாளைக்குள் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு 04633- 212580 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
- குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
- கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
குடியரசு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 26-ந் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) , பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மக்கள் நிலை ஆய்வு, வறுமை குறைப்பு திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து பொதுமக்களும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கலெக்டர் ஆகாஷ் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பதக்கங்களை வழங்கினார்.
- ரூ.2.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர், பயனாளிகளுக்கு வழங்கினார்.
தென்காசி:
நாட்டின் 74- வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தேசிய கொடியை ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு , காவலர்களுக்கான முதல்-அமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.
தொடர்ந்து, மாவட்டத்தின் சிறப்பாக செயல்பட்ட 29 துறையை சேர்ந்தவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 10 பேர் உள்பட 257 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், 21 பயனாளிகளுக்கு ரூ.2.14 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட கலெக்டர், என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பள்ளி மாணவ- மாணவிகள் நிகழ்த்தி வரும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பாராட்டினார்.
இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தியாகி சொக்கலிங்கம் பிள்ளை அவர்களின் மனைவி, முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி லட்சுமிகாந்தன்பாரதி உள்பட பல்வேறு துறையை சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
- காப்பீடு திட்டத்தில் பணியாற்றிய சிறந்த தனியார் மருத்துவமனையாக தென்காசி சாந்தி பன்நோக்கு மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டது.
- கலெக்டர் ஆகாஷ் பாராட்டு சான்றிதழை நிர்வாக தலைவர் டாக்டர் அன்பரசனிடம் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நடந்த 74-வது குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பணியாற்றிய சிறந்த தனியார் மருத்துவமனையாக தென்காசி சாந்தி பன்நோக்கு மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதனை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்க சாந்தி பன்நோக்கு மருத்துவமனை நிர்வாக தலைவர் டாக்டர் அன்பரசன் பெற்றுக்கொண்டார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டேவிட் செல்லதுரை மற்றும் மருத்துவமனை முதன்மை மருத்துவர் டாக்டர் தமிழரசன் கூறுகையில், இந்த பாராட்டு மற்றும் சான்றிதழ் எங்கள் மருத்துவமனையில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் சமர்ப்பிக்கின்றோம் என்று பெருமையுடன் தெரிவித்தனர்.
- தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
- 8-ம் வகுப்பு வகுப்பு முதல் பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலை வாய்ப்பை தேடும் அனைவரும் கலந்து கொள்ளலாம்
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் பல்வேறு தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8-ம் வகுப்பு வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலை வாய்ப்பை தேடும் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப் படாது. இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.
- சங்கரன்கோவில், குருவிகுளம், மானூர், மேலநீலித நல்லூர் வட்டார விவசாயிகள் பயன் பெறும் வகையில் விளைபொருட்களை விற்பனை செய்யும் நிலையம் தொடங்கப்பட்டது.
- வேளாண் விற்பனை துணை இயக்குநர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில், குருவிகுளம், மானூர், மேலநீலித நல்லூர் வட்டார விவசாயிகள் பயன் பெறும் வகையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக தொடங்கப்பட்ட நமக்கு நாம் கூட்டுப் பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் விவசாயிகளின் மதிப்புக் கூட்டப்பட்ட விளைபொருட்களை விற்பனை செய்யும் நிலையம் சங்கரன்கோவில் தேரடி திடல் அருகே தொடங்கப்பட்டது. இதனை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வேளாண் விற்பனை துணை இயக்குநர் கிருஷ்ணகுமார், உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் முனியாண்டி, நமக்கு நாம் கூட்டு பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம், நிர்வாக இயக்குனர்கள் பொன் முத்துராமலிங்கம், கந்தசாமி, ராமமூர்த்தி, ஆனந்த், ராமசுப்பு, பழனிச்சாமி, சின்ன பேச்சிமுத்து, ஆண்டாள் ராணி, வேளாண்மை அலுவலர் முத்துக்குமார், உதவி வேளாண்மை அலுவலர் மரகதவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஆகாஷ் பெற்றுக்கொண்டார்
- 10 பயனாளிகளுக்கு 47 ஆயிரத்து 500 மதிப்பிலான இலவச இஸ்திரி பெட்டிகளையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஆகாஷ் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.55 ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும் மற்றும் 10 பயனாளிகளுக்கு 47 ஆயிரத்து 500 மதிப்பிலான இலவச இஸ்திரி பெட்டிகளையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 415 மனுக்கள் பெறப்பட்டது.
- மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., தென்காசி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.
- திட்டத்தின் மூலம் 532.55 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.
தென்காசி:
ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன், தென்காசி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீராணம் பெரிய குளத்திலிருந்து காசிக்குவித்தான் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வழங்கு கால்வாயில் இருந்து காவலாகுறிச்சி பெரியகுளம் மற்றும் அதன் கீழ் உள்ள சிறு குளங்களுக்கு தண்ணீர் வழங்க புதிய கால்வாய் அமைக்கும் பணிக்காக பொதுப்பணித்துறை மூலம் ஆய்வு பணிகள் நடைபெற்று, வடிவமைப்பு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு, திட்டத்தின் உத்தேச மதிப்பீடு ரூ.12 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு, நிதி ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்று நான் அறிகிறேன்.
நிதி வழங்க...
மேலும் கைவிடப்பட்ட இத்திட்டத்தின் மூலம் காவலாகுறிச்சி வெண்ணிலங்கபுரம், மருதம்புதூர், கடங்கநேரி, வெங்கடேஸ்வரபுரம், காடுவெட்டி, வடக்கு காவலாகுறிச்சி, கே.நவநீதகிருஷ்ணபுரம், நாச்சியார்புரம், ஏந்தலூர் ஆகிய கிராமங்களில் 532.55 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும் மேற்கண்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் வானம் பார்த்த பூமியாக உள்ள இப்பகுதி விவசாய விளைநிலமாக மாறும். தற்போது மானாவாரி பகுதியாக உள்ள இந்த பகுதி மேற்கண்ட கால்வாய் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ஆண்டிற்கு ஒருபோகம் விளையும் நெல் மகசூல் இரண்டு போகமாக விளைந்து விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுவது மட்டுமல்லாமல் இப்பகுதியில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை நம்பி வாழ்க்கையை நகர்த்தும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரமும் உயரும். மேலும் காவலாகுறிச்சி, கடங்கநேரி, காடுவெட்டி, வடக்கு காவலா குறிச்சி, கீழவீராணம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்.
எனவே மிக நீண்ட கால இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்து திட்டத்திற்கு தேவையான நிதி ஒப்புதல் அளிப்பதற்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த மாதம் 1-ந் தேதி முதல் தொடங்க உத்தரவிடப்பட்டது.
- 100 சதவீதம் முழுமையாக இணைத்து சிறப்பாக பணிபுரிந்த 10 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அவர்களது பணியை பாராட்டும் விதமாக பரிசு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணியைப் பாராட்டும் விதமாக பரிசு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனி தகவல்களை உறுதிப் படுத்தவும், ஒரு வாக்காளரின் விவரங்களை ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுவது அல்லது இரு வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த மாதம் 1-ந் தேதி முதல் தொடங்க உத்தரவிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1504 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாயிலாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை தத்தமது பாகங்களில் 100 சதவீதம் முழுமையாக இணைத்து சிறப்பாக பணிபுரிந்த 10 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அவர்களது பணியை பாராட்டும் விதமாக பரிசு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
- தென்காசி மாவட்டத்தில் பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தென்காசி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் விதிகள் 2008 -ன் கீழ் தற்காலிக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் வருகிற 30- ந் தேதிக்குள் தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் போது கடை அமைவிடத்திற்கான சாலைவசதி கொள்ளளவு சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான புளு பிரிண்ட் வரைபடம், கடை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம், வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம் சமர்பிக்க வேண்டும்.
தற்காலிக உரிமத்திற்கான கட்டணம் ரூ. 500 அரசு கணக்கில் செலுத்தி அனுமதிக்கான அசல் செலுத்துதல், இருப்பிட சான்றுக்காக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவை கடை அமைக்க உத்தேசித்துள்ள கட்டடத்தில் சொத்து வரி ரசீது, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆவணங்களை தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை முடிந்த உடன் ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரங்களை இ -சேவை மையங்கள் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ் வழிமுறை பொருந்தாது. உரிய உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.