search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college professor"

    • இளையான்குடி கல்லூரி பேராசிரியருக்கு விருது வழங்கப்பட்டது.
    • அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி விருது மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் நடந்த உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கில் இளையான்குடியில் உள்ள சாகிர் உசேன் கல்லூரி வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர் நாசருக்கு சிறந்த தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் என்ற விருது கிடைத்தது.

    கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாடு குறித்த நிகழ்வுகளை சிறப்பாக செய்தமைக்கான சிறந்த கல்லூரியாகவும் சாகிர் உசேன் கல்லூரி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி விருது மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார். விருது பெற்ற உதவி பேராசிரியர் நாசரை கல்லூரி ஆட்சிகுழு செயலாளர் ஜபருல்லான், ஆட்சிகுழு நிர்வாகிகள், முதல்வர் அப்பாஸ்மந்திரி ,அழகப்பா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக இயக்குநர் வேதிராஜன், கள ஒருங்கிணைப்பாளர் அருமைரூபன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

    • கல்லூரிகளில் பேராசிரியர்கள் ‘மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும்.
    • இதற்கு பேராசிரியர்கள் தரப்பில் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    சென்னை

    உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது.

    அதேபோல், கல்வி வளர்ச்சி, ஆராய்ச்சி உள்பட அனைத்திலும் உயர்கல்வித் துறை சிறந்ததாக மாற வேண்டும், அதிலும் தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் பொற்காலமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் தற்போதைய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இதன் ஒரு அங்கமாக, பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியம் என்ற கருத்தை உயர்கல்வித் துறை சமீபத்தில் அறிவுறுத்தி இருக்கிறது.

    இது தொடர்பாக உயர்கல்வித் துறையின் துணை செயலாளர் ப.தனசேகர், உயர்கல்வித் துறைக்குட்பட்ட அனைத்து பல்கலைக்கழகம், கல்லூரிக்கல்வி இயக்குனர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணையர் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கையையும் அனுப்பி உள்ளார்.

    அதில், 'கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி காட்டும் விதமாகவும், உடல் அமைப்பை மறைக்கும் விதமாகவும் 'மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும். மேலும் பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். இதற்கு அந்தந்த நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு பேராசிரியர்கள் தரப்பில் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் எதிர்ப்பு குரலையும் பதிவு செய்கின்றனர்.

    கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் தவறவிட்ட ரூ.10 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த கல்லூரி பேராசிரியரின் நேர்மையை அனைவரும் பாராட்டினர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் ஆயிக்குளம் ரோட்டில் தனியார் வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக தனியார் கல்லூரி பேராசிரியர் செந்தில் வேலன் என்பவர் நேற்று இரவு சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.10 ஆயிரத்தை யாரோ எடுக்காமல் விட்டு சென்று விட்டது தெரியவந்தது. பணம் தாமதமாக வந்ததால் அவர் கவனிக்காமல் சென்று இருக்கலாம் என்று கருதிய செந்தில் வேலன் ஏ.டி.எம். சென்டரில் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமாரிடம் ஒப்படைத்தார்.

    அதனை பெற்று கொண்ட இன்ஸ்பெக்டர் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் ஏ.டி.எம். அறையில் உள்ள கேமிராவையும், எந்திரத்தையும் ஆய்வு செய்து உரியவரிடம் பணம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும் பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த பேராசிரியருக்கு பாராட்டு தெரிவித்தார். பேராசிரியர் செந்தில் வேலன் ஆடுதுறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருவதுடன் பகுதி நேரம் சாலையோர ஓட்டலில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கல்லூரி பேராசிரியையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வருவாய் ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், திருமங்கலம்- சோழவந்தான் ரோடு பகுதியைச்சேர்ந்தவர் பாண்டி. புதுக்கோட்டையில் வருவாய்த்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி வித்யா (வயது 27). விருதுநகரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதனால் கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வித்யா தனது பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் பாண்டி, வித்யா வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வித்யா திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    வருவாய் ஊழியர் பாண்டி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×