search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student injured"

    • மாணவர் மீது ரெயில் மோதும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்கிறது.
    • அசும்பாவித சம்பவங்களை தவிர்க்க தண்டவாளம் அருகே டிக் டாக் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், அனுமாகொண்டா மாவட்டம் காஜி பேட்டையை சேர்ந்தவர் அக்‌ஷய் (வயது 17). இவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் காஜி பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தனது நண்பர்களுடன் ரூல்ஸ் எனும் புதிய ஆப்பிள் டிக் டாக் செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது காஜி பேட்டையில் இருந்து பாலாஷா சென்ற பயணிகள் ரெயில் வேகமாக வந்தது. தண்டவாளம் அருகே அக்‌ஷய் நடந்து வரும்போது பின்புறம் ரெயில் வருவது போல் செல்போனில் படம் பிடித்தனர். தண்டவாளத்தின் அருகில் சென்ற அக்‌ஷய் மீது ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.







    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவர் மீது ரெயில் மோதும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்கிறது.

    எனவே அசும்பாவித சம்பவங்களை தவிர்க்க தண்டவாளம் அருகே டிக் டாக் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    ஒரத்தநாடு:

    நாகை மாவட்டம் பிடாரி கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் பாலாஜி (வயது 18). இவர் ஒரத்தநாட்டில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து தஞ்சையில் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இன்று காலை பாலாஜியும், அவருடன் அதே கல்லூரியில் படிக்கம் காசவளநாட்டை சேர்ந்த கருணகரன் மகன் ஹரிஹரனும் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் ஒரத்தநாட்டை அடுத்த ஈச்சன் கோட்டை பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி மோதியது. இதில் பாலாஜியும், ஹரிஹரனும் படுகாயமடைந்தனர்.

    இதுபற்றி பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் செல்வகுமார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் அவர்களை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிசசை அளித்து வருகின்றனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரியை பறிமுதல் செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.

    கோவையில் அதிவேகமாக கார் ஓட்டி வந்து கல்லூரி மாணவர் மீது மோதியது தொடர்பாக மாணவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #CoimbatoreAccident
    கோவை:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் பாலாஜி(வயது 22). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் இஸ்கான் கோவில் சாலையில் இருந்து ஜென்னி கிளப் பகுதியை நோக்கி வந்தார். கொடிசியா சாலையில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பாலாஜி படுகாயமடைந்தார். அவர் மீது மோதிய கார் நிற்காமல் மீண்டும் அதிவேகமாக சென்று விட்டது. படுகாயமடைந்த பாலாஜியை பொதுமக்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவரது மகள் தர்சனா ரூத்(21) என்பது தெரிய வந்தது. தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் தனது தோழியுடன் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது.

    விபத்தில் காயமடைந்த பாலாஜியின் தந்தை கார்த்திகேயன் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மாணவி தர்சனா ரூத் மீது அதிவேகமாக காரை ஓட்டுதல், விபத்தில் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #CoimbatoreAccident
    மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர், கருவாகுறிச்சி காலனியை சேர்ந்த தமிழரசன் என்பவர் மகன் அவினாஷ் (வயது-19). இவர் தஞ்சையில் செயல்படும் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

    இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். அவர் கக்கரையில் உள்ள தனியார் மீன்பண்ணை அருகே வந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவினாஷ் படுகாயமடைந்தார். இதனை கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவக்குழுவினர் சம்பவ இடம் விரைந்து சென்று அவினாசை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    மேலும் இந்த விபத்து தொடர்பாக ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×