என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "commander"
- ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் விமானப்படை துணைத் தளபதியாக உள்ளார்
- தற்போதைய விமானப்படை தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி பணி பெறுகிறார்
இந்திய விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக தற்போது துணை தளபதியாக உள்ள ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய விமானப்படை தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அன்றைய தினம் விமானப்படை தளபதி பதவியை அமர் ப்ரீத் சிங் ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு முதல் விமானப்படையில் சேவை ஆற்றி வரும் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், 2023 பிப்ரவரி 1 முதல் விமானப்படை துணை தளபதியாக பதவி ஏற்று பணியாற்றி வருபவர் ஆவார். நேஷனல் டிபன்ஸ் அகாடெமியில் [NDA] பயின்ற அமர் ப்ரீத் சிங் பிளைட் கமாண்டர் முதல் காமாண்டிங் ஆபிசர் வரை அனைத்து ரேங் - களையும் வகித்தவர் ஆவார்.
- ராணுவத் துணைத் தலைவராக பணியாற்றிவரும் லெப்டினென்ட் உபேந்திரா, 1984 இல் தனது ராணுவ சேவையை ஜம்மு காஷ்மீர் காலாற்படையின் 18வது படையணியில் தொடங்கினார்.
- ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் துணைத் தலைவராகவும் லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திரா பணியாற்றியுள்ளார்.
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ராணுவத் தளபதி ஜெனெரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் வரும் ஜூன் 30 உடன் முடிவடையும் நிலையில் அன்றைய தினம் புதிய தளபதியாக உபேந்திரா பதவியேற்பார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
தற்சமயம் ராணுவத் துணைத் தலைவராக பணியாற்றிவரும் லெப்டினென்ட் உபேந்திரா, 1984 இல் தனது ராணுவ சேவையை ஜம்மு காஷ்மீர் காலாற்படையின் 18வது படையணியில் தொடங்கினார். கடந்த 39 வருட காலமாக ராணுவ சேவை ஆற்றி வரும் உபேந்திரா, காஷ்மீரிலும், ராஜஸ்தானிலும் திறமையான வகையில் தனது படையணியை வழிநடத்தியுள்ளார்.
மேலும் இந்தியாவின் வட கிழக்குப் பகுதியில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அசாம் ரைபிள்ஸ் படைக்கு கமாண்டராகவும், இன்ஸ்பெக்டர் ஜெனெரலாகவும் பணியாற்றியுள்ளார். ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் துணைத் தலைவராகவும் லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திரா பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில்தான் இந்திய ராணுவத்தின் 30 வது தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திரா வரும் 30 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். முன்னதாக தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் மக்களவைத் தேர்தல் சமயத்தில் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கடற்படை தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
- முதல் பெண் என்ற பெருமையை லிசா பிரான்செட்டி பெறுவார்.
அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடற்படை தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய தளபதியாக லிசா பிரான்செட்டியை அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார். அவரது நியமனத்துக்கு சென்ட்சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அது உறுதி செய்யப்பட்டால் அமெரிக்க ராணுவ தளபதியாக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை லிசா பிரான்செட்டி பெறுவார்.
தற்போது கடற்படையின் துணை தலைவராக உள்ள லிசா, பணியாளர்களின் தலைமையில் முதல் பெண் உறுப்பினர் ஆவார். கடல் மற்றும் கரையோர அனுபவத்தின் அடிப்படையில் லிசா பிரான்செட்டியை கடற்படை தளபதியாக அதிபர் ஜோபைடன் தேர்ந்தெடுத்துள்ளார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஒரு சில பகுதிகளில் இருந்து வருகிறது. தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்பு படையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.
அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்க கூட்டுப்படைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவம் இணைந்து ஐ.எஸ் அமைப்பு பதுங்கி இருந்ததாக கருதிய இடங்கள் மீது பல்வேறு வித தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐ.எஸ் இயக்கத்தின் தலைமை தளபதி அபு சயீத் உயிரிழந்ததாக அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷா உசைன் தெரிவித்துள்ளார்.
இதே தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் தலைவனாக செயல்பட்டு வந்த அபு சாட் எர்ஹாபி என்பவன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IS #US #Afganistan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்