search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Common people"

    • சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
    • குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மேற்குமாம்பலம் பகுதியில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் டேங்கர் லாரி குடிநீரையே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டேங்கர் லாரிகளில் குடிநீரை பெறுதற்காக பொதுமக்கள் மாதம் ரூ.10 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டிய அவலநிலை இருப்பதாக வேதனைப்படுகின்றனர்.

    மேற்கு மாம்பலம் விவேகானந்தபுரம் 1-வது தெரு, பாலகிருஷ்ண முதலி தெரு, பாலகிருஷ்ண நாயக்கர் தெரு, சீனிவாச பிள்ளை தெரு, சீனிவாச அய்யங்கார் தெரு, வேலு தெரு, கணபதி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி கடந்த ஒரு மாதமாக வறண்டு கிடப்பதால், அந்த பகுதி மக்கள் தண்ணீர் லாரிகளையே நம்பியுள்ளனர்.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் பகுதிகளுக்கு தினமும் சுமார் 17 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குகிறோம். சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக 150 மில்லியன் லிட்டர் குடிநீரை நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை, செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் வீராணம் ஏரியை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறுகிறோம்.

    கடந்த ஜனவரி மாதத்தில், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஆற்காடு சாலையில் உள்ள குடிநீர் குழாய் மெட்ரோ ரெயில் பணியின் போது சேதமடைந்தது. அந்த குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டு, குடிநீர் பிரச்சினையை சரி செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'சென்னை குடிநீர் வாரியம், சேதம் அடைந்த குழாய்களை சரி செய்தாலும், தண்ணீரின் அழுத்தம் மற்றும் அளவு ஆகியவை கணிசமாக குறைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான குடிநீர் குழாயை பெரியதாக மாற்றுமாறு சென்னை குடிநீர் வாரியத்துக்கு கடிதம் எழுதினோம். வெறும் 35 வீடுகள் இருந்த இடத்தில், இப்போது கிட்டத்தட்ட 200 வீடுகள் உள்ளன. இதனால் தண்ணீர் போதவில்லை.

    சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதி மக்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை சரியாக செலுத்துவதால், குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • அர்ப்பணித்த தலைவரை இழந்து விட்டோம்

    புதுச்சேரி:

    புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் உடல் நலக்குறைவால் கடந்த 5-ந் தேதி இரவு மரண மடைந்தார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர், ப.கண்ணன் மனைவி சாந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    உங்கள் கணவர் ப.கண்ணன் மறைவு செய்தி கேட்டு நான் மிகவும் வருந்தினேன். பொது மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த தலைவரை இழந்து விட்டோம். புதுச்சேரியின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு நினைவு கூறப்படும்.

    அவரை இழந்து வாடும் உங்கள் வேதனையையும், துயரத்தையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ப.கண்ணன் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் தட்டாம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள்நடும் விழா நடந்தது.
    • நிகழ்ச்சியில் செவ்வாடை பக்தர்களும் பொது மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    கடலூர்:

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அருளாணையின் படி கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் தட்டாம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள்நடும் விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ஊராட்சி மன்ற தலைவர் சுதாவேணுகோபால், ரமேஷ், ரவி மற்றும் பிரச் சாரக் குழு உறுப்பி னர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இயற்கை வளத்தை போற்றி பாது காக்கும் இந்த நிகழ்ச்சியில் செவ்வாடை பக்தர்களும் பொது மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    • கடலூரில் இருந்து புதுப்பாளையம் செல்வ தற்காக அரசு பஸ்சில் ஏறினார்.
    • ஒரு பெண் நந்தினி வைத்திருந்த கைப்பையில் இருந்த மணிப்பரிசை எடுத்த போது அதிர்ச்சி அடைந்தார்.

    கடலூர்:

    கடலூர் கூத்தப்பாக் கத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 29). இவர் தொண்ட மாநத்தம் தபால் துறை அலுவலகத்தில் பணி புரிந்து வருகின்றார். சம்பவத் தன்று கடலூரில் இருந்து புதுப்பாளையம் செல்வ தற்காக அரசு பஸ்சில் ஏறினார். அப்போது அங்கு இருந்த ஒரு பெண் நந்தினி வைத்திருந்த கைப்பையில் இருந்த மணிப்பரிசை எடுத்த போது அதிர்ச்சி அடைந்தார். அப்போது நந்தினி சத்தம் போட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது கடலூர் மஞ்சக்குப்பம் அங்கா ளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தேன்மொழி (27) என்பது தெரிய வந்தது. இது குறித்து திருப்பாதிரிபுலியூர் போலீீசார் வழக்கு பதிவு செய்து தேன்மொழியை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது
    • சளித் தொல்லை, காய்ச்சல், தலைவலி போன்றவை பொது மக்களை பாடாய் படித்துக் கொண்டிருக்கிறது

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் கடும் குளிர்வாட்டி எடுக்கிறது.

    இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக நீடிக்கும் மழையும் குளிருடன் சேர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் சளித் தொல்லை, காய்ச்சல், தலைவலி போன்றவை பொது மக்களை பாடாய் படித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பேர் சளி, காய்ச்சல் தொல்லையால் அவதி அடைந்து வருகின்றனர்.

    குழந்தைகளுக்கு வறட்டு இருமலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சளி, காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவ–மனைகளிலும் மக்களின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

    இது குறித்து டாக்டர்கள் கூறும்போது, இரவில் நிலவும் கடும் குளிர் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இருக்க கம்பளி ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.

    மேலும் காலை நேரங்களில் வெளியில் செல்பவர்கள் காதுகளை மறைக்கும் வகையிலான குல்லா உள்ளிட்டவைகளை அணிந்து செல்லலாம்.

    காது மற்றும் மூக்கு வழியாகவே பனிக்காற்று உடலில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பயணத்தின் போது மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது. இதைப்போல் நீரை காய்ச்சி குடிப்பதும் நல்லது என்றனர். 

    ×