search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "complains"

    • வலைத்தளத்தில் கண்ணியமற்ற முறையில் அவதூறு பரப்புகின்றனர்.
    • நான் அணியும் ஆடைகள் பற்றியும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.

    மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் மாளவிகா மேனன், தமிழில் 'இவன் வேற மாதிரி, பிரம்மன் வெத்து வேட்டு, விழா, பேய் மாமா, அருவா சண்ட' உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.மாளவிகா மேனனுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இதற்கு மாளவிகா மேனன் கண்டனம் தெரிவித்தார்.

    அவர் கூறும்போது, ''வலைத்தளத்தில் கண்ணியமற்ற முறையில் அவதூறு பரப்புகின்றனர். யாரை பற்றியும் இழிவாக பேசலாம் என்று நினைக்கிறார்கள். நான் அணியும் ஆடைகள் பற்றியும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்'' என்றார்.

    மேலும் வலைத்தளத்தில் தனக்கு எதிராக அவதூறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேரள சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்தார். கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவதூறு பதிவு வெளியிட்டவரை கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இளம்பெண்ணுக்கு சொந்தமாக அர்த்தனாரி பாளையத்தில் 5 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது.
    • தி.மு.க. பிரமுகர் எனது சொத்தை அவர்களுடைய பெயருக்கு எழுதி கொடுக்கும்படி தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுக்கிறார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சியைச் சேர்ந்தவர் 41 வயது இளம்பெண். இவர் இன்று காலை கோவை மாவட்ட சூப்பிரண்டு அலுவல கத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகன் உள்ளனர். எனது கணவர் பிரிந்து சென்று விட்டார். எனக்கு சொந்தமாக அர்த்தனாரி பாளையத்தில் 5 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இதில் நான் விவசாயம் செய்தும், ஆடு, மாடுகளை வளர்த்தும் தொழில் செய்து வருகிறேன். மேலும் தையல் தொழிலும் செய்து வருகிறேன்.

    இந்த நிலையில் எனக்கும், எனது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த 2 பேருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் எனது தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து மின்சார வயரை அறுத்து தண்ணீர் குழாய்களை உடைத்து நான் விவசாயம் செய்ய முடியாமல் செய்தனர்.

    இதுசம்பந்தமாக அவர்களைக் கேட்டபோது தி.மு.க. பிரமுகர் ஒருவரை சந்தித்து பஞ்சாயத்து பேச வருமாறு அழைத்தனர். நான் அவரிடம் சென்ற போது அவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அங்கிருந்து தப்பி வெளியே வந்தேன்.

    பின்னர் இதுகுறித்து ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தேன்.

    இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி நான் எனது தோட்டத்தில் தக்காளி ஏற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த எனது பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனது மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்ய முயன்றனர். மேலும் அவர்கள் தி.மு.க. பிரமுகர் அழைக்கும் இடத்திற்கு நீ வரவேண்டும், இல்லையென்றால் உன்னையும், உனது குழந்தைகளையும் கார் ஏற்றி கொன்று விடுவோம் என மிரட்டுகின்றனர்.

    மேலும் தி.மு.க. பிரமுகர் எனது சொத்தை அவர்களுடைய பெயருக்கு எழுதி கொடுக்கும்படி தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே தி.மு.க. பிரமுகர் உட்பட 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கும், எனது குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் புகார் கொடுத்தனர்.
    • சீமானின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மாநில பொறுப்பாளர் ராஜாராம் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தன் பெயரில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பொய் குற்றச்சாட்டுகள், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், மத நல்லிணக்கத்தை சீர்கெடுக்கும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும், சீமானின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்படும் நடிகை விஜயலட்சுமி மற்றும் அவருடன் உள்ள வீரலட்சுமி ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும், என தெரிவித்திருந்தனர். மனுவை போலீஸ் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

    • மகளிர் அணி நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
    • ஆபாசமாகவும், அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையில் பாட்டு பாடியும் உள்ளார்கள்.

    திருப்பூர்:

    தி.மு.க. மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளரும் தலைமை பொதுக்குழு உறுப்பினருமான உமா மகேஸ்வரி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் நடந்த அதி.மு.க.வின் மாநாட்டில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரை மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையில் பாட்டு பாடியும், அநாகரிகமான முறையில் பேசியும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டதை அனைத்து அ.தி.மு.க.வின் தலைவர்களும் ரசித்து ஏளனமாக கைதட்டி சிரித்து உற்சாகபடுத்தினர். லட்சக்கணக்கான அ.தி.மு.க.வின் தொண்டர்கள் மத்தியில் இப்படி பேசியதை பார்த்த எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் ஏற்பட்டுள்ளது.

    எனவே மாநாடு நடத்திய அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ஷபானா திடீரென்று மாயமானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி ராஜாஜி வீதியை சேர்ந்தவர் சவுக்கத்அலி(25). இவரது மனைவி ஷபானா(23). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமானது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோபி ஜெய்துர்கை நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ஷபானா திடீரென்று மாயமானார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் கோபி போலீசில் கணவர் சவுக்கத்அலி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×