search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "condemn"

    • ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அமெரிக்கா நேற்று தனது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
    • உயிர் இழப்புகள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருக்கலாம் என்றும் ஹவுதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    சனா:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்து வரும் அவர்கள் செங்கடல் பகுதியில் சமீபகாலமாக இஸ்ரேல் துறைமுகங்களுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணைகள், டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை உடனே நிறுத்துமாறு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து கப்பல்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர்.

    ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அமெரிக்கா நேற்று தனது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதையடுத்து ஏமன் நாட்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள் இணைந்து கடுமையான வான் வெளி தாக்குதலில் ஈடுபட்டது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளை குறிவைத்து இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் இருநாட்டு படைகளின் போர் விமானங்கள், போர் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள் ஈடுபட்டது. இதில் 5 பேர் பலியானதாகவும். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஏமன் தலைநகர் சனாவில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள் 2-வது நாளாக மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சுமனை சுற்றி வளைத்து இந்த தாக்குதல் நடந்தது. கடந்த 48 மணி நேரத்தில் 73 குண்டு வீச்சுகள் நிகழ்ந்ததாகவும், இதனால் உயிர் இழப்புகள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருக்கலாம் என்றும் ஹவுதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தொடர் தாக்குதலால் ஏமனில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நாசர் கனானி கூறும் போது ஹவுதி கிளர்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நடத்தி வரும் தாக்குதல் தன்னிச்சையான நடவடிக்கையாகும், இது சர்வதேச சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறும் செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.

    செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதலை தொடர்ந்தால் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில் ஹவுதி மீதான தாக்குதலால் கச்சா எண்ணை விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளது.

    • தமிழ்நாடு சட்டமன்றத்தில் மரபுகளை மீறி கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட்டது கண்டிக்கத்தக்கது.
    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் பேசும்போது:-

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் மரபுகளை மீறி கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட்டது கண்டிக்கத்தக்கது.

    தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்கான அழைப்பிதழ்களில் தமிழ்நாடு அரசின் இலட்சினை (முத்திரை) பதிப்பதை தவிர்த்திருப்பதும், தமிழ்நாடு என்று பதிவு செய்ய மறுத்திருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் சித்தாடி ராஜா, மாநில ஊடகப் பிரிவு செயலாளர் சாக்கோட்டை ராஜா, மகளிர் விடுதலைப் பேரமைப்பின் மாநில செயலாளர் வெண்ணிலா, கும்பகோணம் மாநகர செயலாளர் ஜெயசங்கர், தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் குபேந்திரன், திருவாரூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் தெற்கு பட்டம் திருமேனி, இலையூர் கலையரசன், தஞ்சை வடக்கு மாவட்ட ஒருங்கிணைந்த அரசு ஊழியர் பேரவை மாவட்ட செயலாளர் அசுரன், திருவாரூர் மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் ரமேஷ், ரீகன், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் துரை.பிரபு, திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய செயலாளர் கோவி.இளையபெருமாள், கும்பகோணம் வடக்கு ஒன்றிய செயலாளர் முரளி, குடவாசல் மேற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, கொரடாச்சேரி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் இளையூர் செல்வம், வலங்கைமான் ஒன்றிய செயலாளர் சதீஷ், குடவாசல் மேற்கு ஒன்றிய தலைவர் சாலமன், பாபநாசம் ஒன்றிய தலைவர் தமிழ்மாறன், வலங்கைமான் மேற்கு ஒன்றிய தலைவர் கோபி என்கிற கலியமூர்த்தி, திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், திருவிடைமருதூர் ஒன்றிய துணைச் செயலாளர் அன்புராஜ், குடந்தை ஒன்றிய தொழிலாளர் விடுதலைப் பேரவை ஒன்றிய செயலாளர் முருகராஜ், இளந்தமிழ்ப்புலிகள் பாசறை ஒன்றிய செயலாளர் கௌதமன், திருப்பனந்தாள் ஒன்றிய துணைச் செயலாளர் அஜித், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    பா.ஜ.க.வுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு முக ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசி வருவதாக இன்று காலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியுடன் நான் பேசியதாக பச்சைப் பொய் கூறிய தமிழிசைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்



    பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை இந்த அளவு தரம் தாழ்த்திக் கொண்டது வேதனை அளிக்கிறது. 

    ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதில் இரட்டிப்பு உறுதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
    காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். #PulwamaAttack #Israel #Plaestine
    ஜெருசலேம்:

    காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளின் தலைவர்களும் இந்த தாக்குதலை கண்டித்து உள்ளனர்.

    இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூ தனது டுவிட்டர் தளத்தில், ‘அன்பு நண்பரும், இந்திய பிரதமருமான நரேந்திர மோடிக்கு, இந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சோக மயமான இந்த நேரத்தில், உங்களுக்கும், பாதுகாப்பு படையினர் மற்றும் இந்திய மக்களுக்கும் நாங்கள் துணை நிற்கிறோம். தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு எங்கள் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

    இதைப்போல பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பயங்கரவாத தாக்குதலால் மிகுந்த ரணம் ஏற்பட்டு இருக்கும் இந்த நேரத்தில், உங்களுக்கும், உங்கள் மக்களுக்கும், அரசுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களுடனும், உங்கள் மக்களுடனும் எங்கள் உடனிருப்பையும், கூட்டணியையும் உறுதிப்படுத்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இறைவன் இரக்கம் காட்டுவாராக’ என்று குறிப்பிட்டு இருந்தார்.  #PulwamaAttack #Israel #Plaestine 
    புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, இனி போர்க்களத்தில்தான் பேச வேண்டும் என கிரிக்கெட் வீரர் காம்பிர் ஆவேசமாக கூறியுள்ளார். #PulwamaAttack #GautamGambhir
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.



    இந்த தாக்குதலை பிரதமர் மோடி கடுமையாக கண்டித்துள்ளார். பயங்கரவாதிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும், அதற்கான பெரிய விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் மோடி எச்சரித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுப்பதற்காக பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர், டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘இப்போது பிரிவினைவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் அந்த பேச்சுவார்த்தை போர்க்களத்தில் இருக்க வேண்டும். பொறுத்தது போதும்’ என்று காம்பிர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் கூறுகையில், “நமது வீரர்கள் மீதான கொடூர தாக்குதலைக் கேட்டு கவலையும் வேதனையும் அடைந்தேன். நமது வீரர்கள் பலர் மரணம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.

    இதேபோல் ஷிகர் தவான், மயாங்க் அகர்வால், முகமது கைப், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களும் கண்டனம் தெரிவித்து டுவிட் செய்துள்ளனர். #PulwamaAttack #GautamGambhir
    திமுகவை குறித்து விமர்சித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri #KamalHaasan
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.
     
    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் சேர்க்க காங்கிரஸ் விரும்பியது.

    இதற்கிடையே, காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் மிகவும் நல்லது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியிருந்தார்.

    இந்நிலையில், திமுகவை குறித்து விமர்சித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கேஎஸ் அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



    பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்தேன். கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும்போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது என் கவனத்திற்கு வரவில்லை.

    அவசியமில்லாமல், தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக மீதான விமர்சனம் தேர்தல் நேரத்தில் பாஜகவுக்குதான் உதவும். 

    எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமையிலான கூட்டணிதான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri #KamalHaasan
    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்த குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. #RKNagarElections #HighCourt #VijayaBaskar
    சென்னை:

    ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

    ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா? இந்த விவகாரத்தில் எஃப்ஐஆரில் ஏன் ஒருவரை கூட சேர்க்கவில்லை?

    ஆர்.கே.நகர் தொகுதில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 883 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. வருமான வரித்துறை அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை ஏன் சேர்க்கவில்லை? அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட மூன்று பேர் மீது காவல் துறையினர் எப்.ஐ.ஆர். பதிவு செய்யாதது ஏன்?

    வாக்காளர்களுக்கு பணம் அளித்தது யார்? தேர்தல் ஆணையம் அளித்த புகாரிலேயே இந்த நிலை என்றால் சாதாரண மக்கள் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பினர்.

    எனவே, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், தமிழக அரசு மற்றும் வருமானவரித்துறை ஆகியவை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. #RKNagarElections #HighCourt #VijayaBaskar
    சர்கார் படத்திற்கு எதிரான கருத்துக்கள் மற்றும் வன்முறைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை பதிவு செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Sarkar #Rajini #Vijay
    சென்னை:

    நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படம் ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான காட்சிகளையும், வசனங்களையும் கொண்டு இருப்பதாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பியுள்ளன. மேலும், குறிப்பிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என அமைச்சர்கள் சிலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், தமிழகம் முழுவதும் சர்கார் படத்துக்கு எதிராக வன்முறை செய்யப்படுகிறது. படத்தின் போஸ்டர்கள், கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களை கிழித்தும், படத்தை திரையிட விடாமல் தடுத்தும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில், இன்று மாலை இயக்குனர் ஏ.ஆர்.  முருகதாஸ் வீட்டுக்கு போலீசார் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கைது செய்வதற்காகவே போலீசார் சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.



    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தணிக்கை குழுவால் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு திரைப்படத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், ‘தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #Sarkar #Rajini #Vijay
    புதிய இந்தியாவின் ஒரே தொண்டு நிறுவனமாக ஆர்.எஸ்.எஸ் மட்டுமே செயல்பட்டு வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #RahulGandhi #RSS
    புதுடெல்லி:

    கடந்த ஜனவரி 1 அன்று பீமா கோரேகானில் நடந்த வன்முறையுடன் தொடர்புடையதாக 9 செயற்பாட்டாளர்களின் வீடுகளில் புனே போலீசார் சோதனை நடத்தி 5 பேரை கைது செய்தனர். மேலும், டெல்லி, பரீதாபாத், கோவா, ராஞ்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் வீட்டில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகளுக்கு பல தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், புதிய இந்தியாவின் ஒரே தொண்டு நிறுவனமாக ஆர்.எஸ்.எஸ் மட்டுமே செயல்பட்டு வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிடுகையில், இந்தியாவில் ஒரே ஒரு தொண்டு நிறுவனம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்ற அனைத்து தொண்டு நிறுவனங்களும் மூடப்பட்டு விட்டன. அரசை எதிர்த்து பேசினால் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. புதிய இந்தியாவுக்கு நல்வரவு என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #RSS
    காஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #USEmbassyJerusalem #Gaza #Macron
    பாரிஸ்:

    இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்றும் உறுதியளித்தார். அவரது அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

    இதற்கிடையே, கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் நேற்று திறக்கப்பட்டது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 



    அமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியதால், இஸ்ரேல் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 37 பேர் பலியாகினர்.

    இந்நிலையில், காஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் தனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. இதுதொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் அடுத்த சில தினங்களில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #USEmbassyJerusalem #Gaza #Macron
    பாரிசில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு அதிபர் எம்மானுவல் மெக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #Knifeattack #emmanuelmacron
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஒபரா ஹவுஸ் அருகே மர்ம நபர் ஒருவர் கண்ணில் எதிர்ப்பட்ட நபர்களை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டான். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கோரத் தாண்டவத்தில் ஈடுபட்ட அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.



    இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரத்தத்துக்கான விலையை பிரான்ஸ் மீண்டும் கொடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், பாரிசில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பின் வலைத்தளத்தில், பாரிஸ் தாக்குதலுக்கு எங்கள் அமைப்பு தான் மூளையாக செயல்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. #Knifeattack #emmanuelmacron
    இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Trump #theresamay
    வாஷிங்டன்:

    ஈரான் அரசு சிரியாவில் இருந்து தனது எதிரி நாடான இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஏறக்குறைய 20 ஏவுகணைகளை கொண்டு கோலன் பகுதியிலுள்ள இஸ்ரேலிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் சில ஏவுகணைகளை இஸ்ரேல் வழிமறித்து அழித்துள்ளது.

    இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதுபற்றி தொலைபேசி மூலம் பிரிட்டன் பிரதமர் தெரசா மே உடன் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார்.  

    அதன்பின்னர் வெள்ளை மாளிகை வெளிட்டுள்ள செய்தியில், ‘சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் அரசு நடத்திய முன்னறிவிக்கப்படாத ஏவுகணை தாக்குதல்களுக்கு இரு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஈரானின் தாக்குதல் போக்கை சரியான முறையில் எப்படி எதிர்கொள்வது என அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #Trump #theresamay
    ×