என் மலர்
நீங்கள் தேடியது "Condolences"
- நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில், மேரு மலையே தலைவணங்கும் அளவுக்கு வாழ்ந்த ராமோஜி ராவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இயக்குனர் ராம் கோபால் வர்மா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டி, ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமேஜி ராவ் (87) உடல்நகுறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.
ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவியதன் மூலம் ஐதராபாத் மற்றும் திரைப்படத் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ராமோஜி ராவ். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், 'ராமோஜி ராவ் இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவருடன் பல முறை உரையாடுவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி' என்று பதிவிட்டுள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில், மேரு மலையே தலைவணங்கும் அளவுக்கு வாழ்ந்த ராமோஜி ராவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
ஜுனியர் என்.டி.ஆர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய சினிமாவிலும் பத்திரிக்கைத் துறையிலும் தீர்க்கதரிசியாக விளங்கிய ராமோஜி ராவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். எனது முதல் படமான நின்னு சூடலனி உருவாக காரணமாக இருந்த அவரை என்றென்றைக்கும் நினைவில் வைத்திருப்பேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இயக்குனர் ராம் கோபால் வர்மா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
- சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக தற்போது வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார் போலே பாபா
- போலே பாபாவின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 121 பேரை பலிகொண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்திய போலே பாபா சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக தற்போது வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் மூலம் கமிட்டி நிர்வாகிகளை தொடர்புகொண்டு படுகாயமடைந்த உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பக்கத்துணையாக நிற்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக 88,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட நிகழ்ச்சியில் 2.5 லட்சம் பேர் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேற மற்றோரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுக்க எதிர்புறமாக முன்னேறியதால் இந்த விபத்து நிகழ்ச்த்துள்ளது என்று தெரியவந்தது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலே பாபா தனது காரில் அங்கிருந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.
இந்த சம்பவம் தொடர்பாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மதுக்கர் என்ற நபர் இன்று போலீசிடம் சரணடைந்துள்ளார். போலே பாபாவின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
- ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
- கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் போலே பாபா மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.
ஹத்ராஸில் 121 பேரை பலிகொண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு பிறகு போலே பாபா தலைமறைவாக இருந்தார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு இரங்கல் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் மூலம் கமிட்டி நிர்வாகிகளை தொடர்புகொண்டு படுகாயமடைந்த உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பக்கத்துணையாக நிற்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று பேசியுள்ளார்.
இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
"ஹத்ராஸ் ஆன்மிக கூட்டத்தில், தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, "ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல. சமூக விரோதிகளின் சதி செயல்" என போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
- 1994 சட்டப்பேரவை தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் வெற்றி பெற்றார்
- தனது சகோதரரின் புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிர்ந்தார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் ராமமூர்த்தி நாயுடு [வயது 72] காலமானார். இவர் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 1994 சட்டப்பேரவை தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பணியாற்றியவர் ஆவார்.
கடந்த 3 நாட்கள் முன்னாள் மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (நவ.16) மதியம் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சகோதரரின் புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'எனது சகோதரரும், சந்திரகிரி முன்னாள் எம்எல்ஏவுமான நாரா ராமமூர்த்தி நாயுடு நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்பதை கனத்த இதயத்துடன் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- நேற்றைய தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
- உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நேற்றைய தினம் [டிசம்பர் 12] ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரித்துள்ளார்.
- பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கொள்கை பரப்பு துணை செயலாளராக பணியாற்றினார்.
ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளாருமான பி.ஆர்.சுந்தரம் (73) உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். இன்று மாலை இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், " மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுந்தரம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அரசியல் நண்பர்கள், நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான பி.ஆர்.சுந்தரம், கட்சியின் மாவட்ட அவைத்தலைவராக பதவி வகித்தவர். 1996 முதல் 2006 வரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் 2014 முதல் 2019 வரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர்.
அதிமுகவில் நீண்ட காலம் பயணித்த பி.ஆர்.சுந்தரம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.
பின்னர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கொள்கை பரப்பு துணை செயலாளராக பணியாற்றினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

கோவா மாநிலத்திற்கு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் என்ற பெருமைக்குரியவர் மனோகர் பாரிக்கர். இவர் இரண்டு முறை கோவா மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். இவர் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.
இவர் சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராகவும் இருந்தார். கோவா மாநிலத்தின் முதல்-அமைச்சர் மனோகர் பாரிக்கரின் மறைவு கோவா மாநிலத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ManoharParrikar #EdappadiPalaniswami
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் வழிபாட்டை முடித்து விட்டு ராமேசுவரம் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும்போது, புதுக்கோட்டையை அடுத்த திருமயம் அருகே அவர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் உயிர்ப்பலி ஏற்பட்டதை அறிந்ததும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்த அவர் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். #PudukkottaiAccident #ChandrasekharRao #Pilgrims
