search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Constables"

    • இந்த சம்பவம் தொடர்பாக ரோகித் வால்மீகி புகார் அளித்துள்ளளார்.
    • இந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    மத்தியபிரதேச மாநிலத்தில் காவலர்களின் வாகனங்களை முந்தி சென்றதற்காக தலித் தூய்மை பணியாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ரோகித் வால்மீகி புகார் அளித்துள்ளளார். அந்த புகாரில், "வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு செல்லும்போது போலீஸ் மற்றும் பணியாளர்களின் வாகனங்களை முந்தி சென்றேன். இதனையடுத்து, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக என்னை மிரட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கினார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஆண்களுக்கு பாளை ஆயுத படை மைதானத்தில் உடல் தகுதித்தேர்வு நடைபெற்றது.
    • பாளை தனியார் பள்ளியில் பெண்களுக்கான உடல் தகுதித்தேர்வு நடந்தது.

    நெல்லை:

    தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய தீயணைப்புத்துறை, சிறைத்துறை, காவல்துறை 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித்தேர்வு நேற்று தொடங்கியது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஆண்களுக்கு பாளை ஆயுத படை மைதானத்திலும், பெண்களுக்கு பாளை தனியார் பள்ளியி லும் தேர்வுகள் தொடங்கி யது. இதற்காக 1,159 ஆண்களுக்கும், 544 பெண்களுக்கும் அழைப் பாணை அனுப்பப்பட்டது.

    பாளை ஆயுதப்படை மைதானத்தில் முதல் நாளான நேற்று 351 பேர் கலந்து கொண்ட நிலையில், இன்று 2- வது நாளாக 400 பேருக்கு அழைப்பு விடுக்கபட்டது. அதில் 340 பேர் பங்கேற்றனர். அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு உயரம், எடை அளவீடு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டப்பந்தைய போட்டி நடந்தது. அதனை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நாளை கயிறு ஏறும் போட்டி நடத்தப்படும். இதேபோல் பாளை தனியார் பள்ளியிலும் 2- வது நாளாக பெண்களுக்கான உடல் தகுதித்தேர்வு நடந்தது.

    இதில் கலந்து கொள்வதற்காக 244 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று 235 பேர் கலந்து கொண்ட நிலையில் இன்று மேலும் 210 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தையம் நடத்தப்பட்டது.

    ×