என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "constituency Allocate"

    • வேறு சில மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
    • தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு (2026) இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ் நாட்டில் 8 எம்.பி. இடங்கள் வரை குறையும் அபாயம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதேபோன்று வேறு சில மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

    இதையடுத்து தொகுதி மறு சீரமைப்பை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் 24 கட்சிகள், அமைப்புகள் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கைகளை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டாலும் இது தொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்ய காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. காங்கிரஸ் தேசிய கட்சி என்பதால் இது தொடர்பான கருத்துக்களை ஆய்வு செய்ய குழு அமைக்க முடிவு செய்துள்ளோம்.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை தெளிவான தகவல்களை வெளியிடவில்லை. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வெளியாகும் யூகத்தின் அடிப்படையிலான தகவல்களுக்கு மத்திய அரசு உரிய விளக்கங்களை தர வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையை மக்கள் தொகை பற்றிய புதிய கணக்கெடுப்பு நடத்தும் வரை மேற்கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • திமுக அரசு இந்தாண்டு அறிவித்துள்ள திட்டங்களை எதையும் செயல்படுத்த முடியாது.
    • சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால் அறிவிப்புகளை நிறைவேற்ற முடியாது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் திமுக அரசின் 4 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் கெட்டுள்ளது. தமிழகத்தில் ஊழல் மலிந்து உள்ளது, சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளது.

    தற்போதைய பட்ஜெட், தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்வதற்காக தான். திமுக அரசு இந்தாண்டு அறிவித்துள்ள திட்டங்களை எதையும் செயல்படுத்த முடியாது.

    சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால் அறிவிப்புகளை நிறைவேற்ற முடியாது. சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை மறைக்கவே பிற மாநில தலைவர்களை அழைத்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் பேசியுள்ளார்.

    தொகுதி மறுசீரமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். பாராளுமன்ற வளாகத்தில் நடந்த திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.

    தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க தி.மு.க. எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசு வழங்கி இருந்தார்.
    • பாராளுமன்றம் கூடியதும் இது பற்றி விவாதிக்க சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளிக்கவில்லை.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடந்து வருகிறது. பாராளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகாகும்பமேளா குறித்து பேசினார்.

    இதனையடுத்து, மக்களவையில் பிரதமர் மோடி, முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்றத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க தி.மு.க. எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசு வழங்கி இருந்தார். ஆனால் இன்று பாராளுமன்றம் கூடியதும் இது பற்றி விவாதிக்க சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளிக்கவில்லை.

    மேல் சபையிலும் தொகுதி மறுவரையரை குறித்து விவாதிக்க அனுமதி வழங்கப்பட வில்லை. இதையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் பாாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.பி. திருச்சி சிவா, "தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு கட்டாயம் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று தெரிவித்தார். 

    • தெலுங்கானா துணை முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
    • பி.ஆர்.எஸ்., பாஜக காட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர், பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளும் பங்கேற்றன.

    தமிழ்நாட்டை தொடர்ந்து தெலுங்கானாவில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

    தெலுங்கானா துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., சிபிஐ, சிபிஐ(எம்) கட்சிகள் பங்கேற்றன. பி.ஆர்.எஸ்., பாஜக கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.

    வரும் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றவுள்ளது. இதில் கலந்து கொள்ள கேரளா, கர்நாடகா, தெலுங்கானா முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

    • தொகுதி மறு வரையறை என்னும் கத்தி தென்னிந்தியாவின் மீது தொங்கிக் கொண்டுள்ளது.
    • தொகுதி மறு சீரமைப்பை கடுமையாக எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அனைத்துக்கட்சி கூட்டம் தமிழர்களின் உரிமையை காக்க கூட்ட்பபட்டுள்ளது. தொகுதி மறு வரையறை என்னும் கத்தி தென்னிந்தியாவின் மீது தொங்கிக் கொண்டுள்ளது. அதனால், தொகுதி மறு சீரமைப்பை கடுமையாக எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகள் 31ஆக குறையும் ஆபத்து உள்ளது.

    மக்கள் தொகையை கட்டப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது.

    இது மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை பற்றிய கவலை இல்லை. தமிழகத்தின் உரிமை சார்ந்த கவலை.

    தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் 8 தொகுதிகளை இழந்து தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தால் தமிழகத்தின் குரல் நசுக்கப்படும்.

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.

    மத்திய அரசின் சதியை அனைத்து கட்சிகளும் ஒருசேர இணைந்து முறியடிக்க வேண்டும்.

    நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ள தென்மாநிலங்களுக்கு தரக்கூடிய தண்டனையாகவே இதை பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
    • தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும்.

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    மக்கள் தொகை கட்டுப்பாட்டை விழிப்பாக செயல்படுத்தியதற்காக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதை ஏற்க முடியாது.

    2026 மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    1971 மக்கள் தொகை அடிப்படையில் வரையறுக்கப்பட்ட தொகுதிகள் மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

    தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும்.

    தென்மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது.
    • மக்கள்தொகை குறைவாக உள்ளதால் தொகுதி மறுவரையறையில் தமிழகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

    இதைதொடர்ந்து, முதலமைச்சர் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிற கட்சிகள் கூட்டுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    அப்போது, " பிற மாநில மக்கள் தொகையுடன் தமிழக மக்கள் தொகையை ஒப்பிட்டு புள்ளி விவரங்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

    மேலும் அவர், " மக்கள்தொகை குறைவாக உள்ளதால் தொகுதி மறுவரையறையில் தமிழகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது" என்றார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், " தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் எந்த முடிவையும் ஏற்போம்" என்றார்.

    பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், " தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைத்து நாம் எதிர்க்க வேண்டும்.

    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தனியாக போராடினால் தீர்வு கிடைக்காது. பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைக்க வேண்டும்" என்றார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், " தொகுதி மறுவரையறை செய்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சமவாய்ப்பு தரப்பட வேண்டும்" என்றார்.

    தொகுதி மறுவரையறை எதிர்க்கின்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேசிய அளவில் கூட்டம் நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, " தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவுக்கு எதிரான சக்தியாக நாம் உருவாக வேண்டும். தொகுதி அரசியல் அமைப்பு என்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபிக்க வேண்டும்.

    ஒத்த கருத்து கொண்டவர்களை நாம் ஒன்றிணைத்து மாநிலங்களின் உரிமைக்காக போராடி வேண்டியது அவசியம். பாஜக ஆளும் மாநிலங்கள் பெரும்பான்மையாக உள்ளதால் மறுவரையறையை சர்வாதிகாரத்துடன் செயல்படுத்த நினைக்கின்றனர்" என்றார்.

    • தொகுதி மறுசீரமைப்பு என்னும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது.
    • தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதை குறைக்கின்ற அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது மாடி கூட்டரங்கில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங் களவை உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முன் னாள் எம்.எல்.ஏ. வழக்கறி ஞர் இன்பதுரை கலந்து கொண்டனர்.

    இதேபோல் காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் பங்கேற்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டனர்.

    மேலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மாநில செயலாளர் சண்முகம், ம.தி.மு.க. சார்பில் பொதுச் செய லாளர் வைகோ, துரை வைகோ எம்.பி., பா.ம.க. சார்பில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க. சார்பில் துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டம் தொடங்கியதும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இங்கு வந்திருக்கும் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தை நான் தெரி வித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    தமிழ்நாடு அரசின் சார்பில் உங்கள் எல்லோரையம் வருக... வருக... என்று நான் வரவேற்கிறேன்.

    தமிழ்நாடு மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதை உணர்த்துவதற்காகத் தான் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு என்னும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    இன்றைக்கு தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதை குறைக்கின்ற அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    ஒன்றிய அரசு 2026-ம் ஆண்டில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக் கையை மறுசீரமைப்பு செய்ய இருக்கிறது. பொதுவாக இதை மக்கள் தொகையை கணக்கிட்டுதான் செய்வார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு.

    அந்த இலக்கில் நமது தமிழ்நாடு வெற்றி பெற்று இருக்கிறது. பல பத்தாண்டு களாக வெற்றிகரமான குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன் முயற்சிகள் மூலமாக நாம் இதை சாதித்து இருக்கிறோம்.

    இப்போது இருக்கின்ற 543 பாராளுமன்ற தொகுதிகள் தொடர்ந்தால் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் நமது தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    தமிழ்நாடு மொத்தமாக 8 பாராளுமன்ற தொகுதிகளை இழக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது இனி 39 எம்.பி.க்கள் கிடைக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள்தான் இருப்பார்கள்.

    பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டு தற்போதைய விதிதாச்சாரத்தின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் நமக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும்.

    ஆனால் தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள் தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும்.

    இந்த 2 முறைகளிலுமே நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்.

    இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலை இல்லை. நமது தமிழ் நாட்டின் உரிமை சார்ந்த கவலை. தமிழ்நாட்டின் இந்த முக்கியமான பிரச்சினையில் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் எல்லோர் முன்பும் நான் வைக்கிறேன்.

    எல்லா கட்சிகளும் கட்சிகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் அது தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவத்தை, எண்ணிக்கையை குறைத்துவிடும். எனவே இந்த சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும்.

    மக்கள் தொகை அடிப்ப டையில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற பேரவையின் இடங்கள் குறையும் என்று சொல்வது மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் கொள்கையை முனைப்பாக செயல்படுத்தி நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென் மாநிலங்களுக்கு தரப்படுகிற தண்டனையாகத்தான் அமையும்.

    இதை முன்கூட்டியே உணர்ந்து தான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

    தமிழ்நாட்டின் உரிமை, கூட்டாட்சி கருத்தியலோடு கோட்பாடு, தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எதுவும் பாதிக் கப்படக்கூடாது என்பதை தீர்க்கமாக, திடமாக அப்போதே நாம் வலியுறுத்தி இருக்கிறோம்.

    இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தென்னிந்தியா வுக்கே அபாயகரமான செயல். இதில் நமக்குள் கருத்து மாறுபாடு நிச்சயமாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். இருக்கக்கூடாது என்று விரும்புகிறேன்.

    இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும், தென் மாநிலங்களின் அரசி யல் உரிமைக்கும் இது அச்சு றுத்தலை ஏற்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கின்ற அரசியல் பிரதிநிதித்துவ உரிமை மீதான நேரடி தாக்குதல்.

    இப்படி ஒரு சமநீதியற்ற அமைதியான தொகுதி மறுசீரமைப்பு செயல்படுத்தப்பட்டால் இந்திய அரசியலில் தமிழ் நாட்டின் குரல்வளை நெரிக்கப்படும்.

    தமிழ்நாட்டின் நலன் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலன் ஆகிய வற்றை பாதுகாப்பதில் நம் மாநிலத்துக்கு இறுக்கக்கூடிய பலம் குறைக்கப்படும.

    39 எம்.பி.க்கள் இருக்கும் போது நாம் எழுப்புகிற குரலையே ஒன்றிய அரசு மறுக்கின்ற நிலையில் இந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ, குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டுக்கு கிடைக் கப்பட்ட அழிக்க முடியாத அநீதியாக மாறும் என்பதை எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

    எனவே நமது நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக ஒரே சிந்தனையோடு எடுத்தாக வேண்டும்.

    எதிர்காலத்தில் நடைபெற இருக்கிற மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் தொகுதி மறுசீரமைப்பை நாம் கடுமையாக ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.

    எனவே உறுதியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி நான் அந்த தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

    இந்தியநாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீர மைப்பை இந்த அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக கடுமையாக எதிர்க்கிறது.

    நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாக செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதி நிதித்துவம் குறைக்கப்படு வது முற்றிலும் நியாயமற்றது.

    எந்த வகையில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்கு விக்கும் வகையில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறு தற்போதும் இந்த வரையறை 2026-ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் படும் என்று பிரதமர், நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

    மேலும் நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அப்படையில் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.

    தொகுதி மறு சீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதே சமயம் கடந்த 50 ஆண்டுகளாக சமூக பொருளாதார நலத்திட்டங்களை சிறப்புற செயல்படுத்தியதற்கு தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக்கூடாது எனவும், அனைத்துக்கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.

    இக்கோரிக்கைகளை தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கையாக அனைத்து கட்சி கூட்டம் முன்வைக்கிறது. இக்கோரிக்கைகளையும் அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்லவும் மக்கள் மத்தியில் இப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

    இந்த தீர்மானத்தின் மீதான உங்களின் கருத்தை அனைத்து கட்சி தலைவர்களும் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் உங்கள் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிைய தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சி சார்பிலும் வந்திருந்த பிரதிநிதிகள் இதில் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த கருத்துக்களின் அடிப்படையில் அரசின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    அதன் பிறகு அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் சார்பில் டெல்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு கொடுக்கிறார்கள்.

    தொகுதி மறுசீரமைப்பால் தமிழ கத்துக்கு ஏற்படும் பாதிப்பு களை விளக்கவும், அரசின் சார்பில் திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    • தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
    • மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங் களவை உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் இன்பதுரை கலந்து கொண்டனர்.

    இதேபோல் காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் பங்கேற்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டனர்.

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

    இதைதொடர்ந்து, முதலமைச்சரின் தீர்மானத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிற கட்சிகள் கூட்டுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்தன.

    இந்நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

    தொகுதி மறுவரையறை செய்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சமவாய்ப்பு தரப்பட வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் அல்லாமல் வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யலாம்.

    மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும்.

    பட்டியலின மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் தொகுதிகளில் எல்லை வரையறை செய்யப்படுகிறது.

    வரும் காலங்களில் முறையாக தொகுதிகளின் எல்லை வரையறை செய்யப்பட வேண்டும்.

    ஆதாயம் கருதி அரசியல் செய்வதால் தான் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது.
    • முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

    இதைதொடர்ந்து, முதலமைச்சரின் தீர்மானத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிற கட்சிகள் கூட்டுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்தன.

    இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய தலைவர்களின் முக்கிய கருத்துக்கள் வருமாறு:-

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்: நாடாளுமன்றத்தில் தமிழ் நாட்டின் 7.2 என்ற தற் போதைய பிரதிநிதித்துவம் குறைக்கப்படக்கூடாது என்று தீர்மானத்தில் சேர்க்க வேண்டும். தீர்மானத்துக்கு அ.தி.மு.க. முழு ஆதரவு அளிக்கிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி: முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திரு மாவளவன்: தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய "கூட்டு நட வடிக்கை குழு"வை விசிக வரவேற்கிறது. தொகுதி மறுவரையறையில் தலித், சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கை இருக்கக் கூடாது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன்: ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: விகிதம் என்ற வரையறையில் குழப்பம் இருக்கிறது. நம் மாநில எம்.பி எண்ணிக்கை குறையவில்லை என்பது பிரச்சினையில்லை. வட மாநிலங்களில் அதிகரிக்கப்பட்டால் அது பிரச்சினை.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்: தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7.2 சதவீதம் என்ற எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது.

    தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ: அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள சரியான முடிவு ஆகும். தமிழகத்தின் உரிமையை எந்த கால கட்டத்திலும் யாராலும் விட்டுக் கொடுக்க முடியாது.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு கட்சியின் பிரச்சினை இல்லை. நம் மாநிலத்தின் பிரச்சினை ஆகும். இதை அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ள 5 கட்சிகளும் உணர வேண்டும்.

    தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை, கருணாஸ்: மக்களின் உரிமைகளை பறிப்பதற்கான முயற்சியாகத்தான் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை பார்க்கிறோம்.

    தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தனியரசு: தொகுதி மறுசீரமைப்பின் பிரச்சனையை உணர்ந்து முதல் முதலாக குரல் கொடுத்தது முதலமைச்சர் ஸ்டாலின்தான்.

    மனிதநேய ஜனநாயக கட்சி, தமிமுன் அன்சாரி: தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் உச்சி மாநாட்டை முதலமைச்சர் கூட்ட வேண்டும்.

    உலகத் தமிழர் பேரமைப்பு, பழ நெடுமாறன்: எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநில முதலமைச்சர்களிடம் பேசி இந்த சதித் திட்டத்தை முறியடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும்.

    புரட்சி பாரதம், ஜெகன் மூர்த்தி: தமிழ்நாட்டில் தொகுதிகளில் எண்ணிக்கை குறைந்தால் பட்டியல் சமூக மக்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையும். இதனை கடுமையாக எதிர்க்கிறோம்.

    தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கலாம் என்று தெரிகிறது. #LSPolls #DMK #MKStalin #congress
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்-10, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-2, இந்திய கம்யூனிஸ்டு-2, விடுதலை சிறுத்தைகள்-2, ம.தி.மு.க.-1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி-1, இந்திய ஜனநாயக கட்சி-1 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சி தலைவர்களை வரவழைத்து பேசிய பிறகு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவாகவில்லை.

    இது தொடர்பாக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான குழு நேற்று முன்தினம் முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அன்று காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான மூவர் குழுவினர் பேச்சு நடத்தினர். அப்போது காங்கிரஸ் போட்டியிட விரும்பும் சுமார் 15 தொகுதிகளின் பட்டியலை அளித்தனர்.

    பின்னர் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தலைமையிலான குழுவினர் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. அதன் பிறகு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க. போட்டியிடும் இடங்கள் முடிவானது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு மதுரை, கோவை, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு நாகை, தென்காசி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம், ம.தி.மு.க.வுக்கு ஈரோடு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல், இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, திருப்பூர், ஆரணி, திருச்சி, திருவள்ளூர் அல்லது காஞ்சிபுரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.



    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது. ஆலோசனை கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் எப்படி தேர்தல் பணியாற்றுவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    ஆலோசனை கூட்டம் முடிந்ததும் இன்று மாலை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கலாம் என்று தெரிகிறது. #LSPolls #DMK #MKStalin #congress
    ×