என் மலர்
நீங்கள் தேடியது "Cooperatives"
- இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.
- ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவற்றுக்கு போட்டியாக பைக், கார் மற்றும் ஆட்டோ சேவைகளை வழங்கும் "சஹ்கார் டாக்ஸி" (Sahkar Taxi) என்ற புதிய கூட்டுறவு அடிப்படையிலான டாக்சி சேவையை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்களைப் போலல்லாமல், இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.
பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, "சஹ்கார் டாக்சி சேவை வரும் மாதங்களில் தொடங்கப்படும்.
சஹ்கார் டாக்சியின்கீழ் நாடு முழுவதும் பைக் டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் கார் டாக்சிகளைப் பதிவு செய்யப்படும். இந்த சேவையின் லாபம் எந்த பெரிய தொழிலதிபருக்கும் செல்லாது. மாறாக வாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமே செல்லும் என்று தெரிவித்தார்.
- திருப்புவனம் கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்காத உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்.
- கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
மானாமதுரை
திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவரும் திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனியம்மாள், சரக முதுநிலை ஆய்வாளர் (பால்வளம்) ராமச்சந்திரன், விரிவாக்க அலுவலர் அமுதா மற்றும் சங்கத்தின் இயக்குநர்கள், உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சங்க மேலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. திருப்புவனம் ஒன்றியம் கீழராங்கியத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும், சங்கத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வந்த உறுப்பினர்கள் மற்றும் சங்கத்துக்கு நீண்டகாலமாக பால் வழங்காத உறுப்பினர்களை சங்கத்திலிருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டது. முடிவில் இயக்குநர் முருகேசன் நன்றி கூறினார்.
- சிறந்த கூட்டுறவுத்துறை கட்டமைப்பை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
- மத்திய கூட்டுறவு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு இணையாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
விருதுநகர்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விருதுநகரில் கூட்டுறவுத்துறை மூலம் கடன் மேளா நிகழ்ச்சி நடந்தது. சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 1612 பயனாளிகளுக்கு ரூ.10.17 கோடி மதிப்பிலான கடன் அனுமதி ஆணைகளை வழங்கினார்.
இதில் அமைச்சர் பேசிய தாவது:-
கூட்டுறவுத்துறை என்பது துறையாக மட்டுமல்லாமல், இது ஒரு இயக்கமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவினுடைய வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது கூட்டுறவு இயக்கம் ஆகும். கூட்டுறவு துறையினுடைய வெற்றிக்கு பின்னால் அரசின் பங்க ளிப்பு மட்டுமல்ல பொது மக்களுடைய பங்களிப்பும் இருந்து வருகிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கக்கூடியவர்கள் அந்த கிராமத்தை வேளாண்மை மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்றால் கூட்டுறவு அமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் மிகச்சிறந்த ஒரு கூட்டுறவு துறை கட்டமைப்பை உருவாக்கிய ஒரு சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்றால் அது மிகையாகாது.
இந்தியாவிலேயே கூட்டுறவுத்துறையில் மிகச் சிறந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மத்திய கூட்டுறவு வங்கி ஒரு லாபம் ஈட்டக்கூடிய வங்கியாக இருந்து வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக யார்யாரெல்லாம் பயன் பெறுகிறார்கள் என்றால், மகளிர்சுய உதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு வணிகர்கள், மகளிர் தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர், மத்திய கால கடன், முத்ரா கடன், பண்ணை சாரா கடன், சம்பள கடன், வீட்டு வசதி கடன், முதலீட்டுக் கடன், குறு சிறு நடுத்தர தொழில் கடன் என சமுதாயத்தில் அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில் இந்த கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த மத்திய கூட்டுறவு வங்கிகள் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளில் வழங்கப் படும் சேவைகளுக்கு இணையாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் இணைப் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் ராஜலெட்சுமி, மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், பொது மேலாளர் சங்கர நாராயணன் உள்பட அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.