என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Copa America 2024"
- அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
- கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.
அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன்மூலம் கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.
நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சிகாகோ பயர் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இன்டர் மியாமி க்ளப் வெற்றி பெற்றது.
இப்போட்டி நடைபெறுவதற்கு முன்பு கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற ஜாம்பவான் மெஸ்ஸியை இன்டர் மியாமி க்ளப் கௌரவித்தது.
ஆண்டு வாரியாக வென்ற 45 கோப்பைகளின் படங்களை கைகளில் ஏந்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
- போட்டியின் 112-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லோ செல்சோ அசிஸ்ட் கோல் அடித்தார்.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. தொடர்ந்து விளையாடிய இரு அணிகளும் இரண்டாவது பாதியிலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
போட்டியின் 112-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லோ செல்சோ அசிஸ்ட் செய்ய லௌடரோ மார்டின்ஸ் இறுதிப் போட்டியின் முதலாவது கோலை அடித்து வெற்றி காரணமாக திகழ்ந்தர். முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
முன்னதாக இந்த போட்டியின் 2-வது பாதியில் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மைதானத்திலேயே அழுதார். பின்னர் வெளியேறியும் அவரது அழுகையை நிறுத்த முடியாமல் கண்ணீர் விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து பரபரப்பான இறுதி நிமிடங்களை வெளியில் இருந்து பதட்டத்துடன் மெஸ்ஸி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அர்ஜெண்டினா அணி கோல் கம்பத்தை நெருங்கியது. அதனை ஒற்றை காலில் பார்த்துக் கொண்டிருந்த மெஸ்ஸி, கோல் அடித்ததும் சந்தோஷத்தை கொண்டாடினார். நொண்டி கொண்டே சக வீரரை கட்டியணைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- யூரோ கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் ஆனது.
- கோபா அமெரிக்கா தொடரில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது.
உலகின் அதிக பிரபலமான கால்பந்து தொடர் யூரோ கோப்பை. 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்பெயின் அணி நான்காவது முறையாக யூரோ கோப்பையை வென்று சாதனை படைத்தது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை எந்த அணியும் நான்கு முறை கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெற்று முடிந்த யூரோ கோப்பை 2024 தொடர் ஸ்பெயின் அணியின் லமின் யமால் என்ற இளம் வீரருக்கு அற்புதமான நினைவுகளை பரிசாக கொடுத்துள்ளது. இந்த தொடரில் வைத்து தான் லமின் யமால் இளம் வயதில் கோல் அடித்த அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை யமால் முந்தினார்.
16 ஆண்டுகள் 362 ஆவது நாளில் ஸ்பெயின் வீரர் லமின் யமால் தனது அணிக்காக கோல் அடித்தார். இதன் மூலம் அவர் உலகின் பார்வையை தன்பக்கம் திருப்பினார். உலகிலேயே இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த லமின் யமால், இறுதிப் போட்டியில் தனது அணி கோல் அடிக்க அசிஸ்ட் செய்து அசத்தினார்.
ஜூலை 13 ஆம் தேதி 17 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய லமின் யமால் மறுநாளே தனது அணி நான்காவது முறை யூரோ கோப்பையை வெல்ல காரணமாக செயல்பட்டார். நேற்று நள்ளிரவு நடைபெற்ற யூரோ கோப்பை 2024 இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
தனது அணி கோப்பை வென்றது குறித்து பேசிய இளம் வீரர் லமின் யமால், "நான் இதைவிட சிறப்பான பிறந்தநாள் பரிசை எதிர்பார்க்க முடியாது. இது கனவு நனவான தருணம். அவர்கள் கோல் அடித்து போட்டி சமனில் இருந்த போது, கடினமாக இருந்தது. இந்த அணி எப்படி உருவாக்கப்பட்டது என்றே தெரியவில்லை, இது மீண்டும் மீண்டும் போராடும்," என்று தெரிவித்தார்.
போட்டிக்கு பிந்தைய கொண்டாட்டங்களைத் தொடர்ந்து லமின் யமால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "இன்று கால்பந்து வெற்றி பெற்றது" என தலைப்பிட்டு கூடவே "கோட்" எமோஜி மற்றும் யூரோ கோப்பையுன் இருக்கும் தனது புகைப்படம், கோபா அமெரிக்கா கோப்பையுடன் மெஸ்ஸி இருக்கும் புகைப்படத்தை இணைத்துள்ளார்.
ஓரே இரவில் யூரோ கோப்பை மற்றும் கோபா அமெரிக்கா தொடர்களின் இறுதிப் போட்டி நடைபெற்றது. முதலில் யூரோ கோப்பை போட்டி முடிந்த நிலையில், இரண்டாவதாக நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியனம் பட்டம் வென்றது.
- இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர்.
- போட்டி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.
பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். எனினும், போட்டி முடியும் வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
இதனால் போட்டியில் முடிவு கிடைக்காத சூழல் நிலவியது. போட்டி சமனாவதை தவிர்க்கும் நோக்கில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் அவகாசத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிய இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின.
போட்டியின் 112 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லோ செல்சோ அசிஸ்ட் செய்ய லௌடரோ மார்டின்ஸ் இறுதிப் போட்டியின் முதலாவது கோலை அடித்தார். இது அர்ஜென்டினா கோப்பையை வெல்ல காரணமாக மாறியது. போட்டி நிறைவில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
- அர்ஜென்டினா, கொலம்பியா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
- முதல் பாதியில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் துவங்கி இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
இதனிடையே அரையிறுதியில் தோல்வியை தழுவிய கனடா மற்றும் உருகுவே அணிகள் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் 8-வது நிமிடத்தில் உருகுவே தனது முதல் கோலை அடித்தது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
மறுபுறம் கனடா அணி போட்டியின் 22-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தது. இதன் காரணமாக இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் அடுத்த கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டினர். எனினும், முதல் பாதியில் கனடா 1-1 உருகுவே அணிகள் சமநிலையில் இருந்தன.
இதைத் தொடர்ந்து 2-வது பாதியில் வெகு நேரம் ஆகியும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க முடியாத அளவுக்கு போட்டி நெறுக்கமாக இருந்தது. போட்டியின் 80-வது நிமிடத்தில் கனடா அணி தனது 2-வது கோலை அடித்து முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து 90-வது நிமிடத்தில் உருகுவே அணியும் தனது 2-வது கோலை அடித்ததால் போட்டி மீண்டும் சமனுக்கு வந்தது. இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் இரு அணி வீரர்களால் வெற்றிக்கான கோல் அடிக்க முடியாமல் போனது.
இதன் காரணமாக பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது. இதில் 3-4 என்ற கணக்கில் உருகுவே வெற்றி பெற்றது அசத்தியது. இதன் காரணமாக நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே மூன்றாவது இடம்பிடித்தது.
- அர்ஜென்டினா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது.
- முதல் பாதியில் கொலம்பியா அணி முன்னணி வகித்தது.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் துவங்கி இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அர்ஜென்டினா, கனடா, உருகுவே மற்றும் கொலம்பியா என நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கனடா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது. இதனிடையே கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் உருகுவே மற்றும் கொலம்பியா அணிகள் களம்கண்டன.
இந்த போட்டி துவங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். போட்டியின் 39-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் லெர்மா தனது அணிக்கு முதல் கோல் அடித்தார். இதன் மூலம் போட்டியின் முதல் பாதியில் கொலம்பியா அணி முன்னணி வகித்தது.
முதல் பாதி வரை இதே நிலை நீடித்தது. 0-1 என்ற கணக்கில் முன்னிலையுடன் இரண்டாம் பாதியில் விளையாடியது கொலம்பியா. மறுப்பக்கம் உருகுவே அணி பதில் கோல் அடிக்கும் முயற்ச்சிகளை தீவிரப்படுத்தியது. எனினும், அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
இதன் காரணமாக போட்டி முடிவில் 0-1 என்ற கணக்கில் கொலம்பியா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோத உள்ளன.
கோப்பா அமெரிக்கா 2024 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோதுகின்றன. முன்னதாக ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் கனடா மற்றும் உருகுவே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மூன்றாவது இடம் பிடிக்கும்.
- கனடா அணி பதில் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டியது.
- கோபா அமெரிக்கா 2024 தொடரில் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்தார்.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் துவங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அர்ஜென்டினா, கனடா, உருகுவே மற்றும் கொலம்பியா என நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இதனிடையே கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கனடா அணிகள் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா தனது முதல் கோலை அடித்தது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
மறுபுறம் கனடா அணி பதில் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டியது. எனினும், முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியில் மற்றொரு கோல் அடிக்கும் முயறச்சியில் அர்ஜென்டினா அணியும், பதில் கோல் அடிக்க கனடா அணி வீரர்களும் முயற்சித்தனர்.
அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி போட்டியின் 51-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 2-0 என்று முன்னிலை பெற்றது. கோபா அமெரிக்கா 2024 தொடரில் மெஸ்ஸி அடித்த முதல் கோல் அந்த அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியது.
போட்டி முடிவில் கனடா வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
முதல் அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவிய கனடா அணி இந்த தொடரில் தனது கடைசி போட்டியை ஜூலை 14 ஆம் தேதி விளையாடுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோபா அமெரிக்கா 2024 கால்பந்து தொடரில் மூன்றாவது இடத்தை பிடிக்க முடியும்.
நாளை நடைபெற இருக்கும் 2-வது அரையிறுதி போட்டியில் உருகுவே மற்றும் கொலம்பியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். தோல்வியை தழுவும் அணி ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் கனடா அணியை எதிர்கொள்ளும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்