search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "copper wire"

    • தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே தெற்கு சிலுக்கன்பட்டி பகுதி தனியார் நிறுவனத்தில் உள்ள ஜெனரேட்டரில் இருந்து காப்பர் வயரை 3 பேர் திருடி சென்றுள்ளனர்.
    • இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளரான மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த ஆத்தி முத்துவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே தெற்கு சிலுக்கன்பட்டி பகுதி தனியார் நிறுவனத்தில் உள்ள ஜெனரேட்டரில் இருந்து காப்பர் வயரை 3 பேர் திருடி சென்றுள்ளனர். இதனை அங்கு வேலை செய்யும் இரவு காவலாளிகள் அரிபுத்திரன், சூசைமரியான் ஆகியோர் கண்டு அவர்களை துரத்தி பிடிக்க முயன்றனர். இதில் இதில் கீழத்தட்ட பாறை தெற்கு தெருவை சேர்ந்த வேல்முருகன் (வயது 30) என்பவர் பிடிபட்டார். அவரது கூட்டாளிகள் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாள ரான மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த ஆத்தி முத்துவுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர் புது க்கோட்டை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெ க்டர் ஞானராஜ் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தார். தொடர்ந்து அவரி டம் இருந்த காப்பர் வயரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • சின்னராசு ,சக்கரவர்த்தி ஆகியோர் விக்ரம் என்பவர் நிலத்தில் காப்பர் வயரை திருடினர்.
    • மோட்டார் சைக்கிள் மற்றும் 5 கிலோ காப்பர் கம்பி ஆகியவற்றையும் போலீசார் பறி முதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள ஆவிகொளப்பாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னராசு (வயது 29). அதே ஊரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தியும் அதே ஊரில் உள்ள பெருமாள் நாயக்கர் வீதி யைச் சேர்ந்த விக்ரம் (30) என்பவர் நிலத்தில் காப்பர் வயரை திருடினர். அப்போது கையும் களவுமாக சின்னரா சாவை பிடித்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 5 கிலோ காப்பர் கம்பி ஆகியவற்றையும் போலீசார் பறி முதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருக்கோவிலூர் போலீசார் சின்னராசுவை கைது செய்தனர். தப்பிவிட்ட சக்கரவர்த்தியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • காற்றாலை மற்றும் சோலார் பேனல் அமைக்க பயன்படும் உபகரணங்களை தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் வைத்துள்ளது.
    • திருட்டுக்கு பயன்படுத்திய வேனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குதிரை குளத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் இடத்தில் காற்றாலை மற்றும் சோலார் பேனல் அமைக்க பயன்படும் உபகரணங்களை தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் வைத்துள்ளது.

    அங்கு குதிரைக்குளத்தை சேர்ந்த மதியழகன் (வயது 45) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனியார் நிறுவனத்தின் சார்பில் அங்கு வைக்கப்படும் காப்பர் வயர்கள் அடிக்கடி திருட்டு போய் உள்ளது. இது குறித்து நிறுவனத்தின் மேலாளர் அருண்குமார் ஆய்வு நடத்திய போது அங்கிருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் கடந்த 14-ந் தேதி பசுவந்தனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் காவலாளி மதியழகன், கோவில்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் ஆகியோருக்கு இந்த திருட்டில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்திய வேனையும் அவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த திருட்டில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேத்தனூரில் இரண்டு காற்றாலைகளில் காப்பர் கம்பி மற்றும் உப பொருட்கள் திருடு போனது.
    • 10 கிலோ காப்பர் கம்பிகள், 50 கிலோ கோர் பிளேட், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரொக்கம் ரூ. 45 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கேத்தனூரில் தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் உள்ளது. இங்கு உள்ள இரண்டு காற்றாலைகளில் காப்பர் கம்பி மற்றும் உப பொருட்கள் திருடு போனது. இதுகுறித்து காற்றாலையின் மேலாளர்கள் ரமேஷ் கண்ணன், கார்த்திக் பிரபு ஆகியோர் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர்.

    புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்துக்கு இடமான நிலையில் 4 பேர் சுற்றித் திரிந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கேத்தனூரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரது மகன் கவியரசு (வயது 25), தங்கராஜ் மகன் தீபக்( 25), காசிராஜா மகன் தனபால் (25), ராஜாமணி மகன் சதீஷ் (25) என்பதும் காப்பர் கம்பிகளை திருடியதும் தெரிய வந்தது.அவர்களிடமிருந்து 10 கிலோ காப்பர் கம்பிகள், 50 கிலோ கோர் பிளேட், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரொக்கம் ரூ. 45 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    என்எல்சி சுரங்கத்தில் காப்பர் வயர் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி.நிறுவனம் 2-வது சுரங்கபகுதியில் நேற்று மாலை 2 பேர் சாக்குமூட்டையுடன் சுற்றித் திரிந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்புபடை வீரர் அழகர்சாமி அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தார். அவர்கள் வைத்திருந்த சாக்குபையை பிரித்து பார்த்தபோது காப்பர் வயர் திருடி வைத்து இருந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் மந்தாரக்குப்பம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர்கள் வடலூர் பார்வதிபுரததை சேர்ந்த அந்தோணிராஜ் (வயது 51), சஞ்சை (28) ஆகியோர் என்று தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    ×