என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Coronavaccine"
- உலக நாடுகளில் தற்போது பல நாடுகள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி உள்ளது.
- தடுப்பூசி காரணமாக வயது முதிர்ந்தவர்களும் நோய் பரவலில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
புதுடெல்லி:
உலகின் சில நாடுகளில் மீண்டும் உருமாறிய கொரோனா பரவல் தொடங்கி உள்ளது.
இதையடுத்து இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதன் ஒருபகுதியாக பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதுபோல இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கார்பெவாக்ஸ், கோவாக்ஸ் மற்றும் கோவாக்சின் என 3 வகை தடுப்பூசிகளை குழந்தைகளுக்கும் போடலாம் எனக்கூறப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா பரவ தொடங்கியிருப்பதை கட்டுப்படுத்த இந்த தடுப்பூசிகளை குழந்தைகளுக்கும் போட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ பணிக்குழுவின் உறுப்பினர் டாக்டர் பிரமோத் ஜோக் கூறும்போது, இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவாமல் இருக்க இம்முறை குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது விவேகமான செயலாக இருக்கும்.
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் பக்க நோய்களான நீரிழிவு, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்கள் பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதன்மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
உலக நாடுகளில் தற்போது பல நாடுகள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி உள்ளது. மேலும் தடுப்பூசி காரணமாக வயது முதிர்ந்தவர்களும் நோய் பரவலில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
மேலும் பல நாடுகளில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும்.
- முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
வெள்ளகோவில் :
தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வு மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கொரோனா வைரஸ் பரவுதல் தடுக்கும் பொருட்டு 34-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதன்படி முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முத்தூர் அரசு மருத்துவமனை வளாகம், மேட்டாங்காட்டுவலசு, மேட்டுப்பாளையம், ஊடையம், வீரசோழபுரம் ஆகிய துணை சுகாதார நிலையங்கள், முத்தூர் கடைவீதி, வரட்டுக்கரை ஆகிய அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது.
இம்முகாமில் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், பணியாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் கலந்து கொண்டு அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 12 வயதுக்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசியை இலவசமாக போடுகின்றனர்.
- கொரோனா பரவல் அதிகரிப்பதால் பள்ளிகளில் தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- பெற்றோர்கள் பிள்ளைகள் தயக்கமும் இன்றி தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும்
திருப்பூர் :
கொரோனா நோயின் தாக்கத்தில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து, 12 முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கும் 'கோர்பேவாக்ஸ்' தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
ஆனால் ஆண்டு பொதுத்தேர்வு காரணமாக, இதற்கான பணி தடைபட்டது. தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பதால் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி அளவில் தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மாவட்டத்தில் 6 முதல் 8-ம்வகுப்பு வரை பயிலும், 95 ஆயிரம் மாணவர்கள் இதுவரை தடுப்பூசி போட்டுள்ளனர். பொதுத்தேர்வுக்கு முன்னர் 15 முதல் 18 வயது வரை பெரும்பாலான மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.அதேசமயம் 12 முதல் 14 வயது வரையுள்ள மாணவர்களில் பலர் தடுப்பூசி செலுத்தவில்லை. மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெற்றோர், தங்கள் பிள்ளைகள் தயக்கமும் இன்றி தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும். இவ்வாறுஅவர்கள் கூறினர்.
- 12 வயதை கடந்த சிறுவர், சிறுமியருக்கு மீண்டும் ‘கோர்பாவேக்ஸ்’ தடுப்பூசி பள்ளிகளில் செலுத்தப்பட உள்ளது.
- பள்ளி விடுமுறை விடப்பட்டதால், பள்ளி அளவில் நடத்தப்பட்ட முகாம் நிறுத்தப்பட்டது.
திருப்பூர்,
கோடை விடுமுறைக்கு பின் வருகிற 13-ந் தேதி 1 முதல் 10-ம் வகுப்பு வரையும், பிளஸ் 2 மாணவருக்கு, 20-ந் தேதியும், பிளஸ் 1 மாணவருக்கு 27-ந்தேதியும் பள்ளி திறக்கப்படுகிறது.
12 வயதை கடந்த சிறுவர், சிறுமியருக்கு மீண்டும் 'கோர்பாவேக்ஸ்' தடுப்பூசி பள்ளிகளில் செலுத்தப்பட உள்ளது. அந்தந்த மாவட்ட அளவில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் - சுகாதாரத்துறையினர் ஆலோசித்து, மேல்நிலை, உயர்நிலை பள்ளி அளவில் தடுப்பூசி முகாம் நடத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 85 சதவீத மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
ஒரு சில மாவட்டங்களில் 65 சதவீதம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.இந்த வயது பிரிவில் புதிதாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக முன்கூட்டியே முகாம் அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 முதல் 14 வயதுக்குரிய தடுப்பூசியை 24.45 லட்சம் பேரும், 15 முதல் 17 வயதுக்குரிய தடுப்பூசியை, 43.48 லட்சம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளி மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்துவது வழக்கமானது தான். பள்ளி விடுமுறை விடப்பட்டதால், பள்ளி அளவில் நடத்தப்பட்ட முகாம் நிறுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதால், முகாம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
நாட்டில் புதிதாக 10,302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் 5,745 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 44 லட்சத்து 99 ஆயிரத்து 925 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 204 பேர் உள்பட நாடு முழுவதும் 267 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,65,349 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 11,787 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 9 ஆயிரத்து 708 ஆக உயர்ந்தது.
நாடு முழுவதும் நேற்று 51,59,931 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 115 கோடியே 79 லட்சத்தை கடந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்