என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cosmetology training"
- வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச முழு நேர அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.
- பயிற்சி முடித்த அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
திருப்பூர்:
கனரா வங்கியின் சாா்பில் நடத்தப்படும் இலவச அழகு கலைப் பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூா் மாவட்டத்தில் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச முழு நேர அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு எழுதப் படிக்கத் தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின்போது காலை, மாலை வேளைகளில் தேநீா், மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி முடித்த அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், போக்குவரத்து சிக்னல் அருகில், அவிநாசி சாலை, அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா்-641652 என்ற முகவரிக்கு நேரில் வரவும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- களக்காட்டில் புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பெண்களுக்கும், 2-ம் கட்டமாக 24 பெண்களுக்கும் தையல், அழகு கலை பயிற்சி வழங்கப்பட்டது.
- பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா களக்காடு சூழல் திட்ட அலுவலகத்தில் நடந்தது.
களக்காடு:
களக்காட்டில் புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பெண்களுக்கும், 2-ம் கட்டமாக 24 பெண்களுக்கும் தையல், அழகு கலை பயிற்சியும், 14 பெண்களுக்கு அழகு கலை நிபுணர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா களக்காடு சூழல் திட்ட அலுவலகத்தில் நடந்தது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமை தாங்கினார். களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரி அன்பு சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், களக்காடு புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு சூழல்மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பட தையல் ,அழகு கலை பயிற்சியும், அழகு கலை நிபுணர் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. வனத்தையும், வன விலங்கு களையும் பாதுகாப்பதில் பொதுமக்கள் பங்களிப்பு அவசியமாகும். தேசிய புலிகள் ஆணையமும், வன வளத்தை பாதுகாக்க என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது. காடுகளை வனத்துறை அதிகாரியால் மட்டும் பாதுகாக்க முடியாது. பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
விழாவில் களக்காடு சூழல் திட்ட வன சரகர் முகுந்தன், வனவர் சிவக்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், சூழல் மேம்பாட்டு திட்ட பணியாளர்கள், கிராம வனக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சுய தொழில் துவங்குவது, சிகை அலங்கார பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- தாட்கோ மூலம், 2.25 லட்சம் ரூபாய் மானியத்துடன் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
திருப்பூர் :
சென்னையில் உள்ள ஒரு அழகுக்கலை பயிற்சி மையம் மூலம், அழகு நிலையங்களில் பணிபுரிதல் மற்றும் சுய தொழில் துவங்குவது, சிகை அலங்கார பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பத்தாம் வகுப்பு படித்த, 18 முதல் 30 வயது வரையுள்ள மாணவ, மாணவிகள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். சென்னையில் பயிற்சி அளிக்கும் அழகுக் கலை மையத்தில் தங்கி படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு, இந்திய தேசிய திறன் மேம்பாட்டு துறையால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். தனியார் அழகு கலை நிலையங்களில் வேலை வாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது.சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்வதற்கு, தாட்கோ மூலம், 2.25 லட்சம் ரூபாய் மானியத்துடன் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
விருப்பமுள்ளோர், www/tahdco.com என்கிற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- சிவகங்கை மாவட்டத்தில் அழகு கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
- பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோவே வழங்கும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலம் புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும், சுயதொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology & hair Dressing) பயிற்சி தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.
இதில் ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிப் படிக்கும் வசதியும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு NSDI (National Skill Development of India) யால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியை முடிக்கும் மாணவர்கள் ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம்.சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலம் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும். இந்த பயிற்சியை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோவே வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- “யானைகள் தன் பலமே தெரியாமல் சுற்றுவது போல, பெண்கள் தங்கள் பலத்தை அறியாமல் உள்ளனர்.
- பெண்களை மதிப்புமிக்கவர்களாக, மரியாதைக்குரியவர்களாக மாற்ற வேண்டும், அவர்கள் திறமையை வெளி கொண்டு வர வேண்டும்.
களக்காடு:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம், களக்காடு சூழல் சரகத்தின் சார்பில், களக்காட்டில் முதல் கட்டமாக 15 பெண்களுக்கு தையல், அழகு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா நடந்தது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரியும், துணை வனபாதுகாவலருமான அன்பு தலைமை தாங்கி பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "யானைகள் தன் பலமே தெரியாமல் சுற்றுவது போல, பெண்கள் தங்கள் பலத்தை அறியாமல் உள்ளனர்.
பெண்களை மதிப்புமிக்கவர்களாக, மரியாதைக்குரியவர்களாக மாற்ற வேண்டும், அவர்கள் திறமையை வெளி கொண்டு வர வேண்டும், பெண்களுக்கு தன்நம்பிக்கையை கொடுக்க வேண்டும், அவர்கள் தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதே வனத்துறையின் நோக்கமாகும், இதற்காகத்தான் இந்த தையல் அழகு கலை பயிற்சியை அளித்து வருகிறோம்.
கிராமங்களில் பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த தொழிலுக்கு மாற்றாக தையல் அழகு கலை பயிற்சியை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் பெண்களின் பொருளாதார நிலை மேம்படும். பயிற்சி பெற்ற பெண்களுக்கு சூழல் மேம்பாட்டு திட்ட அலுவலகங்கள் மூலம் ஆர்டர் எடுத்து கொடுக்கப்படும்.
இந்த தொழில் மேன்மையடைந்தால் வருங்காலத்தில் களக்காடு தையல், அழகு கலையின் மையமாக மாறும். பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் இங்கு தையல் ஆர்டர்கள் குவியும். இதனை கிராம தொழிலாக மாற்றுவதே வனத்துறையின் லட்சியமாகும்" என்றார்.
விழாவில் களக்காடு வனத்துறை துணை இயக்குனர் ரமேஷ்வரன், வனசரகர் பிரபாகரன், வனவர்கள் களக்காடு சிவக்குமார், திருக்குறுங்குடி அப்துல்ரஹ்மான், கிராம வனக்குழு தலைவர்கள் வடகரை பாலன், கலுங்கடி ஆனந்தராஜ், ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பயிற்சியில் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம்.
- 1500 காலி பணி இடங்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளது.
அவினாசி :
அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை (சனிக்கிழமை)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தையல்,அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகு கலை, ஓட்டுநர், உதவி செவிலியர், நான்கு சக்கர வாகனம் பழுதுநீக்குதல், கணினி, சில்லறை விற்பனை வணிகம், துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்கல் போன்ற இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தால் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். இந்த பயிற்சியில் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம்.
பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மூலம் 1500 காலி பணி இடங்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளது. 18 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும் திறன் பயிற்சித் திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மட்டும் முகாமிற்கு வரும்பொழுது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3 ஆகியவை எடுத்து வர வேண்டும். இந்த தகவலை தமிழ் நாடு ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாட்டை பல்வேறு அரசு தொழில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பிரதம மந்திரி கவுசல்விகாஸ் யோஜனா, மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் செய்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்