search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அழகு கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
    X

    அழகு கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

    • சிவகங்கை மாவட்டத்தில் அழகு கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
    • பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோவே வழங்கும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலம் புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும், சுயதொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology & hair Dressing) பயிற்சி தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.

    இதில் ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிப் படிக்கும் வசதியும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு NSDI (National Skill Development of India) யால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியை முடிக்கும் மாணவர்கள் ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம்.சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலம் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும். இந்த பயிற்சியை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோவே வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×