என் மலர்
நீங்கள் தேடியது "covai"
- 30-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைப்பெறுகிறது
- 16 வகை திரவியங்களான அபிஷேகம் செய்து தீபாராதனை நடைப்பெற்றது.
வடவள்ளி,
கோவையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது உண்டு.
இந்த நிலையில் கோவிலில் கந்த சஷ்டி விழா முன்னிட்டு பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. முன்னதாக விழா நாளான இன்று காலை 5. 30 மணிக்கு கோ பூஜை செய்து நடை திறக்கப்பட்டு உற்சவருக்கு 16 வகை திரவியங்களான பால், நெய், மஞ்சள், உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைப்பெற்றது.
பச்சை பட்டு உடுத்தி ராஜா அலங்காரத்தில் உச்சவர் காட்சியாளித்தார். மேலும் விழா நிகழ்வாக 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. 8.30 மணிக்கு புனித மண் எடுத்தல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து சுவாமிக்கு காப்புகட்டும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
முன் மண்டபத்தில் மோசிக வாகனத்தில் விநாயகரும் , தங்கயானை வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமியும், வெள்ளை குதிரை வாகனத்தில் வீரபாகுவும், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
தொடர்ந்து 9 மணிக்கு விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று முதல காலை மாலை யாகம் வரும் 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைப்பெகிறது.
இதனை தொடர்ந்து வரும் 30-ந் தேதி மதியம் 3 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைப்பெறுகிறது. மறுநாள் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை திருக்கால்யாணம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
- ெரயில் மோதி இறந்து கிடந்த ஆண் யார்?
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை,
கோவை இருகூர்- பீளமேடு செங்களியப்பன் நகர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அவர் ரோஷ் நிற சட்டை வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். பின்னர் போலீசார் ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ெரயில் மோதி இறந்து கிடந்த ஆண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. அவர் ெரயில் தண்டவாளத்தை கடந்தபோது ெரயில் மோதி அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- இவற்றின் மதிப்பு ரூ.750 கோடி ஆகும்.
- தீபாவளி பண்டிகைக்கு சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
கோவை,
தொழில் நகரமான கோவை தங்க நகை தயாரிப்பு தொழிலில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் சிறந்து விளங்குகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு தங்க நகைகள் விற்பனை மந்தமாக காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு விற்பனை சிறப்பாக இருந்ததாக தொழில்துறை யினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பா ளர்கள் கூறியதாவது:-
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும். ஆடைகள், இனிப்புவகை கள், பட்டாசு உள்ளிட்ட வற்றுக்காக செலவு செய்தாலும் மக்கள் பலர் தங்க நகைகள் வாங்குதற்கு என தனியாக சிறிது நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
ெகாரோனா நோய்தொற்று பரவல் ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 2 ஆண்டுகள் மிகவும் மந்தமாக காணப்பட்ட விற்பனை இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருந்தது.அக்டோபர் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி அக்டோபர் 23-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) வரை 3 நாட்களில் மட்டும் தோராயமாக 1.5 டன் எடையிலான தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவற்றின் மதிப்பு ரூ.750 கோடி ஆகும். மொத்தம் விற்பனை செய்யப்பட்ட நகைகளில் மாப்பிள்ளை மோதிரம், பெண்களுக்கான மோதிரங்கள், தோடு உள்ளிட்ட சிறிய வகை தங்க நகைகள் தான் அதிகம். இருப்பினும் இத்தகைய நகைகளை அதிக மக்கள் வாங்கியதால் விற்பனை மிக சிறப்பாக இருந்தது.
தீபாவளி கொண்டா டப்பட்டதால் ஞாயிற்று கிழமை அனைத்து நகை கடைகளும் இரவு வரை தொடர்ந்து செயல்பட்டது. நகை விற்பனையை பொருத்தவரை தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும் 10 நாட்கள் வரை தொடர்ந்து வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
தற்போது மத்திய அரசு தங்கம் இறக்குமதிக்கு 15 சதவீதம் வரி விதித்துள்ளது. பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு 5 சதவீத வரியை குறைத்து 10 சதவீதமாக நடைமுறைபடுத்தினால் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த பயன் தரும். மகிழ்ச்சி அடைவார்கள்
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கணவன்- மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சென்னியூரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரும் 30 வயது வாலிபரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வெளியே செல்லும் நேரத்தில் இளம்பெண் வாலிபரை வீட்டுக்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
இந்த கள்ளக்காதல் விவ காரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவிைய கண்டித்தார். மேலும் வாலிபருடனான கள்ளக்காதலை கைவிடு மாறு கூறினார்.ஆனால் இளம்பெண் தனது கள்ளக்காதலை ெதாடர்ந்து வந்தார்.
சம்பவத்தன்று இது சம்பந்தமாக கணவன்- மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணவர் அங்கு இருந்த அரிவாளை எடுத்து இளம்பெண்ணின் நடு தலை மற்றும் கைகளில் வெட்டினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து வடக்கிப்பா ளையம் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கதவை திறக்க நேரம் ஆனதால் ஆத்திரம் அடைந்தார்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள செங்கப்ப வீதியை சேர்ந்தவர் விக்ரமன் (வயது 62). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுசிலா (வயது 58). விக்ரமன் தினசரி மது குடித்து விட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் குடி போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவு உள்பக்க மாக பூட்டி இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கதவை தட்டினார். யாரும் கதவை திறக்கவில்லை. அரை மணி நேரத்துக்கு பின்னர் சுசிலா கதவை திறந்தார்.
நீண்ட நேரத்துக்கு பின்னர் கதவை திறந்ததால் ஆத்திரம் அடைந்த விக்ரமன் தனது மனைவியை தகாத வார்த்தைகள் பேசி தாக்கினார்.
பின்னர் அங்கு இருந்த கத்தியை எடுத்து சுசிலாவின் வலது கையில் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்கு விக்ரமன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சுசிலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து போத்தனூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்திய விக்ரமனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- வாலிபர்கள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
- பெரியநாயக்கன்பாளையம் முழுவதும் தீவிர ரோந்து சென்றனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு அந்த பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுக நயினார், ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் வீரமணி, பாலசுப்பிரமணி, கோகுலகண்ணன், தனிபிரிவு போலீஸ் கங்காதரவிஜயகுமார் ஆகியோர் பெரிய நாயக்கன் பாளையம் முழுவதும் தீவிர ரோந்து சென்றனர்.
அப்போது குப்பிச்சிபாளையம் அருகே உள்ள வளம் மீட்பு பூங்கா குப்பை கிடங்கு அருகே ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 கார்கள் இருந்தது. இதனை பார்த்த போலீசார் அதன் அருகே சென்று அங்கிருந்த 3 வாலிபர்களிடம் விசாரித்தனர்.
அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கிருந்த காரை பரிசோதனை செய்தனர். அதில் காரில் மூட்டை மூட்டையாக ரூ. 5 லட்சம் மதிப்பிலான 544 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் பழைய சந்தை ரோட்டை சேர்ந்த முகமது யூசப் (வயது 31), தாசாம்பாளையம் பகுதியை சேர்ந்த தாஜிதின் (42), கருமமேடு தாமஸ் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதில் தாஜிதின் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 டன் குட்கா கடத்தி வந்த கும்பலில் இருந்து தப்பிய முக்கிய குற்றவாளி என்பதும், இவர்கள் குட்காவை வடநாட்டில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து மேட்டுப்பாளையம், காரமடை, பெரிய நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு கொடுத்து வந்ததும் தெரிவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
- 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கருவேப்பிலை வைத்து ஒரு மூட்டையில் லோடு ஏற்றி வந்தார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மலை அடிவார பகுதிகளில் சூதாட்டங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கணுவாய்பாளையம் தண்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 45) என்பவர் மோட்டார் சைக்கிளில் கருவேப்பிலை வைத்து ஒரு மூட்டையில் லோடு ஏற்றி வந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னாள் கணுவாய்ப்பாளையம் நேரு நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரும் அமர்ந்திருந்தார். அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் நடத்திய சோதனையில் கருவேப்பிலை மூட்டையில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற 132 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 132 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- 6 பேரை அழைத்து வந்து தாக்கினார்.
- வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் வேளாங்கண்ணி பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசம்பாளையம் வில்லீஸ்வரன் மலை பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 பேர் பெட்ரோல் போட வந்துள்ளனர். அதில் ஒருவர் அங்கு நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவரை வினோத்குமார் வெளியே சென்று செல்போனில் பேசும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் வினோத் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் மேலும் 6 பேரை அழைத்து வந்து வினோத்குமாரை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த வினோத்குமார் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரைத் தேடி வந்தனர். அதில் சின்னத் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
- 2 குட்டிகளுடன் 7 யானைகள் கூட்டம் வனப்பகுயில் இருந்து வெளியேறியது.
- செடிகளை சூறையாடியதை கண்டு கண்ணீர் விட்டு அழுதார்.
வடவள்ளி,
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் யானைக் கூட்டம் விளை நிலங்களில் புகுந்து பயிர்களையும் தென்னை மரங்களையும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக நேற்று மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், விவசாய சங்கத்தினர், ேநரில் ெசன்று பார்ைவயிட்டார்.
இன்ஜினியர் தோட்டம் பகுதியில் தண்ணீர் குடிக்க வரும் யானைகளை தடுக்க ஆதி நாராயணன் கோவில் அருகில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட உள்ளதாக நேற்று கூறினார். மேலும் யானையை விரட்ட சிறப்பு வனக்காவலர்களை இந்த பகுதியில் நியமிப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் 2 குட்டிகளுடன் 7 யானைகள் கூட்டம் வனப்பகுயில் இருந்து வெளியேறி குப்பேபாளையம் பகுதியில் உள்ள ராமாத்தாள் என்பவரது குத்தகை நிலத்தில் நுழைந்தது. அங்கு அவரை பயிர் காய்கறிகளை, இரவு முழுவதும் சூறையாடியது. பின்னர் அருகே இருந்த இன்ஜினியர் தோட்டத்தில் உள்ள குட்டையில் தண்ணீர் குடித்துவிட்டு யானைக்கூட்டங்கள் மடுவு வழியாக மருதமலை நோக்கி சென்றது. இன்று காலை வந்து தோட்டத்தை பார்த்த ராமாத்தாள் மற்றும் அவரது கணவர் சோலை யானைகள் புகுந்து அவரை செடிகளை சூறையாடியதை கண்டு கண்ணீர் விட்டு அழுதார். தகவல் அறிந்த பகுதி வார்டு கவுன்சிலர் மணிமேகலை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
மேலும் அதிகாரிகள் யானைகள் நிரந்தரமாக வரமால் இருக்க தண்ணீர் தொட்டி கட்டும் பனியை உடனடியாக தொடங்க வேண்டும். இரவு வனக் காவலர்களை அதிகப்படுத்த வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இளங்கோவன் சம்பவத்தன்று கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார்.
- காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 57). காவலாளி. சம்பவத்தன்று இவர் கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் இளங்கோவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இளங்கோவன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலுர் அருகே உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் தங்கவேலு (41). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் அவினாசி - கோவை ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ரங்கசாமி (36). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை -மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரங்கசாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- வாழ்க்கையில் விரக்தி அடைந்த கொடிகாத்த குமாரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,
கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள வீரபாண்டி இந்திரா நகரை சேர்ந்தவர் கொடிகாத்த குமரன் (வயது 32). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து கொடிகாத்த குமரனை அவரது மனைவி ரிந்து சென்றார். பின்னர் தனது கணவருக்கு அவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கொடிகாத்த குமாரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பெரிய நாயன்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வால்பாறையை சேர்ந்தவர் நிசாந் பிரதீப்குமார் (30). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் நிசாந் பிரதீப்குமார் குடி பழக்கத்துக்கு அடிமையானார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூர் அருகே உள்ள பெரிய கமலாபட்டியை சேர்ந்தவர் மருதாச்சலம் (46). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினமும் 44 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
- பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தினம்தோறும் காலை, மாலை வேளைகளில் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.
மேட்டுப்பாளையம்,
பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருப்பூர் மாநகராட்சிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் துவங்கி அன்னூர், அவிநாசி, திருமுருகன் பூண்டி, திருப்பூர் மாநகராட்சி ஆகிய பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினமும் 44 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 6-வது வார்டு எஸ்.எம்.நகர் செல்லும் வழியில் உள்ள ெரயில்வே கேட் அருகே குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் குழாய்கள் பதிக்க 10 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை அந்த குழியை மூடாமல் விட்டு சென்றுள்ளனர்.
மேலும் எந்தவித பாதுகாப்பும் இன்றி அந்த குழி இருந்து வருகிறது. வன பத்திரகாளியம்மன் கோவில் செல்லும் பிரதான சாலையான இந்த சாலையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தினம்தோறும் காலை, மாலை வேளைகளில் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். குழியால் வாகனஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதாவது ஏற்படுவதற்கு முன்பு இந்த குழியை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.