என் மலர்
நீங்கள் தேடியது "covai"
- ரேஷன் கடையானது வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது.
- புதிதாக ரேஷன் கடை கட்டி தருமாறு ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த கரியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லப்பாளையத்தில் 700-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ரேஷன் கடையானது அங்கன்வாடி மையம் மற்றும் கிராம அலுவலக மையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.அந்த ரேஷன் கடை அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழைமை அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் இந்த ரேஷன் கடையானது வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. கடை மாற்றப்படும் இடமானது ஊர் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ளது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனை உடனடியாக சரி செய்ய ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டி தருமாறு ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- பள்ளி கல்லூரி பஸ் என 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றனர்.
- மழையின் காரணமாக பயணிகள் நிழற்குடை இடிந்து விழும் நிலையில் மோசமாக உள்ளது.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் வட்டம், காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரமானது கோவையில் இருந்து சக்தி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊரில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர்,பொதுமக்கள் என தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த சாைலயில் பயணிக்கின்றனர்.
மேலும் ஒரு நாளைக்கு கோவை-சக்தி ேராட்டில் தனியார் பஸ், அரசு பஸ் மற்றும் பள்ளி கல்லூரி பஸ் என சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கணேசபுரத்தில் அமைந்து உள்ள பயணியகள் நிழற்குடை குப்பை கிடங்காகவும், வாகனம் நிறுத்தும் இடமாகவும், குடிமகன்கள் உறங்கும் இடமாகவும் மாறி உள்ளது.
மேலும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பயணிகள் நிழற்குடை இடிந்து விழும் நிலையில் மோசமாக உள்ளது. இந்த நிழற்குடையானது 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய நிழற்குடை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உடனடியாக இந்த நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி புதிய நிழற்குடையை ஊராட்சி நிர்வாகம் கட்டித் தரவேண்டும். நிழற்குடையில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்றி, அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- மாணவர்களிடம் இயற்கையின் அவசியம் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேசினார்.
- இடைநிற்றல் கல்வியை போக்க உருவாக்கப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டம் மாபெரும் வெற்றியை அளித்துள்ளது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் குமரன்குன்று ஈஸ்வரியம்மாள் பத்திரப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் டபிள்யூ.டபிள்யூ. எப் இயற்கை தொண்டு நிறுவனம் சார்பில் மிஷன் இயற்கை என்ற சுற்று சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பு குறித்த கல்வியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி மாணவர்களிடம் இயற்கையின் அவசியம் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேசினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இடைநிற்றல் கல்வியை போக்க உருவாக்கப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டம் மாபெரும் வெற்றியை அளித்துள்ளது. மேலும் தமிழக முதல்-அமைச்சரின் கனவு வகுப்பறையில் மாணவர்கள் பாடம் கற்றால் மட்டும் போதாது சுற்றுச்சூழல் தொடர்பாகவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும். நீரியியல் மேலாண்மையில் உலகத்திற்கு தமிழகம் முன்னிலையாக உள்ளது.
ஏரி குளங்கள் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உண்டு. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி தமிழகத்தின் உயிர் ஆதாரமாக உள்ளது. இதனை பாதுகாக்க பள்ளியிலிருந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இதற்கு முன்னதாக இயற்கைக்கு தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் நீர் மேலாண்மை குறித்து மாணவர்களிடையே எடுத்துப் பேச வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் பிரஸ்குமார் (எ) சிவகுமார் நன்றி கூறினார்.
- கவுதமன் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
- ஓட்டல் ஊழியர் சாப்பாடு வாங்க வேண்டுமா என கேட்பதற்காக அறைக்கு சென்றார்.
கோவை,
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் முருகன். இவர மகன் கவுதமன் (வயது 18). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு வந்தார். பின்னர் அங்குள்ள லாட்ஜில் ஓய்வு எடுப்பதாக கூறி அறை எடுத்து தங்கினார். பின்னர் ஓட்டல் ஊழியர் சாப்பாடு வாங்க வேண்டுமா என கேட்பதற்காக அறைக்கு சென்றார். அப்போது அறைக்கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
சந்தேகம் அடைந்த அவர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அறைக்குள் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் தற்கொைல செய்து கொண்ட கல்லூ ரி மாணவர் கவுதமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அரசு சார்பில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
- தனியார் உடற்பயிற்சிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மக்களால் அங்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் வட்டம், குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாரணாபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தாய் திட்டம் 2 மூலமாக 2018-ம் ஆண்டு ரூ.30 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூட மற்றும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உடற்பயிற்சி கூடமானது நாரணாபுரம், கல்ராசிபாளையம், மாணிக்கம் பாளையம், குன்னத்தூர், குன்னத்தூர் புதூர், மற்றும் நான்தேவகவுண்டன் புதூர் உட்பட்ட கிராமங்களில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாலிபர்கள் மற்றும் முதியோர்களின் உடல் நல ஆரோகியத்திற்காக இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
தனியார் உடற்பயிற்சிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மக்களால் அங்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.
இதனால் அரசு சார்பில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடமானது பயன்படுத்தபடாமல் வீணாக உள்ளது.
இதன் சுற்று சுவற்றில் பொதுமக்கள் துணிகளை காயப்போட்டு வருகின்றனர். மேலும் உடற்பயிற்சி கூடத்தில் சுத்தம் செய்யப்படாமல் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் அங்குள்ள உபகரணங்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உடற்பயிற்சி கூடத்தை ஊராட்சி நிர்வாகம் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வருகிற 31-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு பாரதீய ஜனதா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
- கடை திறப்பவர்களை மிரட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
குனியமுத்தூர்,
கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகிற 31-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு பாரதீய ஜனதா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. போலீஸ் சார்பாக வியாபாரிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி போத்தனூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மேலும் அவர் பேசுகையில், கடை திறப்பவர்களை மிரட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வியாபாரிகளும் வழக்கம்போல் கடை திறக்கலாம். காவல்துறை சார்பாக அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்றார்.
மேலும் இக்கூட்டத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கதிர்வேல், சப் இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன், குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் மற்றும் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
- போதை பொருட்கள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- சீட் பெல்ட் அணியவும் வலியுறுத்துவேன்.
கோவை,
பொள்ளாச்சி அடுத்த கோடங்கிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குட்டிக்காவலர் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் மாணவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை உறுதி மொழியாக ஏற்று கொண்டனர்.
இத்திட்டத்தில் இணைந்துள்ள பள்ளி மாணவர்கள், பொதுமக்களிடையே போக்குவரத்தை ஒழுங்குப டுத்துதல், போக்குவரத்து விதிமு றைகளை பின்பற்றுதல் ஆகியன குறித்தும், போதை பொருட்கள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். இதில் தலைமை ஆசிரியர் தினகரன், ஆசிரியை சத்தியா முன்னிலையில் மாணவர்கள் உறுதிெமாழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் இன்று முதல் குட்டி காவலராக பொறுப்பேற்றுள்ளேன். பயணத்தின்போது சாலை விதிகளை கவனமாக கடைபிடிப்பேன். உறவினர்களையும், நண்பர்களையும் சாலை விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்துவேன். இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணியவும், 4 சக்கர வாகனத்தில் செல்லும் போது சீட் பெல்ட் அணியவும் வலியுறுத்துவேன். என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, பள்ளி படிப்பு முடிந்ததுமே விலை உயர்ந்த அதிக திறன் உள்ள இருசக்கர வாகனங்களை வாங்கி மாணவர்கள் ஒட்டுகின்றனர். மாணவர்களிடம் இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் மாணவ சமுதாயம் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க நல்வாய்ப்பாக அமையும் என்றனர்.
- ரெயில் மோதி அடையாளம் தெரியாத ஆண் இறந்தார்.
- கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கோவை,
கோவை ரெயில் நிலையத்தில் எப்போதும் போன்று பரபரப்பாக காணப்பட்டது.
அப்போது 5-வது பிளாட்பாரத்தில் 60 வயது முதியவர் ஒருவர் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.அவர் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த முதியவரை மீட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மயங்கி கிடந்த முதியவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை பீளமேடு அருகே உள்ள நாரயணசாமிலே அவுட் பகுதியில் சம்பவத்தன்று இரவு தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு 40 வயது மதிக்கத்தக்க ஆண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. அந்த ஆணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் காவி வேஷ்டி அணிந்து இருந்தார்.
மேலும் இடது கையில் எம்.என். என்று ஆங்கில எழுத்தில் பச்சை குத்தியிருந்தார். அவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? எந்த ஊரை சேர்ந்தவர், யார் அவர்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டாசு, துணி விற்பனை குறைவு என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
- ரூ.20 லட்சம் வரையிலான கார்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கோவை,
ெகாரோனா நோய்தொற்று பரவலுக்கு பின்னர் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கோவை மாவட்டத்தில் ஆடம்பர பொருட்கள் குறிப்பாக டி.விக்கள், கார்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தனியார் கார் விற்பனையாளர்கள் கூறியதாவது:-
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஆடம்பர சொகுசு கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.20 லட்சம் வரையிலான கார்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது தவிர சிறிய ரக கார்கள் விற்பனையில் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மொத்தத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு கார் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
தனியார் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை கடை உரிமையாளர்கள் கூறும்போது,
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக லட்டு, ஜிலேபி, பாதுஷா, மைசூர்பா உள்ளிட்ட இனிப்பு வகைகள் மிக அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. பால் இனிப்பு வகைகளுக்கு வழக்கமான வரவேற்பு காணப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இனிப்பு வகைகள் விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.
தனியார் எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையாளர்கள் கூறியதாவது:-
இந்த ஆண்டு ஆடம்பர வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக பெரிய 55, 43, 65, 75 இன்ச் எல்.இ.டி டிவிக்கள் மற்றும் ஆடம்பர டிவிக்கள் விற்பனை அதிகரித்தது. இவற்றின் விலை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரையாகும். இது தவிர ஆடம்பர மாடல் பிரிட்ஜ் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ1.2 லட்சம் வரை, வாஷிங் மெஷின் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை. சிறிய பொருட்களான மிக்சி, கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், கேஸ் அடுப்பு, விற்பனையும் நன்றாக இருந்தது. கடந்தாண்டு போலவே விற்பனை இருந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆனால் இந்த ஆண்டு பட்டாசு விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளதால். விற்பனை சராசரி அளவில் தான் இருந்ததாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இதேபோன்று விலை உயர்வு காரணமாக கடந்த ஆண்டு விற்பனையை விட 20 சதவீதம் குறைவாகவே ஜவுளிப்பொருட்கள் விற்பனையாகி உள்ளது.
மொபைல் போன்கள் தள்ளுபடியை வைத்தே விற்பனை நடைபெற்றது. இதனால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான மொபைல்போன்கள் விற்பனை அதிகளவில் இருந்தது.
- கோவையில் நாளை முழு அடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
- மறுபரிசிலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.
கோவை,
கோவையில் நாளை முழு அடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தை ஓத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-கோவை மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாளை (31-ந் தேதி) முழு அடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. தமிழக தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கோவை சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை என்.ஐ.ஏ. எடுக்க உடனடியாக உத்தரவிட்டு விசாரணையை முழுவீச்சில் தொடங்கி உள்ளது.
இந்தநிலையில் கோவை நகர வியாபா ரிகளும், தொழில் அதிபர்களும், தொழில் முனைவோர்களும் மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு கடையடை ப்பை மறுபரிசி லனை செய்யுமாறு கேட்டு க்கொண்டனர்.
அதன்படி மாநில தலைவர் அண்ணாமலை, என்னுடனும், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம். எல்.ஏ. மற்றும் முக்கிய தலை வர்களுடன் பேசினார்.அப்போது, கோவை நகர மக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அவரின் அறிவுறுத்தலை ஏற்று நாளை (31-ந் தேதி) நடைபெறுவதாக இருந்த கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக ்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- வாலிபருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது தெரியவந்தது.
கோவை,
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம் பெண். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கல்லூரி மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். அது நாளடைவில் காதலாக மாறியது.இருவரும் ஒருவருக்கு ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கல்லூரி மாணவி காதலித்து வந்த அந்த வாலிபருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது அவருக்கு தெரியவந்தது.இதனால் கல்லூரி மாணவி அந்த வாலிபருடன் பேசுவதை நிறுத்தினார். ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து வந்து கல்லூரி மாணவியிடம் பேசி வந்தார்.
மேலும் போனில் அழைத்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் கல்லூரி மாணவி அவரை கண்டித்து அந்த வாலிபரிடம் பழகுவதை தவிர்த்து வந்தார்.சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல கல்லூரிக்கு சென்றார்.
மாலை வகுப்பு முடிந்து வீடு திரும்புவதற்காக வெளியே வந்தார்.அப்போது வெளியே அந்த வாலிபர், கல்லூரி மாணவிக்காக காத்திருந்தார். அவர் மாணவி வருவதை பார்த்து அவரது அருகில் சென்று திடீரென அவரை தடுத்து நிறுத்தினார்.
பின்னர் மாணவிடம் என் பேசுவது இல்லை, செல்போனில் அழைத்தால் ஏன் எடுப்பது இல்லை என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இதுகுறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காணாமல் போனவரை போலீசார் மீட்டனர்.
- போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த மார்ச் மாதம் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர் ஆனால் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி கண்டு பிடித்தனர்.
பின்னர் போலீசார் அந்த சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் அந்த சிறுமி சம்பவத்தன்று வழக்கம் போல பள்ளிக்கு சென்று வீடு திரும்பினார்.
நேற்று வீட்டில் இருந்த சிறுமி யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து மீண்டும் வீட்டை விட்டு மாயமானார். சிறிது நேரம் கழித்து வீட்டில் நகை மற்றும் சிறுமி மாயமாகி இருந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அக்கம் பக்கத்தில் தேடி பார்த்து கிடைக்காததால் மீண்டும் சிறுமியின் தாயார் மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்த நகைகளுடன் மாயமான 10-ம் வகுப்பு மாணவியை தேடி வருகின்றனர்.